மடிக்கணணியை வெல்லுங்கள் WIN A LAPTOP

மடிகணணி ஒன்றை வெற்றி

கொள்ளுங்கள்

 

WIN A LAPTOP

கீழேயுள்ள  குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமுக நிலையம் பற்றிய
கட்டுரையை வாசித்து, அது தொடர்பானதும் மற்றும் குப்பிழான்
பற்றியதுமான சில கேள்விகளுக்கு விடையளிக்கத் தயாராகுங்கள்.
சரியான விடைகளை அனுப்பும் புலம்பெயர்ந்த குப்பிழான் மக்களில்
அதிர்ஷ்டக் குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்படும் ஒருவருக்கு பெறுமதி
வாய்ந்த மடிக் கணணி LAPTOP ஒன்று பரிசாக வழங்கப்படும்.

 

குப்பிழான் சனசமுக நிலையம்


 

 

குப்பிழான் மண்ணின் மைந்தர்களாகிய எங்களில் பலரும் புலம் பெயர் தேசங்களின்  பல சிறப்பான வசதிகளுடன் வாழ்ந்து வருகிறோம். இவ் வசதிகளில் முக்கியமானதொன்று community centers எனப்படும் சனசமுக நிலையங்கள் ஆகும். இவை ஒரு சமுகத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவ்வாறான நிலையங்கள் பல வசதிகளை தம்மகத்தே கொண்டுள்ளன. நூல்நிலையம், கணணி/இணைய வசதி, படிப்பறை(study room), நீச்சல் தடாகம், உடல் பயிற்சி நிலையம், கூட்ட அறைகள்(meeting rooms) என்பன இவற்றில் அடங்கும்,

           

ஆயினும் நாம் பிறந்த மண்ணில் உள்ள சனசமுக நிலையத்தின் நிலையைப் பாருங்கள். ஒரு அரை குறைக் கட்டடத்தில் ஒரு மேசையில் சில பத்திரிகைகளை மட்டுமே தாங்கி அழுத வண்ணம் உள்ளது. உலகம் நவீன யுகத்தில் முழு வீச்சாக முன்னேறிக் கொண்டு இருக்க எங்கள் செம்மண் குப்பிழான் மட்டும் கற்கால வசதிகளுடன் பின் தங்கி நிற்பதைப் பார்க்கப் பொறுக்க முடியவில்லை. குப்பிழானில் வாழும் சிறுவர்கள். இளையோர்கள்,  முதியோர்களின் உடலுள ஆரோக்கியம், அறிவுத் தேடல், நல்லதோர் கட்டமைப்பான சமூக வளர்ச்சி என்பவற்றில் முக்கிய பங்கு வகிக்க வேண்டிய சனசமுக நிலையம் பல வருடங்களாக உரிய வசதிகளோ கட்டடமோ இன்றி பின்தங்கி நிற்கிறது.
          

இவ்வாறான வேதனைக்கு ஆறுதல் அளிக்க குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடா முன்வந்துள்ளமை இனிப்பான செய்தியாக உள்ளது. குப்பிழானில் உள்ள தற்போதைய சனசமுக நிலையக் கட்டடத்தை தற்காலத்திற்கேற்ப போதிய வசதிகளுடன் இரண்டு மாடிக் கட்டடமாக மீளக் கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத் திட்டமானது உலகெங்கும் பரந்து வாழும் குப்பிழான் மக்களின் உதவிகளை குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடா ஒருங்கிணைத்து செயற்படுத்தப்படவுள்ளது. ஆரம்பக் கட்டக் கணிப்புகளின் படி இதற்கான செலவு சுமார் 1  தொடக்கம் 2 கோடி இலங்கை ரூபாய் வரை ஆகலாமென மதிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நிதி சேகரிப்பு ஆரம்பிக்கப்பட்டு இதில் 25 வீதமான தொகையை வழங்குவதற்கு பெரு மனதுடன் குப்பிழான் நலன்விரும்பிகள் முன்வந்துள்ளனர்.
 

பல குப்பிழான் மண்ணின் மைந்தர்கள் ஆயிரம் கனடிய,பிரித்தானிய,சுவிஸ் மற்றும் பல நாடுகளின் நாணயங்களாக வாரி வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள். வேறு பலரும் தம்மாலான சிறிய தொகைகளையும் வழங்குகிறார்கள். இதில் ஆயிரம் கனடிய டொலர்களுக்குச் சமமான தொகையை வழங்குபவர்களின் பெயர்கள் அல்லது அவர்கள் விரும்பும் ஞாபகார்த்தப் பெயர்கள் புதிதாக அமையவுள்ள கட்டடத்தில் மிகச் சிறப்பான முறையில் பதிக்கப்பட்டு குப்பிழான் வரலாற்றிலேயே பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவுள்ளது. இத் திட்டத்திற்கு எங்கள் பங்களிப்பையும் வழங்கி நாம், நமது பெற்றோர் பிறந்து வளர்ந்து ஓடி ஆடி விளையாடி இன்றைய நிலைக்கு உயர அடித்தளம் தந்த குப்பிழான் மண்ணிற்கு எங்கள் நன்றி கடனை செய்வோம்.
            உங்கள் உதவிகளை வழங்க குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடாவின் உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ளுங்கள். தொலைபேசி இலக்கங்கள் kuppilan.net முகப்பு பக்கங்களில் உள்ளன.

 

 

 

 

குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடா

 

 

தலைவர் திரு நா பாலசுப்பிரமணியம் 647-624-7357

 

பொருளாளர்  திரு சி விக்கினேஸ்வரன் 647-286-9089

 

செயலாளர்  திரு செ சற்சொரூபன்  418-854-4290

 

 


வினாக்கள் விரைவில்..

Shortlink:

Posted by on August 25, 2012. Filed under கனடா, குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம், செய்திகள், பொது, போட்டிகள், முக்கிய செய்திகள். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *