பொறுமை இழந்தால் விபரீதம் நேரும்

பொறுமை இழந்தால் விபரீதம் நேரும்

ammai
       ஒரு குளத்தில் ஆமை ஒன்று வசித்து வந்தது. அதே குளத்தில் இரண்டு அன்னங்களும் இருந்தன. இந்த மூன்றும் நல்ல நண்பர்களாக இருந்தன. இவர்களின் நட்பு பல ஆண்டுகள் நீடித்தன.நாட்டிலே மழை இல்லை. அதனால் குளம், குட்டைகள் வற்றத் தொடங்கின. எல்லாரும் மழைக்காக ஏங்கத் தொடங்கினர். இந்த மூன்று நண்பர்களும் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். வானத்தில் மேகம் சூழாதா என்று கழுத்து வலிக்க அன்னாந்து பார்த்ததுதான் மிச்சம்.ஒருநாள் அன்னங்கள் இரண்டும் தங்களுக்குள் விவாதம் செய்தன. அதில் ஓர் அன்னம் கூறியது:”இந்தக் குளம் வற்றிவிடும் போல் இருக்கிறது. நம்மால் நீரில்லாத குளத்தில் வசிக்க முடியாது. வேறு குளத்தையோ, குட்டையையோ தேடிப்போக வேண்டியதுதான்.’அதற்கு மற்றொரு அன்னம், “ஆமையும் நாமும் நண்பர்களாக வாழ்ந்தோம். அதன் கருத்து என்னவென்று கேட்போம்’ என்றது. ஆமையிடம் சென்றன. வயதில் மூத்த அன்னம் தங்களது திட்டத்தைப் பற்றி எடுத்துக் கூறியது. எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட ஆமைக்கு வருத்தம் ஏற்பட்டது. “நான் தண்ணீர் இருந்தால்தான் வாழ முடியும்.நீங்கள் என்…னை விட்டுப் போய்விட்டால் என் கதி என்ன? சீக்கிரமே இறந்து விடுவேன்… எனக்கும் சேர்த்து ஒரு வழி சொல்லுங்கள்’ என்றது ஆமை.மூன்றும் யோசித்தன. ஒரு வழியும் தோன்றவில்லை. நாட்கள் பல சென்றன. ஒருநாள் ஆமையே ஒரு வழியைக் கூறியது.”நான் ஒரு கழியின் மையப் பகுதியைக் கவ்விப் பிடித்துக் கொள்ளுகிறேன். நீங்கள் அந்தக் கழியின் இருமுனைகளையும் பிடித்துக் கொண்டு பறந்தால் வேறு குளத்துக்குப் போகலாம்’ என்றது ஆமை.”இது நல்ல யோசனை… ஆனால் நீ எந்தக் காரணத்தைக் கொண்டும் வாயைத் திறந்துவிடாதே… வாயைத் திறந்தால் நீ கீழே விழவேண்டியதுதான்’ என்றது அன்னம்.அதற்கு ஆமை, “நான் வாயைத் திறக்கவே மாட்டேன்’ என்று உறுதி கூறியது. திட்டத்தின்படியே ஆமை ஒரு கழியின் மையப்பகுதியை கடித்தபடி இருக்க, அன்னப் பறவைகள் இரண்டும் அதன் இருமுனைகளையும் பிடித்தபடி பறந்து சென்றன. இந்த வேடிக்கையைப் பார்த்த மக்கள் சிரித்தார்கள். ஆமைக்குக் கோபம் வந்தது. வெகுநேரமாகக் கழியைக் கவ்விப் பிடித்திருந்ததால் சிரமப்பட்டுக் கொண்டிருந்த ஆமை, பொறுமை இழந்து போனதால் அதன் கோபம் மேலும் அதிகரித்தது. அதனால் ஆத்திரமடைந்தது. “அடுத்தவரைப் பார்த்துக் கேலி செய்ய வேண்டாம்’ என்று வாயைத் திறந்து கூறியது.அடுத்தகணம், பாவம், அந்த ஆமை தடாலெனக் கீழே விழுந்தது.இதனால் அன்னங்கள் இரண்டும் வருத்தத்தோடு வேறு குளத்துக்குச் சென்றன.

Shortlink:

Posted by on April 9, 2013. Filed under சிறுவர் முற்றம். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *