கின்னஸ் சாதனை: நீர்கொழும்பில் கோலாகலமான திருமண வைபவம்

கின்னஸ் உலக சாதனை பதிவேட்டில் இடம்பிடிப்பதற்கான ஏற்பாடுகளுடன் கோலாகலமான திருமண வைபவ மொன்று இன்று வெள்ளிக்கிழமை நீர்கொழும்பு அவென்ரா ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இதற்கான முயற்சிகளை பிரபல அழகுக்கலை நிபுணரான சம்பி சிறிவர்தன முன்னெடுத்துள்ளார்.

அவரது மணாளியன்கே மஹகெதர (மணப்பெண்ணின் தாய் வீடு) என்னும் அழகுக் கலை நிலையம் ஆரம்பிக்கப்பட்டு 15 வருட பூர்த்தியை முன்னிட்டு இலங்கைக்கு புகழும் கீர்த்தியும் பெற்றுக்கொடுக்கும் முகமாக அவர் இந்த சாதனையில் இறங்கியுள்ளார்.

இத்திருமணத்தில் சிறப்பம்சமாக உலகிலேயே முதல் தடவையாக ஆகக்கூடிய மணப் பெண் தோழிகளும், தோழர்களும் இதில் இடம்பிடிக்கவுள்ளனர்.

இத்திருமண வைபவத்திற்கு முதற் பெண்மணியும் ஜனாதிபதியின் பாரியா ருமான ஷிரந்தி ராஜபக்ச பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

ஆகக்கூடியதாக தாய்லாந்திலேயே 96 மணப் பெண் தோழிகள் கலந்து கொண்டு உலக சாதனை படைத்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக சம்பி சிறிவர்தனவே ஆகக்கூடிய மணப் பெண் தோழிகளே தானே அலங்கரித்து கின்னஸ் பதிவேட்டில் இடம்பிடிக்கவுள்ளார்.

சம்பி சிறிவர்தனவின் அழகுக் கலை நிலையத்தின் கிளைகள் நீர்கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட பல இடங்களில் இயங்குகின்றன.

kinners-wedding1 kinners-wedding1

Shortlink:

Posted by on November 16, 2013. Filed under சந்தியடி சங்கதிகள். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *