அமெரிக்கா எங்களை சோதனையிட வேண்டாம்: சுவிஸ் சொக்லேட் நிறுவனங்கள்

அமெரிக்க அதிகாரிகளின் புதிய சோதனை முறை சுவிஸ் சொக்லேட் தொழிலதிபர்கள் இடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சொக்லேட்டுக்கு முக்கியச் சந்தையாக அமெரிக்கா இருப்பதால் தமது விற்பனை மற்றும் இலாபம் பாதிக்கக்கூடாது என்ற நோக்கத்தில் சுவிஸ் நிறுவனங்கள் இந்த சோதனையை சகித்துக் கொண்டனர்.

ஜேர்மனி மொழியில் வெளிவரும் வர்த்தக செய்திதாளுக்கு, கேமில் பிளாக் சொக்லெட் நிறுவனத்தின் உரிமையாளரான (Daniel Bloch)டேனியல் பிளாக் அளித்த பேட்டியில் வெளிநாட்டவர் எங்கள் சாக்லேட் தயாரிப்பை சோதனையிடுவதும், கண்காணிப்பதும் நடைமுறையில் இல்லாத புதுமுறையாக இருக்கிறது என வருத்தமாக கூறினார்.

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையினர் (FDA) சுவிட்சர்லாந்தில் உள்ள 21 சாக்லேட் நிறுவனங்களையும் 12 பால்பண்ணைகளையும் சோதனையிடுகின்றனர்.

அமெரிக்கா, உணவுப்பொருள் ரசாயணப் பொருளின் மூலமாக கெட்டுப் போகலாம் அல்லது கதிர்வீச்சு மூலமாகவும் கெட்டுப் போகலாம் என நம்புவதால் தங்கள் மக்கள் விரும்பி உண்ணும் சாக்லேட்டுகள் கெட்டுப் போகாமல் உள்ளனவா என்று அறிய விரும்புகிறது.

ஆனால் வெளிநாட்டவரின் சோதனை முறைகளைத் தம்மிடம் புகுத்துவது சுவிஸ் சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.

அமெரிக்கா சுவிஸ் மக்களை அடக்கியாள நினைப்பதாகவும், அமெரிக்கர்களின் இவ்வகையான செயல்பாடுகளால் சுவிஸ் மக்கள் மன அளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் வெளிவந்த சுவிஸ் செய்திதாள் கருத்து தெரிவித்தள்ளது.

Shortlink:

Posted by on September 11, 2012. Filed under சுவிஸ். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *