குப்பிளான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்திற்கான நூலக கட்டிடம் அமைக்கும் திட்டம் தொடர்பாக

      எமது குப்பிளான் மண்ணில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கின்ற எமது கிராமத்தவர்களால் உருவாக்கப்பட்ட விக்கினேஸ்வரா கனடா மன்றம் எமது குப்பிளான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்திற்கான நூலக கட்டிடம் அமைப்பதற்கான பொறுப்பினை ஏற்றுள்ளதுடன் அதற்காக மன்றத்தின் உறுப்பினர்கள் அனைவரும் இரவு பகல் பாராது எம்முடன் இனைந்து செயற்பட்டு வருகின்றமையும் ஆதன் அடிப்படையில் கனடா மன்றத்துடன் இணைந்து எமது நிர்வாகம் செயற்படுகின்றமையும் அனைவரும் அறிந்த விடயமாகும்.
எமது சனசமூக நிலையத்திற்கான நூலக கட்டிடம் அமைப்பதன் மூலம் குப்பிளான் மண்ணில் வசிக்கின்ற ஓவ்வெரு பிள்ளையின் கல்வி கலை கலாச்சார மற்றும் கணனி அறிவினை மேம்படுத்துவதாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
எமது குப்பிளான் மண்ணில் பிறந்து குப்பிளான் மண்ணில் மிகுந்த பற்றுடன் வெளிநாடுகளில் வசிகின்ற தாங்கள் முழுமையான விருப்புடன் இத்திட்டத்தில் பங்கெடுத்து பாரிய பங்களிப்பினை வழங்குகின்றமை எமக்கு மிகுந்த மகிழ்ச்சியினை தருகின்றது.
முதல்கட்டமாக சுற்றுமதில் அமைக்கும் திட்டத்தில் சனசமூக நிலையத்தின் வடக்கு பக்கமாகவுள்ள மதில் அமைக்கும் வேலைகள் மற்றும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது. இதில் புதிதாக 160 அடியும் மதிலும் 20 அடி மதிலுக்கு பூச்சு மட்டுமான வேலைகளும் முன்பக்கத்தில் மதிலும் மற்றும் இரட்டை நுழைவாயிலுக்கு இடையில் அமைந்ததான கேற்றும் தயாரிக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது தெற்கு பக்க மதில் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு வேகமாக நடைபெற்று வருகின்றது. எனவே அனைவரும் ஒன்றினைந்து கிராமத்தின் வளர்ச்சிக்கு பங்ளிப்பு செய்வோம்.

நன்றி
தகவல்
இ. நிரூபன்

Shortlink:

Posted by on September 6, 2012. Filed under விக்கினேஸ்வர சனசமூக நிலைம். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *