ஆறுதல்

யார்க்கு யார் ஆறுதல்
எவைக்கு எவை ஆறுதல்
அழும் குழந்தைக்கு
அம்மாவின் அணைப்பு ஆறுதல்
வளரும் பிள்ளைக்கோ
அப்பாவின் துணை ஆறுதல்
கல்விக்கூடம் செல்லும் மாணவர்க்கோ
கற்பிக்கும் ஆசிரியர் ஆறுதல்
உழைக்கும் மனிதர்க்கு
உயர்வு ஆறுதல் …..
நோயாளிக்கு வைத்தியர் ஆறுதல்
நொடிந்து போன மனிதர்க்கோ
அந்த இறைவன் ஆறுதல்
பேச மொழிகளுக்கு
பேசும் விழிகள் ஆறுதல்
நடிக்கும் மனிதர்க்கு
அரங்கம் ஆறுதல் …..
எழுதாளனுக்கோ
அவன் சிந்தனைகள் ஆறுதல்
ஆர்ப்பரித்து வரும் அலைக்கு
கரையை கண்டு ஆரத்தழுவல் ஆறுதல்
பூமிக்கு சூரியன் ஆறுதல்
இரவுக்கு நிலவு ஆறுதல்
தமிழர் எமக்கு யார் ஆறுதல்
ஓடி ஓடி களைத்துவிட்டோம்
உயிர்கள் பல்லாயிரம் கொடுத்தும்விட்டோம்
எம் தேசத்தில் எண்ணை வளமும் இல்லையாம்
ஆறுதல் தர ஏகாதிபத்தியமும்
அன்று மறுத்ததாம்
கண் துடைப்பு நாடகங்கள்
ஐ.நா. வில் அரங்கேறுகிறதாம்
ஆறுதல் எமக்கு யாருமில்லை
தமிழா நீ தமிழனாய் வாழ்
உன் தேசத்திற்கு என்றும் நீ தான் ஆறுதல்…!
love502

Shortlink:

Posted by on September 21, 2013. Filed under கவிதைகள். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *