பாரதிராஜா மீது பாய்ந்த இளையராஜா – ஒரு மக‌ரிஷியின் மங்காத்தா

barathirajahவார இதழ் ஒன்றில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் இளையராஜா. அதில் வந்த ஒரு கேள்வி, மதுரையில் நடந்த பாரதிராஜாவின் படவிழாவில் பாரதிராஜா உங்களை குறை சொல்லியும், புத்திமதி சொல்லியும் பேசினாரே..?

அதற்கு இளையராஜா அளித்த பதில் ஊடகங்களில் பலத்த சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. அந்த பதிலில் இவ்வாறு இளையராஜா கூறியிருந்தார்.

மேடையில் என்னைப் பற்றி பாரதிராஜா பேசிய விஷயங்கள் எல்லாமே என்னிடம் தனியாகப் பேசியிருக்க வேண்டியவை. ஆனால் ஏன் அப்படி பொதுமேடையில் பேசினார் என்றால் தனியாக என்னிடம் பேசும்போது அவருக்கு நான் கொடுக்கும் பதிலில், பேச முடியாமல் வாயடைத்துப் போவாரே – அதுதான் காரணம்.

கிடைத்தற்கரிய மானிட ஜென்மத்தில் கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கடைத்தேறுவதை விட்டுவிட்டு தன் புகழைத் தானே பாடுவதிலும், அடுத்தவனை குறை கூறுவதிலுமா இந்த ஜென்மம் கழிய வேண்டும்.

அவருக்கு என் மீதுள்ள குறையெல்லாம் நன் அவரைப் போல இல்லையே என்பதுதான். அதாவது குடித்துக் கொண்டும், கூத்தடித்துக் கொண்டும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ என்னவோ. இல்லை, இப்படி ஏதோ ஒரு விஷயத்தை நான் இழந்து கொண்டிருப்பதாக நினைக்கிறாரோ. அப்படி நான் மாறுவதென்பது நடக்கிற காரியமா. அவர் நினைக்கிறபடிதான் நான் இருக்க வேண்டுமா. இல்லை என்றால் ஏன் இந்தப் புத்திமதி, என்னை மேடையில் அவமதிப்பது.

அவர் பேச்சை வெறும் பைத்தியக்காரன் பேச்சு என்று விட்டு விட வேண்டியதுதான்.

எப்படியோ இந்த ஜென்மம் வீணாகி விட்டது. கடந்தது கடந்ததுதான். பூங்காற்று திரும்புமா. என்ன இப்படி எழுதிவிட்டேனே என்று உங்களுக்குத் தோன்றலாம்.

அவ்வளவு பெரிய விழாவில் என்னை வற்புறுத்தி அழைத்துச் சென்று என்னை அவமதித்துப் பேசியது மட்டும் ஏற்புடைய செயல்தானா. அப்படிப் பேசினால் அது இணையதளத்திலும், காணொளிகளிலும் பதிவாக ஆகிவிடும் என்பது பாரதிராஜாவுக்குத் தெரிய வேண்டாமா.

இளையராஜா இவ்வளவு காட்டமாக பதிலளிக்க காரணமான அந்த விழாவில் எப்போதும் போல இளையராஜாவை ஒருமையில் பேசினார் பாரதிராஜா. அதேபோல் வைரமுத்துடன் பகைமை பாராட்டி வருவதையும் குறிப்பிட்டார். நீ எல்லோ‌ரிடமும் பேசு, பத்து நிமிஷம்கூட உட்கார்ந்து பேச மாட்டேங்கிற. தலைக்கனம் பிடிச்சு ஆடுற. இருக்கிறப்போ சந்தோஷமா இருந்திட்டுப் போவோம். இன்னொருமுறை பிறந்து வரவாப் போறோம். நாம மூணு பேரு. அதில் ஒருத்தன் இங்க இல்ல. திரும்பவும் ஒண்ணா சேருவோம்…. என்ற ‌ரிதியில் பேசினார்.

இந்தப் பிரச்சனையில் ஒட்டு மொத்த தவறும் பாரதிராஜா பக்கமிருப்பதை முதல் பார்வையில் தெ‌ரிந்து கொள்ளலாம். என்னதான் பால்ய சினேகிதர்கள் என்றாலும் பொது மேடையில் ஒருமையில் அழைப்பது சம்பந்தப்பட்டவருக்கு தர்மச்சங்கடத்தை தரலாம். வைரமுத்துடன் இணைவதை கடுகளவும் விரும்பாதவர் எனும் போது மீண்டும் மீண்டும் அதனை வலியுறுத்துவது எ‌ரிச்சலை தரக்கூடியது. இளையராஜா குறிப்பிட்டிருப்பது போல், பாரதிராஜாவுக்கு இளையராஜா மீது வருத்தம் இருந்தால் அதனை அவ‌ரிடம் தனியாக கூறியிருக்கலாம்.

பாரதிராஜாவின் அத்துமீறிய பேச்சுக்கான எதிர்வினையாக இளையராஜாவின் பதிலை எடுத்துக் கொள்ளலாம். என்றாலும் இதே கேள்விப் பதில் பகுதியில் இளையராஜா இதற்குமுன் தந்த சில பதில்கள் அப்படி எடுத்துக் கொள்ள இயலாதபடி தடுக்கின்றன.

இதே வார இதழில் சில வாரங்கள் முன்பு ஒரு வாசகர் கேள்வி கேட்டிருந்தார். சாருநிவேதிதா, தனது ‘கனவுகளின் நடனம் புத்தகத்தில் தங்களை பயங்கரமாக விமர்சனம் செய்து உள்ளாரே… படித்தீர்களா .

இளையராஜா பதில்
“நான் எப்போதாவது காரில் வெளியூருக்குப் போகும்போது வழியில் மெயின் ரோடுகளில் உள்ள கடைகளில் பெயர்ப் பலகைகளைப் பார்ப்பேன். அதில் என் உருவத்தைத் வரைந்து “ராஜா ஆடியோ சென்டர்” என்றோ “இசைஞானி எலக்ட்ரிகல்ஸ்” என்றோ அல்லது “இளையராஜா பேக்கரி” என்று கூட எழுதியிருப்பார்கள். இது தங்கள் கடைகளை எளிதில் பிரபலப்படுத்திக் கொள்ளும் ஒரு யோசனையாக இருந்தாலும் கூட, அவர்கள் என் பாடல்களைக் கேட்டு என் மேல் உள்ள உண்மையான பாசத்தின் பால் அப்படி வைத்துக் கொள்கிறார்கள். “நானும் ராஜாவும்” என்றுகூட எஸ்.பி.பி. கச்சேரி பண்ணினான்.

Shortlink:

Posted by on March 8, 2013. Filed under பொது. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *