தனித்தன்மையான குறும்படங்கள்

தனித்தன்மையான குறும்படங்கள்

நான் ரசித்த குறும்படங்களில் சிலவற்றை இங்கே பகிர்கிறேன்.

ஒவ்வொரு குறும்படமும் தனித்தன்மை கொண்டது.

ஒரு புதிய தாக்கத்தை நிச்சயம் உங்களுக்குள் உண்டாக்கும்.

பாருங்கள், ரசியுங்கள்…

உண்மையான படைப்பாளிக்கு உங்கள் வாழ்த்துக்களை மனதின் மூலமே சொல்லுங்கள்…

 

புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்

 

தர்மம்

 

பண்ணையாரும் பத்மினியும்

 

ஆடு புலி ஆட்டம் – குறும்படம்

உலகம் தன் இயக்கத்தை ஆரம்பித்த நாள் முதலே ஆடு புலி ஆட்டம் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது.எத்தனை வருடங்கள் ஆனாலும் உலகத்தை நம் இதயம் நிற்கும் வரை தான் பார்க்க முடியும் என்பதை உணர்த்து கொண்டால் மனிதத்தின் மகத்துவம் மனிதனுக்கு புரிந்துவிடும்.

இந்த குறும்படம் சிலருக்கு வழியாகவும், சிலருக்கு வலியாகவும் இருக்கும்.

ஆடுபுலி ஆட்டம் உங்கள் பார்வைக்கு

வரைகலை – கோகுல்

சிறப்பு சப்தம் – Leo Vision

படத்தொகுப்பு – ஆண்டனி ரூபன்

ஒளிப்பதிவு – சதீஷ்

R வினோத் – வினோத் R பிள்ளை

அமுல் – லோகநாதன் – கார்த்திக்

இசை – கணேஷ் ராகவேந்திரா

திரைகதை – வசனம் – இயக்கம் — சாம்யேல் மேத்யூ

துரும்பிலும் இருப்பர் — குறுப்படம்

குறும்படங்கள் தான் இன்றைய திரைப்படங்களின் முன்னோடி.

எனக்கு பிடித்த குறும்பட இயக்குனர்களில் ஒருவர் நலன். எப்போதும் நகைச்சுவை மிகுந்த கதைகள் யாரையும் கவரும் எனும் மந்திரம் அறிந்தவர் என்று கூட சொல்லலாம்.

நாளைய  இயக்குனர் என்ற தலைப்பில் ஒளிபரப்பு செய்யப்பட்ட தொலைக்காட்சித் தொடரில் வெளியான இயக்குனர் நலனின்  துரும்பிலும் இருப்பர் என்ற நகைச்சுவை குறும்படம் உங்கள் பார்வைக்கு,

ஏதோ  பழைய படம் மாதிரி இருக்குன்னு இந்த காணொளியை காணாம அடுத்த காணொளிக்கு  சென்று விடவேண்டாம்.  இது 1955ல் வெளியான முதல்தேதி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சி. நாகரீக வளர்ச்சியின் ஆரம்பத்தை 1955ல் வெளியான இந்த காணொளியிலும் ,

இப்போதைய நாகரிகத்தை கீழ் காணொளியிலும்  காணலாம்.
சும்மா இணையத்தில் வலம் வரும்போது இந்த காணொளி என்னை மிகவும் கவர்ந்து, நிச்சயம் உங்களையும் கவரும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

 

 

Shortlink:

Posted by on October 16, 2012. Filed under குறும்படம். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *