மனிதனாக அவர்களை பார்…

others531
உடல் நாற்றம் மறைக்க
உள்ள வாசனையெல்லாம்
உடல் முழுக்க பூசி -உன்
உண்மை அழகை கெடுக்கும்
சுத்த வாங்களே….!!!
உன் வீட்டு கழிவு கிடங்கு
உடைந்து விட்டால் -உன்
மூக்கை நீயே பொற்றி…
வாந்தியும் எடுக்கிறாய்…!!!
கழிவு அகற்றும் தொழிலாளியை
சற்று நினைத்துப்பார் -உன் கழிவை
தன் கழிவாக தன்னுடல் மேல்
சந்தனம் போல் பூசிவிட்டு வேலைசெய்யும்
சந்திர ஒளியனைபார்….!!!
மனிதா உன்னிடம் நான் கேட்பது…?
அவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை
வார்த்தையால் -கொடு…
மனிதனாக அவர்களை பார்
அடிமை தொழில் செய்யும் அடிமையாக
பார்க்காதே…!!!
செய்த வேலைக்கு ஊதியத்தை
மனமகிழ கொடு…!!!
முற்பிறப்பில் அவர்கள் செய்தபாவம்
என்று -பொருத்தமற்ற ஆன்மீகத்தை
பேசும் ஞானவான்களே …?
அவர்கள் அழிவை உடலில் சுமக்கிறார்கள்
நீ மனதில் சுமர்ந்து கொண்டே இருக்கிறாய்…!!!

Shortlink:

Posted by on September 23, 2013. Filed under கவிதைகள், சிந்திக்க சில வரிகள் !!!. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *