ஸ்ரீ ஐயப்பன்

ஸ்ரீ ஐயப்பன்ayappan
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்” என்பது வள்ளுவரின் வாக்கு. ஸ்ரீ ஐயப்பன் அவதாரமே இந்த வாக்கை உறுதிப்படுத்தி செயற்படுவதற்காகவே தான் என்ற உண்மை எம்மை தெளிவுபடுத்தி நிற்கின்றது. கண்கண்ட தெய்வமாக ஸ்ரீ ஐயப்பன் மிளிர்கிறார். அவரது அவதார நோக்கங்களைப் பற்றி நினைவு கூரப்புகும் போது வியப்பும் விந்தையும் அற்புதமும் அதிசயமும் அதே நேரத்தில் ஆனந்தமும் அகமகிழ்வும் தானே ஏற்படுகிறது. தத்துவங்கள் பொதிந்த அவரது அவதாரம் செம்மைமிகுந்த தெளிவான நல் வாழ்க்கைக்கு எம்மை இட்டுச் செல்கிறது.
‘ஐ’ என்பது கடவுள் எனும் பொருளைத் தருகிறது. அப்பன் என்பதும் சேர்ந்து ‘ஐயப்பன்’ எனப்படுகிறது. கடவுள் நிலையினின்றும் தந்தையாக இருந்தும் எம்மைக் காப்பவன் என்று பொருள் படுகிறது.
ஏழை – பணக்காரன், உயர்ந்தோன் – தாழ்ந்தோன் மற்றும் எவ்வித வேறுபாடும் மனிதனைப் பிரித்து ஆளக் கூடாது என்பதற்காகவெனவே எடுத்துக் கொண்ட அவதாரமே ஸ்ரீ ஐயப்ப அவதாரம்.
தன்னடக்கமும் சுயகட்டுப்பாடும், நோய்நொடி என்று வைத்தியரை நாடுவோர் ஓர் அரிய பெரிய உண்மையை உணர வைக்கப்படுகிறார்கள். மது அருந்துதல், புகைப்பிடித்தல் புலால் உண்ணுதல் போன்றவற்றால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விளக்கம் வைத்தியரால் எடுத்தியம்பியபோதும் அதை ஏற்றுக் கொள்ள இந்த மனித மனம் மறுப்பதேனோ?
ஐயப்ப சுவாமிக்கு மாலையிட்டு விரதமேற்போரைக் கண்டு மருத்துவர்கள் பலரும் மகிழ்ச்சி ஆரவாரம் கொள்வதைக் காணக் கூடியதாக இருக்கிறது.
அடக்கம்
அடக்கம் ‘அமரருள் உயர்க்கும்’ என்பதற்கொப்ப அடக்கம் என்பது அனைத்து மனிதனுக்குமே மிக மிக அவசியமானது. அடக்கத்துடன் வாழ்பவர் என்றும் உயர்ந்த நிலைக்கு எடுத்து செல்லப்படுவார் என்பது திண்ணமே. தன்னை தானே அடக்கி ஆளும் சக்தி வந்து விட்டால் அனைத்து தீய பழக்க வழக்கங்களும் தானே பறந்து விடும். காலணிகள் அணிவது கூடாது என்பதன் கருத்து, “பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யக் கூடாது” என்பதன் பொருட்டே காலில் காலணிகள் அணிதல் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.
காலையிலும் மாலையிலும் குளிர்ந்த நீரில் குளித்தல் உடல் தூய்மையோடு இறைவனை வழிபட வேண்டும் என்பதன் நோக்கம் இதன் மூலம் உடல் நலமும் மலநலமும் செம்மையுறும். ஆறு வாரங்கள் ஒழுக்க நெறியோடு ஒரு மனிதன் வாழ்கின்ற போது தொடர்ந்து செயல்படுத்தி வாழ்வில் முன்னேறுவதற்கு அடித்தளமாக அமையப் பெறுகிறது.
சீர்மிகு சீருடை
சீருடை பள்ளி மாணவர்களுக்கு வழங்கி அழகுபார்க்கிறோம் – இதன் காரணம்:- சாதி, மத மொழி, எழை பணக்காரன் என்ற எந்த வேறுபாடுகளுமின்றி சமத்துவத்தை ஏற்படுத்துமுகமாகவே தான். மானத்தைக் காக்க மட்டும் ஆடையில்லை. ஒழுங்கைக் கடைப்பிடித்து முன் மாதிரியாகத் திகழ சீருடை அவசியமாகிறது. இதன் அடிப்படையில் தான் ஸ்ரீ ஐயப்ப பக்தர்களுக்கும் கருமை நிறம் அல்லது காவிச் சீருடை அளிக்கப்படுகிறது. ஐயப்பசாமி பிரமச்சாரிய நோன்பில் இருப்பவர்.
பக்தர்களும் அவர் பொருட்டு பிரமச்சாரியத்தைக் கடைப்பிடித்தாக வேண்டும். ஆகவே சீருடையைக் கண்டதுமே வீட்டு விலக்கு ஆன பெண்கள் சுத்தமில்லாதவர் என அனைவரும் விலகிச் செல்வர். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற மொழிக்கு ஏற்ப ஒரே சிந்தையோடு ஒழுக்க நெறியோடு வாழ சீருடை அடையாளப்படுத்துகிறது மனித நேய மாண்பு பெற்றுப் பெருவாழ்வு வாழ்க! என்று வாழ்த்துகிறார்கள் சுற்றியுள்ள ஏனையோரையும் எண்ணி வாழ்த்தப்படுகிறது. இந்த வகையில் அனைவரது நலம் நோக்கி அன்னதானம் செய்யப்படுகிறது.
“மண்டினி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தேன் உயிர்கொடுத்தாரோ”
மணிமேகலைப் காப்பிய இந்த நன்நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டே எழுதப் பெற்றுள்ளது. ஸ்ரீ ஐயப்ப பக்தர்களும் அதே அறக் கருத்தினை செய்கின்றபோது எவ்வளவு மகிழ்ச்சியைத் தருகிறது. இரு முடித்தத்துவம். அனைவருக்குமே வாழ்க்கை சுமையானதே. அவரவர் சுமைகளை அவரவரே சுமக்க வேண்டும் என்ற முறையை பக்தர்கள் கடைப்பிடிக்கிறார்கள்.
அவ்வாறு சுமந்து செல்லும் போது “துன்பம் போதும்” “இன்பம் போதும்” என்ற நிலைக்கு வருகிறார்கள். இதனால் தனக்கு நேர்ந்த துன்பம் போன்றே மற்றவர்களுக்கும் இருக்கும் என்று உணர்ந்து கொள்கிறார்கள். தம்மால் பிற உயிர்களுக்குத் துன்பம் நேரக் கூடாது என்ற உறுதிக்கும் வர முடிகிறது.
உயிர் மதிப்பு தத்துவம்
”நல்லாரைக் காண்பதுவும் நன்றே
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே” என்பதற்கொப்ப ஐயப்பனுக்கு மாலையிட்டு விரதமிருப்போர் ஒருவரை ஒருவர் காணும் போது தனக்குக் குருவாகவும் தாயாகவும், தந்தையாகவும் வழிநடத்தும் “குருசாமி” என்பவரையும் மதித்தும், போற்றி நல்வார்த்தைகளைப் பேசி மகிழ்வர். மனிதனை மனிதன் மதிக்கும் தன்மையும் பிறர் மீதும் அன்பு செலுத்தும் பாங்கும் இதன் மூலம் வளர்கிறது.
பணிவுடன் வாழ்தல் குறித்த செயற்பாட்டையும் பெற முடிகிறது. ஒவ்வொரு முறையும் வயது வழக்கம் எல்லாவற்றையும் தாண்டி “சாமி சாமி” என்று மாறி மாறிப் பேசும்போது ,ஆணவம் அழிகின்றது.
நல்ல உள்ளத்தில் நல்ல எண்ணங்களே உதயமாகிறது நற்செயல்களே அவர்களது நோக்கமாகும் என்பது உதயமாகிறது

Shortlink:

Posted by on November 16, 2013. Filed under இந்துசமயம். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *