அவதார் சம்பவம் வேறெங்கும் இல்லை இந்தியாவில் தான்!!!

“ஜேம்ஸ் கமரூன்” எடுத்து உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்ற “அவதார்” படம் போல ஒரு சம்பவம் இங்கே நம் இந்தியாவில்தான் நடக்கிறது என்பது ஆச்சர்யமான உண்மை.

காட்டில் கிடைக்கும் ஒரு உலோகத்ததுக்காக ஒரு பழங்குடி மக்களை துன்புறுத்தி, அவர்கள் காலம் காலமாக வாழ்ந்த இடத்தை விட்டு அடித்து விரட்டி, அந்த உலோகத்தை கைப்பற்ற நடக்கும் போராட்டமே இந்த படத்தின் கதை. …avatar

இதே போல் “ஒரிஸ்ஸா” மாநிலத்தில் “நியம்கிரி” என்ற மலையில் அலுமினிய தாதுவான “பாக்ஸ்சைட்” நிரந்த மலை ஒன்று இருப்பதாக கண்டறிந்துள்ளனர். ஒரு தனி மலையில் உள்ள பாறைகள் அனைத்திலும் இந்த தாதுக்கள் நிரந்து உள்ளதென இங்கிலாந்தை சேர்ந்த ஒரு நிறுவனம் இதை எடுக்க அலையை அலைந்துகொண்டுள்ளது.

ஆனால் இந்த மலையில் பூர்வீகமாக வசிக்கும் “டான்க்ரியா க்ஹோந்த்” இனத்தை செந்த பழங்குடி மக்கள் அந்த மலையை தங்கள் குல தெய்வமாக வழிப்பட்டு வருகிறார்கள். காலம் காலமாக தங்கள் தெய்வமாக வழிபடும் இந்த மலை தாதுக்காக வெட்டி வீழ்த்தப்படுவதை அவர்கள் விரும்பவில்லை.

ஆனால் அந்த இங்கிலாந்து கம்பனியோ அந்த மலையை கைப்பற்றுவதற்க்காக இந்த மக்கள் வசிக்கும் குடிசைகள் மீது இயந்திரங்கள் கொண்டு இடித்து அவர்களை அந்த இடத்தை விட்டு போகுமாறு துன்புறுத்தப்படுகிறார்கள். இதை பற்றி ஒரு சமூக நல அமைப்பு ஒன்று ஒரு குறும்படமாக எடுத்து வெளியிட்டுள்ளது.

http://www.youtube.com/watch?v=R4tuTFZ3wXQ

நமது அரசாங்கமோ இதை பற்றி வாய் திறப்பதாக தெரியவில்லை , ஊடங்கங்களும் இதை பெரிதுபடுத்த முன் வரவில்லை. இதை பற்றி “டைம்ஸ்” இணையதளம் ஒரு விரிவான கட்டுரை எழுதி உள்ளது அந்த கட்டுரையை படிக்க இந்த சுட்டியை அழுத்தவும்.

http://content.time.com/time/world/article/0,8599,1964063,00.html

Shortlink:

Posted by on December 12, 2013. Filed under சிந்திக்க-சில-வரிகள், தொழில் நுட்பம். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *