பிரிட்டன்மாணவர்களின் கல்வித்திறன்சர்வதேச தரத்தை விடக் குறைவானதே-ஆய்வறிக்கை தகவல்

     பிரிட்டனில் மாணவர்களின் கல்வித்திறன் சர்வதேச தரத்தில் பின்தங்கியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆராய்ச்சி மையத்தினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு அமைப்பு(OECD) நடத்தும் தேர்வுகளில், மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை ஆராய்ந்தனர்.

வாசிப்பு மற்றும் கணக்குத் துறைகளில் சர்வதேச மாணவர்களுக்கான தகுதித் தேர்வுகள்(PISA) உலகளவில் நடைபெற்றன. கடைசியாக இதன் முடிவுகள் கடந்த 2009ம் ஆண்டில் வெளிவந்தன.

பிரிட்டனில் இந்தத் தேர்வின் உயர் நிலையான ஆறாம் நிலையை எட்டியவர்கள் 1.7% பேர் மட்டும். ஆனால் சராசரியாக இந்நிலையை எட்டியவர்கள் 3.1% பேர் ஆவர்.

எனவே பிரிட்டன் சர்வதேச தரத்தில் பின்தங்கியிருப்பது தெளிவாகிறது. சுவிட்சர்லாந்திலும், கொரியாவிலும் தலா 7.8% பேர் இந்த ஆறாம்நிலையில் தேர்ச்சி பெற்றனர்.

OECD தேர்வு நடத்திய 34 நாடுகளில் பிரிட்டன் 26வது இடத்தில் உள்ளது. சுலோவேனியா (3.9%), சுலோவாக் குடியரசு (3.6%), பிரான்ஸ் (3.3%), செக் குடியரசு (3.2%) போன்றவை பிரிட்டனை முந்திவிட்டன.

சிங்கப்பூர் OECDயில் அங்கம் வகிக்காத போதும் அங்கு 15.6% பேர் தேறியுள்ளனர். ஹாங்காங் மற்றும் ஷாங்காயில் 10.8% மற்றும் 26.6% பேர் ஆறாம் நிலையை எட்டியுள்ளனர்.

Shortlink:

Posted by on July 6, 2012. Filed under லண்டன். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *