நம்பிக்கையே நீ நலம் வாழவேண்டும்! தமிழ் போல் தனிநடை போட வேண்டும்.

     பிரித்தானியாவில் மிக இளவயதில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் துஷா கமலேஸ்வரன் என்ற தமிழ்ச் சிறுமி ஆவார். 2011ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் நெஞ்சில் காயமடைந்த துஷாவுக்கு அப்போது வயது 5 ஆகும். உறவினரின் அங்காடிக்கு இவரது அம்மாவுடன் சென்ற வேளையில், அங்கு குழு மோதலை சேர்ந்த ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொன்ண்ட போது துஷாவிற்கு முதுகுவழியாக குண்டு ஊடறுத்துச் சென்றதால் அவர் முள்ளந்தண்டில் காயம் ஏற்பட்டது. பல மாதங்களாக கோமா நிலையில் இருந்த துஷா பின்னர் கண் விழித்தார். அவரால் இனி வாழ்க்கையில் நடக்கவே முடியாது என்று மருத்துவர்களும் நரம்பியல் நிபுணர்களும் கூறிவிட்டனர். சக்கரவாகனத்தில் தான் இவர் செல்லவேண்டும் என்று இவரால் எழுந்து கூட நிற்க்க முடியாது என்றும் மருத்துவர்கள் கூறிவிட்டனர். ஆனால் அவர் தன் முயற்சியை மற்றும் பயிற்சியை கைவிடவில்லை !uk gun

அவரின் முயற்சியால் தற்போது துஷா எழுந்து நிற்க்க ஆரம்பித்துள்ளார். அதுவும் தன் சுய கால்களால். இனி அவர் மெல்ல மெல்ல நடக்க ஆரம்பிக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. உயிருடன் இருந்தாலே போதும் என்ற நிலை மாறி தற்போது அவரால் எழுந்து நிற்க்கக்கூடிய நிலை கூடத் தோன்றியுள்ளது. குறிப்பாக அவருக்கு நம்பிக்கை ஊட்டி அவரை மிகவும் ஆதரவுடன் கவனித்துக்கொள்வது , அவரது தாயார் தந்தை , சகோதரர் மற்றும் சகோதரி ஆகியோரே என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.

சின்னஞ் சிறு கிளியே துஷா செல்வக் களஞ்சியமே!… நீ நாடு போற்றும் நட்சத்திரமாய் ஜொலிக்க கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நேயர்கள், வர்த்தகர்களுடன் இணைந்து எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறது. படைப்பதும் காப்பதும் அவன் செயல் அல்லவா கவலை வேண்டாம், மனம் தளராத உன் பெற்றோருக்கும், சகோதரங்களுக்கும், உறவுகளுக்கும் எமது பணிவான அன்புகளும் பாராட்டுகளும்.

 

Shortlink:

Posted by on March 24, 2013. Filed under லண்டன். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *