திருமணம் முடித்த கையோடு ரத்ததானம் வழங்கிய புரட்சி மணமக்கள்!

நெல்லையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் புதுமண தம்பதியினர் ரத்ததானம் வழங்கி அசத்தினர். இதன் மூலம் திருமணத்திற்கு வந்தவர்களிடையே ரத்ததானம் குறித்த விழிப்புணர்வையும் அவர்கள் ஊட்டி விட்டனர்.

நெல்லை டவுன் பகுதியை சார்ந்தவர் சங்கரன். இவரது மகன் சங்கரநாராயணன். இவருக்கும் நெல்லை பாலபாக்கியா நகர் முத்துராஜா மகள் அனுபாரதி ஆகிய இருவருக்கும் நெல்லை டவுன் பார்வதி சேஷ் மகாலில் நேற்று திருமணம் நடந்தது.

ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, திருமணம் முடிந்த அடுத்த 15 நிமிடங்களில் மணமகனும், மணமகளும் மணக்கோலத்தில் ஜோடியாக ரத்ததானம் செய்தனர். இதனைக் கண்டு விழாவுக்கு வந்திருந்த உறவினர்களும், நண்பர்களும் ஆர்வமாக ரத்த தானம் கொடுக்க முன்வந்தனர்.

இந்த விழாவில் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் ரத்ததானம் வழங்கினர்.இதனை கண்ட அப்பகுதி மக்கள் மணமக்களை வாழ்த்தினர். இந்த ரத்த தான முகாம் ஏற்பாடுகளை நெல்லை அரசு மருத்துவமனை டாக்டர் கமலா நேரு குழுவினர் செய்திருந்தன.
donateblood

Shortlink:

Posted by on February 4, 2014. Filed under சந்தியடி சங்கதிகள். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

One Response to திருமணம் முடித்த கையோடு ரத்ததானம் வழங்கிய புரட்சி மணமக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *