காலை நேர காய்ச்சல் (morning sickness) : பெண்கள் அறியவேண்டியது.

     காலை நேர நோய்(morning sickness) எனப்படுவது கர்ப்பமான பெண்களுக்கு ஏற்படுகின்ற ஒரு நிலையாகும். அதாவது இது நோய் எனறு சொல்லப்பட்டாலும் தாய்க்கோ அல்லது குழந்தைக்கோ எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

Morning Sickness என்றால் என்ன?
இது கர்ப்பமான பெண்களில் ஏற்படுகின்ற வாந்தி மற்றும் வாந்தி எடுக்க வேண்டிய உணர்வு(nausea) என்பவற்றையே காலை நேர நோய் என்கின்றோம்.

இந்த காலை நேர நோயானது கர்ப்பமாகி முதல் மூன்று தொடக்கம் நான்கு மாதங்களுக்கே காணப்படும்.
அதாவது ஒரு கர்ப்பமான பெண் வாந்தியினால் அவதிப்படுவது முதல் மூன்று மாதங்களுக்கே. இந்த நோயினால் குழந்தைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.

காலை நேர நோயின் ஆதிக்கத்தை குறைக்க சில வழிகள்,

  • எண்ணைத்தன்மையான, மற்றும் கொழுப்புத் தன்மையான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். (பொரித்த காரம் கூடிய உணவுகள்)
  • ஒரேயடியாக நிறையச் சாப்பிடுவதைத் தவிர்த்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட வேண்டும்.
  • காபோகைட்றேட்டு(carbohydrate) நிறையக் கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும் (வெள்ளை அரிசி, அவித்த உருளைக் கிழங்கு, இனிப்புக் குறைவான மாவினால் செய்த பிஸ்கெட் போன்றவை)
  • நித்திரையால் எழுந்தவுடன் படுக்கையில் சற்று நேரம் அமர்ந்து இருந்து ஆறுதலாக சுவாசியுங்கள்
  • பழங்கள் மரக்கறி வகைகளை அதிகம் உட்கொள்ளுங்கள்
  • வயிறு முற்றாக வேருமையாவதைத் தவிருங்கள்
  • படுக்கையில் இருந்து எழுந்தவுடனேயே உங்கள் அன்றாட செய்கைகளில் ஈடுபடும் முன் சீனித்தன்மை குறைந்த பிஸ்கட் ஏதாவது சாப்பிடுங்கள் .

இது தவிர அளவுக்கதிகமான வாந்தி உங்களை வாட்டுமானால் வைத்தியரை நாடி வாந்தியைத் தடுக்கும் மருந்துகளை உட்கொள்ளலாம்.

Shortlink:

Posted by on August 3, 2012. Filed under மகளிர் பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *