கண்ட சித்தி’

 

கண்ட சித்தி’
கண்ட சித்தி’ என்பது, ஒருவர் மனதில் எண்ணியதை, மற்றவர் தம் மனதால் கண்டுணர்ந்துப் பாடுவதாகும். கண்ட சித்தி’ என்பதை, “”கண்ட சுத்தி’ என்றும் கூறுவர். அபிதான சிந்தாமணியில், கவி வீரராகவ முதலியார், கண்ட சித்தி’ பாடுவதில் வல்லவர் என்றும், ஈழத்தில் பாடி, தம் திறமையைக் காட்டிப் பரிசு பெற்றார் என்றும் குறிப்பு உள்ளது. பிறவியிலேயே கண் பார்வை இல்லாதவராக இருந்தும், இறையருளால் கவிபாடும் ஆற்றல் பெற்றுத் திகழ்ந்தவர் அவர். அவர் பாடிப் பரிசுபெறும் பொருட்டு ஈழ நாட்டுக்கு ஒருமுறை சென்றார். அப்போது அந்நாட்டை ஆண்ட மன்னர் ஒருநாள், சோலை சென்று உலாவியபோது கிளிகள் சில, ஒரு மரத்தில் இருந்த கூட்டில் இருந்து வெளியே வருவதும், பறந்து செல்லாமல் மீண்டும் கூட்டுக்குள் போவதுமாக இருப்பதைக்கண்டு காரணம் புரியாமல் மயங்கினார். கண்ட சுத்தியால், தன் மனதில் உள்ளதைப் புலப்படுத்துமாறு தன் அவைக்களப் புலவர்களிடம் கூறினார். அரசன் உள்ளத்தில் உள்ளதைக் கண்டுணர்ந்து பாடமுடியாத அவைக்களப் புலவர்கள், கண்ட சித்தி’ பாடுவதில் கவி வீரராகவ முதலியார் வல்லவர் என்று கூறி, அவரை மன்னரிடம் அழைத்துச்… சென்றனர். அங்கு சென்ற கவி வீரராகவர், “வடவைக் கனலை” எனத் தொடங்கும் பாடலைப் பாடினார். அதில்,
“அடவிக் கதலிப் பசுங்குருத்தை
நஞ்சுக் குழல்என்று அஞ்சியஞ்சி÷kili
அஞ்சொற் கிளிகள் பஞ்சரம்விட்டு
அகலா நிற்கும் அகளங்கா!”
என்ற வரிகளால், அரசர் மனதிலுள்ள சந்தேகத்தைத் தெளிவுபடுத்தினார். கிளிகள் மரத்தில் கூடுகட்டி வாழ்கின்றன. அம் மரத்தின் அருகே வாழை மரம் ஒன்று உள்ளது. அவ் வாழை மரத்தின் பசுங்குருத்து, கிளிகள் இருந்த கூட்டின் பக்கத்தே அசைந்து கொண்டு இருந்தது. கூட்டில் இருந்த கிளிகளுக்கு, அப் பசுங்குருத்து பாம்பாகத் தெரிந்தது. அதனால் கூட்டை விட்டு வெளியே வந்த கிளிகள், அஞ்சிக் கூட்டுக்குள் சென்றன. பாம்பு போயிருக்கும் என்று நினைத்து, மீண்டும் கூட்டை விட்டு வெளியே வந்த கிளிகள், மறுபடியும் பசுங் குருத்தைப் பாம்பாக நினைத்து மயங்கி,பாம்பு போகவில்லை என்று எண்ணி மீண்டும் கூட்டுக்குள் சென்றனஎன பொருள் பட பாடினார். கவி வீரராகவரின் பாடலைக் கேட்டு மனம் மகிழ்ந்த மன்னர் ஏராளமான பரிசுகளைக் கவிஞருக்கு வழங்கினார். இதனால் கவி வீரராகவரின் புகழ் திக்கெட்டும் பரவியது.

Shortlink:

Posted by on May 2, 2013. Filed under கட்டுரை. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *