இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் ஃபிஷ்மேனின் புதிய பாடல்

யூடியூப்பில் கங்ணம் ஸ்டைல் பாடலுக்கு பின்பு மிகப் பிரபலமாகியுள்ளது “’One Pound Fish”. பாடகர் மொஹ்மட் நாசிர் கிழக்கு லண்டனில் இருக்கும், தனது மீன் கடைக்கு வாடிக்கையாளர்களை வரவைப்பதற்காக இவர் உருவாக்கிய பாடல் ‘Long Live One Pound Fish’.

தெருவில் போய் வருபவர்களுக்கு இந்த பாடலின் இசையும், பாடலில் வரும் இலகுவாக உச்சரிக்க கூடிய சொற்களும் சட்டென பிடித்துவிடவே வியாபாரம் மட்டுமல்ல நசீருன் மெல்ல பிரபலமடைய தொடங்கினார்.

இவ்வாறு புகழடையத் தொடங்கிய நசீர் பிரிட்டனில் தஞ்சம் கோரிய ஒரு அகதியாவார். தற்போது அவரது தஞ்சக்கோரிக்கையில் ஒரு சில சிக்கலால் பாகிஸ்தனானுக்கு திரும்ப வேண்டிய நிலை. ஆனால் அதற்குள் அவரது ரசிகர் ஒருவர் அவரை கொண்டே உருவாக்கிய One Pound Fish வீடியோ பாடல் யூடியூப்பில் படு ஹிட்டாகிவிட்டது.

பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பட்ட போது லாகூர் விமான நிலையத்தில் அவரது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஆரவாரமாக நசீரை வரவேற்க பூரித்து போய்விட்டார் அவர்.

நசீரின் புதிய One Pound Fish பாடலானது யூடியூப்பில் 7 மில்லியன் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இங்கிலாந்தின் இசைப்பாடல் பட்டியலில் 29வது இடத்தை பிடித்துள்ளது.

இது குறித்து நசீர் கூறுகையில் ‘நான் இனி இசைத்துறையிலேயே அதிக கவனம் செலுத்த போவதாகவும், பிரான்ஸ், அமெரிக்க நாடுகளுக்கும் One Pound Fish பாடலை கொண்டு செல்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Shortlink:

Posted by on December 31, 2012. Filed under ஒலி பதிவுகள். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *