ஐயப்பன் மண்டல கால ஆரம்பம்

ஐயப்பன் மண்டல கால ஆரம்பம்
சபரிமலை
சபரிமலை கேரளாவிலுள்ள மேற்கு மலைத்தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். மஹிஷி என்ற பெயர்கொண்ட அசுரபலம் கொண்ட அரக்கியை கொன்றபிறகு சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என வழங்கப்படுகிறது. பதினெட்டு மலைகளுக்கு இடையே சுவாமி ஐயப்பனின் கோவில் இருக்கிறது. இந்தக் கோவில் ஒரு மலையின் உச்சியில் உள்ளது. மேலும் சராசரியான கடல்நீர் மட்டத்துடன்ஒப்பிடும் போது, 914 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது. மேலும் மலைகள் மற்றும் காடுகளால் சூழ்ந்துள்ளது. சபரிமலையை சூழ்ந்துள்ள ஒவ்வொரு மலையிலும் கோவில்கள் காணப்படுகின்றன. நிலக்கல், காளகெட்டி, மற்றும் கரிமலை போன்ற இடங்களில் இன்றும் நாம் நடைமுறைச்சார்ந்த மற்றும் குறைபடாத கோவில்களை காணலாம். இதர மலைகளில் பழங்காலத்து கோவில்களின் எஞ்சிய பிழைத்துக்கொண்ட பாகங்களை காணலாம். ஆண்டுதோறும் சுமார் 45 முதல் 50 மில்லியன் பக்தர்கள் சபரிமலைக்கு புனிதப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர், உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் மிகையான அளவில் புனிதப்பயணம் மேற்கொள்ளப்படும் புண்ணியத்தலம் சபரிமலையே ஆகும். சபரிமலைக்குப் புனிதப்பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பக்தனும், சாதி, மத, இன, தகுதி அல்லது சமூக அந்தஸ்து போன்ற வேறுபாடுகளை பொருட்படுத்தாமல், ஒரே மனதுடன், ஒரே வேட்கையுடனும், ஒரே மந்திரத்தை உட்கொண்டும், அதாவது இறைவனான சுவாமி ஐயப்பனின் திருவடிகளை அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் புனிதப்பயணம் மேற்கொள்ளும் பக்தர்களின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இருந்தாலும் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சமூக ரீதியாக இப்பயணத்தை மேற்கொள்வதில்லை. மேலும் கோவிலுக்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. சுவாமி ஐயப்பனை சார்ந்த வரலாற்றுக் கதைகளில் வீட்டு விலக்குக்குரிய பெண்கள் இங்கு வருவதை தடை செய்துள்ளபடியாலும் மேலும் இதர பல காரணங்களாலும், பொதுவாக பெண்கள் இந்தக் கோவிலுக்கு வருகை புரிவதில்லை. இதற்கான முக்கிய காரணம் சுவாமி ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்ற ஐதீகமே. மண்டல பூசை என அறிவிக்கப்பட்ட நாட்களிலும் , மகர விளக்கு மற்றும் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் மட்டும் கோவில் பிரார்த்தனை செய்வதற்காக திறந்து வைக்கப்படுகிறது. புனிதப்பயணம் மேற்கொள்வதற்கு முதலில் பக்தர்கள் 41 நாட்கள் கொண்ட விரதத்தை பக்தர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும். திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம் (TDB) சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலை சுமார் ரூபாய் 30 கோடியளவில் ($7 மில்லியன்) காப்பீடு செய்து கொண்டுள்ளது. மேலும் இந்த இடத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கு விபத்துகளில் இருந்து இலவசமாகக் காப்பீடு அளிக்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. நீலக்கல்லில் இருந்து மலையேற்றப் பாதையில் சன்னிதானம் வரை சென்றடையும் 18 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பாதையில் வரும் பக்தர்களில் விபத்துக்குள்ளாகி அடிபட்டோர் மற்றும் இறந்தவர்களுக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை இந்த காப்பீட்டு திட்டத்தின் மூலமாக வழங்க இயலும். சபரிமலைப் பயணம் காரணமாக கேரள அரசாங்கத்திற்கு நல்ல வருமானம் கிடைப்பதோடு, கேரளத்தின் பொருளாதாரத்திற்கு சுமார் 10,000 கோடி ரூபாய் வரை வருமானத்தை பங்களித்து வருகிறது.சபரிமலை கோவிலில் அரவணை மற்றும் அப்பம் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. இவை அரிசி, நெய், சர்க்கரை போன்ற பொருட்களால் உருவாக்கப்படுகின்றன. சபரிமலையில் இந்தப் பிரசாதத்தை செய்வதற்கான அரிசி செட்டிக்குளங்கரை தேவி கோவிலில் இருந்து பெறப்படுகிறது. திருவாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் கீழ் உள்ள கோவில்களில் இக்கோவில் இரண்டாவது மிகப்பெரிய கோவிலாகும். இந்தக்கோவில் மாவேலிக்கரா என்ற இடத்தில் உள்ளது.இரவில் கோவிலின் நடை சார்த்தப்படுவதற்கு முன்பு ஹரிவராசனம் என்ற பாடல் இசைக்கப்படுகிறது. தற்காலத்தில் சபரிமலையில் இறைவன் உறங்கச்செல்வதற்கு முன் இசைக்கப்படும் தாலாட்டுப் பாட்டு , ஹரிவராசனம் என்ற பாடல், ஸ்ரீ கம்பக்குடி குளத்தூர் ஸ்ரீனிவாச அய்யர் இயற்றி இசை அமைத்ததாகும். ஸ்ரீனிவாச அய்யர், கோவிலில், சுவாமி அய்யப்பரின் சந்நிதியில் நின்றுகொண்டு, அத்தாழ பூசைக்குப் பிறகு, இந்தப் பாடலை பாடி வந்தார். சுவாமி விமோசானனந்தா அவர்களின் முயற்சியால், கோவிலின் தந்திரி மற்றும் மேல்சாந்தி, இப்பாடலை ஒரு தாலாட்டுப்பாடலாக ஏற்றுக்கொண்டனர். இந்தப் பாடல் 352 எழுத்துக்கள், 108 சொற்கள் மற்றும் 32 வரிகள் கொண்டதாகும்.அநேக புகழ் பெற்ற பாடகர்களால் பாடப்பெற்ற இந்தப்பாடலின் பதிப்புகள் இருந்தாலும், கோவில் நடையில் கே. ஜே. யேசுதாஸ் பாடிய பாடலே ஒலிபரப்பப்படுகின்றது.

ayyapa8

ayyapa7

ayyapa6

 

 

ayappa1

ayaap2 ayappa1 ayyapa3 ayyapa4a ayyapa5

 Shortlink:

Posted by on November 16, 2013. Filed under இந்துசமயம். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *