மூளையின் அறிவாற்றல் தன்மையை வளர்க்கின்றது இசை

இசை கற்பது எவ்வளவிற்கு மனித மூளை இயக்கத்திற்குப் பயன்படுகின்றது என்பதை வயது முதிர்ந்த நிலையில் அனேகமாகப் பலர் உணர்ந்திருக்கின்றார்கள். குழந்தைப்பருவ இசைப் பாடங்கள் பல சகாத்தங்களின் பின்பு கூட மூளையில் ஏற்படுகின்ற பல்வேறு சிக்கல்களிலிருந்து பாதுகாப்பளிக்கின்றன என பல ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். சிறுவயதினில் இசை பயின்ற ஒருவர் அதைப் பின்பு தொடாரது விட்டாலும்கூட அதன் பயன்பாடு கிடைக்கின்றது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் வாத்தியக் கருவிகளை இளம் வயதில் இயக்குபவர்களுக்கு அவர்கள் வளர்ந்தவர்களாகிய பின்பு அவற்றை இயக்காவிடினும் அவர்களுக்குச் சிறந்த ஞாபக சக்தியாற்றல் இருப்பதாகவும் தெரியவருகின்றது. இசைப் பயிற்சியானது மூளையின் அறிவாற்றல் திறன் வளர்ச்சியடைவதற்குத் துணை புரிகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலிநொயிஸ் எனுமிடத்திலுள்ள நரம்பியல் நிபுணர்கள் இந்த விடையம் பற்றி பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.
தற்போது பலர் மூளை சம்பந்தப்பட்ட பல்வேறு வியாதிகளுக்கு ஆளாகின்ற நிலை காணப்படுவதைத் தொடர்ந்து இத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இசைப்பயிற்சியானது சத்தங்களைப் பிரித்தறியும் ஆற்றலை வளர்ப்பது மட்டுமல்ல அது தொடர்ந்து நீடிக்கவும் செய்கின்றது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் அது மூளையின் பல்வேறு பாகங்களையும் செயல்பட வைப்பதற்கு இசையிலும் பார்க்க திறமையான பொருள் இதுவரையில் எதுவுமில்லையென விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.

– See more at: http://www.canadamirror.com/canada/20382.html#sthash.qLcEdL5L.dpufgirl-playing-piano-293x150

Shortlink:

Posted by on January 10, 2014. Filed under அறிவியல். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *