நியு யார்க் நகரில் உள்ள புரூக்ளின் ப்ரிட்ஜ் கட்டிய ஜான் ரூப்ளிங் என்ற இஞ்சினியரின் வாழ்கையில் நடந்த உண்மை சம்பவம்.

நியு யார்க் நகரில் உள்ள புரூக்ளின் ப்ரிட்ஜ் கட்டிய ஜான் ரூப்ளிங் என்ற இஞ்சினியரின் வாழ்கையில் நடந்த உண்மை சம்பவம்.

1883 ஆம் ஆண்டு ஜான் ரூப்ளிங் என்ற இஞ்சினியர் கிழக்கு நதியின் மேல் மிக நீளமான தொங்கு பாலம் கட்ட முடிவெடுத்தார்.பாலம் கட்டுவதில் கைத்தேர்ந்த பல இஞ்சினியர்கள் இது முடியாத காரியம் இதை கை விடுவதுதான் சரியான முடிவு என்றனர்.இது போன்று தொங்குபாலம் இதற்கு முன் யாரும் கட்டியது இல்லை இனி கட்டவும் முடியாது என்றனர்.

ரூப்ளிங் தன்னால் இதை கண்டிப்பாக கட்ட முடியும் என்று நம்பினார்.முழு நேரமும் இதே சிந்தனையுடன் இருந்தார்.இதை யாரிடமாவது சொல்லி புரிய வைக்க வேண்டும் என்று விரும்பினார்.பிறகு தன் மகனுடன் இதைப்பற்றி சொல்ல நினைத்தார்.அவருடைய மகன் வாஷிங்டன் ஒரு இளம் வயது இஞ்சினியர்.brige

தந்தையும் மகனும் இணைந்து எப்படி இந்த பாலத்தை கட்டுவது என்று ஆராய்ச்சி பண்ண ஆரம்பித்தார்கள் .என்னவெல்லாம் இடர்கள் வரும் எப்படி எல்லாம் அதை எதிர்த்து செயல் படுத்த வேண்டும் அன்று ஆலோசித்தார்கள்.

இரண்டு பேரும் சேர்ந்து பாலம் கட்டுவதற்கான வேலையை ஆரம்பித்தார்கள்.சில மாதங்கள் வேலை நன்றாக நடந்தது,பிறகு ஒரு நாள் வேலை செய்யும் இடத்தில் ஒரு விபத்து நடந்தது.அந்த விபத்தில் ஜான் ரூப்ளிங் இறந்து விட்டார்,வாஷிங்டன்னுக்கு தலையில் அடிப்பட்டு மூளைக்கு பாதிப்பு ஏற்பட்டது. அவரால் நடக்கவும் ,பேசவும் முடியாத நிலை ஏற்பட்டது.

எல்லா இஞ்சினியர்களும் நாங்கள் அப்பவே சொன்னோம் இது தேவை இல்லாத வேலை பாலம் கட்டுவது முடியாத காரியம் என்று ஏளனமாக பேச ஆரம்பித்தனர்.

இந்த பாலம் கட்டுவதை தெரிந்தவர் இரண்டு பேர் மட்டுமே.ஒருவர் இறந்து விட்டார் இன்னொருவர் கை கால் அசைவு இல்லாமல் இருக்கிறார்.வாஷிங்டன் மருத்துவமனையில் படுத்திருந்தாலும் அவர் மனம் முழுக்க அந்த பாலத்தை கட்டுவதை பற்றியே யோசித்து கொண்டு இருந்தது.

ஒரு நாள் அவர் மருத்துவமனையில் இருக்கும்போது மெல்லிய காற்று வீசியது ஜன்னல் திரை விலகியதும் அவரால் வானத்தையும் மரங்களையும் பார்க்க முடிந்தது.இயற்கை என்னவோ நம்மிடம் சொல்ல நினைக்கிறது என்று யோசித்தார் பிறகு மெல்லமாக ஒரு விரலை மட்டும் அசைத்து பார்த்தார் விரல் அசைந்தது.

விரல் அசைவு மூலம் தன் மனைவியிடம் தன் ஆசையை கூறினார்,மீண்டும் இஞ்சினியர்களை வரவழைத்து வேலையை ஆரம்பிக்க சொன்னார்.விரல் அசைவு உரையாடல் மூலமே தன் மனைவியின் உள்ளங்கையில் தடவி அவளுக்கு புரிய வைப்பார்.மனைவி இஞ்சினியர்களுக்கு கட்டளை பிறப்பித்து கொண்டு இருப்பார்.விரல் அசைவு மூலமாகவே 11 ஆண்டுகள் தன் மனைவி உள்ளங்கையில் தடவி இந்த பாலத்தை கட்டி முடித்தார்.

இன்று கம்பீரமாக நிற்கும் புரூக்ளின் பிரிட்ஜ் கணவன் மற்றும் மனைவி இருவரின் உள்ளங்கை உரையாடல் மூலமே கட்டப்பட்டது.

வாஷிங்டன் உடல் ஊணப்பட்டு இருந்தாலும் அவர் உள்ளம் ஊணம் ஆகாததால் அவரால் சாதிக்க முடிந்தது.

முடியும் என்று நினைத்தால் முடியாதது என்று எதுவும் இல்லை…!

நன்றி : Ilayaraja Dentist.

Shortlink:

Posted by on April 6, 2013. Filed under பொது. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *