சுவிஸ் வாழ் மக்களிடம் ஓர் அன்பான வேண்டுகோள்.

குப்பிழான் சிவகாமி ஆலயத்தின் (சமாதி கோவில்) மீழ் எழுச்சிக்கு எல்லோரும் சேர்ந்து கை கொடுங்கள். இது உங்களுக்கான வேண்டுகோள் மட்டுமல்ல உங்கள் கடமையும் ஆகும்.
சுவிஸ் வாழ் மக்களிடம் ஓர் அன்பான வேண்டுகோள்.

அன்பிற்க்கும் பாசத்திற்கும் உரிய குப்பிழான் வாழ் சுவிஸ் வாழ்
மக்களே குப்பிழானில் அமைந்துள்ள சிவகாமி அன்னையின் ஆலயத்திருப்பணி வேலைகள் அனைத்தும் ஆரம்பமாகியுள்ளதால் தயவு செய்து நீங்கள் அனைவரும் முன் வந்து விரும்பிய ஓர் உதவித் தொகையை தந்துதவுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

அண்மையில் தான் சமாதி கோவில் பிரதேசம் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு மக்கள் குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அங்கே இருந்த சமாதி கோவில் முற்றாக அழிக்கப்பட்டு வெறும் பற்றைகளை தான் காண கூடியதாகவுள்ளது. 20 வருடங்களுக்கு முன்னைய காலத்தில் பெருமளவு மக்கள் வாழ்ந்த இந்த பிரதேசம் இன்று ஒரு சூனிய பிரதேசமாக காட்சி அளிக்கிறது. ஆனாலும் எமது பிரதேசங்கள் இத்தகைய அழிவுகளில் இருந்து பழைய நிலைக்கு கொண்டு வருவது சகலருடையதும் கடமையாகும். இதன் ஒரு கட்டமாக எமது ஆலயங்கள் முக்கிய இடத்தை பெறுகின்றன.
போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர், சிங்களவர் என்று பலர் எங்களை ஆட்சி செய்தார்கள். அவர்கள் ஆயுத பலத்தாலும், சலுகைகளை கொடுத்தும் மதம் மாற்ற முயற்சித்தார்கள் ஆனால் எமது மூதாதையர்கள் இவை எதற்கும் கீழ் படியாமல் அஞ்சாத நெஞ்சோடு பாதுகாக்கப்பட்டு வந்த இந்த ஆலயங்களை நாம் கை விடலாமா. கடவுள் நம்பிக்கைக்கு அப்பால் தமிழர்களின் கலை, கலாச்சார மையமாக ஆலயங்களே விளங்குகின்றன. ஆலயங்கள் அழிக்கப்படும் போது நாம் நமது சுயத்தை இழக்கிறோம். ஆகவே அழிக்கப்பட்ட எமது சமாதி கோவிலை பழைய நிலைக்கு கொண்டு வர எல்லோரும் முயல வேண்டும்.

தொடர்புகளுக்கு
காந்திமதி செல்லையா (கனடா)
சிவாஜினி தேவராஜா (சுவிஸ் )
Freiburg strasse 2
3150 Schwarzenburg
078 / 744 50 13 .

 http://www.yarl.com/forum3/index.php?showtopic=99841

Shortlink:

Posted by on March 25, 2012. Filed under கனடா, குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம், சுவிஸ், லண்டன். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *