சுவிஸ் கோத்தார்ட் குகையில் தீவிபத்து- பல மணிநேரம் போக்குவரத்துக்கு தடை

       சுவிட்சர்லாந்தின் மிக நீளமான கோத்தார்ட் குகையில் இன்று காலை பாரஊர்தி ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டதால் இப்பாதை ஊடான போக்குவரத்து நண்பகல்வரை தடைப்பட்டிருந்தது. இன்று காலை 7.30மணியளவில் இத்தாலியை சேர்ந்த பார ஊர்தி ஒன்று இந்த குகை ஊடாக சென்று கொண்டிருந்த போது தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த குகையில் நுழைந்து இரு கிலோ மீற்றர் சென்ற நிலையில் இந்த விபத்து ஏற்பட்டிருந்தது.

இந்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டவில்லை எனினும் அந்த பாரஊர்தி சேதமடைந்துள்ளது. காலை 7.30மணி தொடக்கம் நண்பகல் ஒரு மணிவரை இப்பாதை மூடப்பட்டிருந்தது.

17கிலோ மீற்றர் தூரம் கொண்ட இக்குகை சுவிட்சர்லாந்தில் அதி கூடிய நீளமானதாகும். சுவிஸிலின் சூரிச், பேர்ண், லுசேன் ஆகிய மாநிலங்களிலிருந்து திச்சினோ மற்றும் இத்தாலி நாட்டிற்கு செல்பவர்கள் இந்த பாதையையே பயன்படுத்துகின்றனர்.

Shortlink:

Posted by on October 29, 2012. Filed under சுவிஸ். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *