தாவரங்களின் எதிரி பார்த்தீனியம்

 

மண்ணில் வளரும் மரம், செடி, கொடி, புல், பூண்டுகள் மலர்ச்சியுடன்              இருப்பதைப் பார்த்து மனமகிழ்ச்சி கொள்கிறோம். அதே வேளையில் மனித குலத்தை அச்சுறுத்தும் தாவரங்கள் இருப்பதை அறியும் போது இதயம் பதறுகிறது. தற்போது   ஒரு பயங்கர தாவரம் பரவி வருவதை நினைக்கும்போதுமனம் விசனப்படுகிறது.

அந்த தாவரத்தை அழிப்பதற்காக அரசு இயந்திரங்கள் இப்போது முழுமையாக முடுக்கி விடப்பட்டுள்ளது. அந்த தாவரம் தான் தாவரத்தின் தீவிரவாதியாகக் கருதப்படும் பார்த்தீனியம். மனிதனுக்கும் கால்நடைகளுக்கும், பயிர் வகைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பயங்கரவாத செடியான பார்த்தீனியத்தைப் பற்றி இங்கு நாம் பார்ப்போம்.

   பருவகால செடி

  பார்த்தீனியம்என்ற பெயர் “Parthenice” என்ற லத்தீன் வார்த்தையிருந்து தோன்றியது இச்செடியின் தாவரவியல் பெயர் ““Parthenium Hysterophorous”” என்பதாகும். அமெரிக்க நாட்டை தாயகமாகக் கொண்ட இச்செடி ஒரு பருவகால (Annuals) பயிர் வகையைச் சார்ந்தது. இதற்கு மண்ணை ஆழமாகத் துளைத்துச் செல்லும் ஆணிவேரும், நேராக நிமிர்ந்து வளரும் உறுதியான தண்டுகளும் உண்டு. பல கிளைகள் கொண்ட பார்த்தீனியம் செடியின் இலைகள் மங்கலான பச்சை நிறத்தையும், மென்மையான உரோமங்களையும் கொண்டிருக்கும். இதன் பூக்கள் செடியின் மேல் பகுதியில் வெண்மை நிறத்தில் காட்சி தரும். ஒரு செடி சராசரியாக தனது வாழ்நாளில் ஒரு இலட்சம் விதைகளை உற்பத்தி செய்யும். இந்த விதைகள் கறுப்பு நிறத்தில் வெள்ளை செதில்களுடன் கண்ணுக்குத் தெரியாத மிகச்சிறிய அளவில் காணப்படும்.

கோதுமை தோழன்

அமெரிக்க நாட்டில் தோன்றிய இச்செடியின் கொடிய விளைவுகள்  ஆசியா கண்டங்களில் தான் அதிகமாக உணரப்பட்டது. நம் நாட்டில் 1988-ம் ஆண்டு  பார்த்தீனியத்தை பார்க்க முடிந்தது. இதன் விதைகள் இந்தியாவில் இருந்து நம் நாட்டுக்கு  வந்து எல்லா பகுதிகளிலும் தனது பாதச் சுவடுகளைப் பதித்துவிட்டது. விவசாயநிலங்கள், தரிசு நிலங்கள், சாலையோரங்கள், கரையோரங்கள் என எல்லா இடங்களிலும் புகுந்து சுமார்  பரவியுள்ளது. அதோடு வயல் நிலங்களையும் விட்டு வைக்காமல் அதிவேகமாக ஆக்கிரமித்து வருவது அனை வரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. புல் வெளிகளுக்குள் ஊடுருவிய இச் செடியான து கால்நடை தீவினங்களுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது.

நச்சுக் களை களைச் செடியாக எங்கும் நீக்கமற நிறைந்து காணப்படும் பார்த்தீனியத்தில் உள்ள  நச்சுப்பொருள் நமது சுவாச உறுப்புகளுக்குள் நுழைந்து உடல் உபாதைகளை உண்டாக்குகிறது. இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் இச்செடி கூடுதலாக வளர்ந்து மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும், தாவரங் களுக்கும் நச்சுத் தன்மையைத் தருவதோடு அலர்ஜியை ஏற்படுத்தி விடுகிறது. விளை நிலங்களில் வளரும் இச்செடியினால் 40 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது. பார்த்தீனியம் கலந்த பசுந்தீவனங்களைச் சாப்பிடும் கால்நடைகளின் பால் கசப்புத்தன்மை பெறுகிறது. ஆண்டு முழுவதும் முளைத்து வளரும் தன்மை கொண்ட இச்செடியானது இயற்கையின் எல்லா சூழ்நிலைகளையும் எளிதாகச் சமாளித்து வளரும் ஆற்றல் பெற்றது. செடியின் வாழ்க்கைச் சக்கரம் முழுவதும் பூத்துக் கொண்டிருக்கும் தன்மையினால் இதன் விதை உற்பத்தி அதிகரித்து எளிதாக எங்கும் பரவி விடுகிறது. இவை கரியமில வாயுவை கூடுதலாக வெளிவிடுவதால் சுற்றுச் சூழலுக்கு பெரிய பாதிப்பு ஏற்படுகிறது.

ஆரோக்கியப் பிரச்சினை

ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் இந்த செடியின் மலரிலுள்ள மகரந்தங்கள் குழந்தைகளுக்கும், முதியவர் களுக்கும் ஆஸ்த்துமா நோயை தோற்றுவிக்கிறது. மேலும் அநேகருக்கு அலர்ஜியாக விளங்கும் இச்செடி அரிப்பையும், படை நோயையும் ஏற்படுத்தி தொல்லை தருகிறது. மனித குலத்துக்கும் விலங்கினத்துக்கும் தோல் வியாதிகளை உருவாக்குவதில் இது முன்னிலை வகிக்கிறது. கண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. இவ்விதம் ஆரோக்கிய பிரச்சினை களுக்கு ஆதாரமாகத் திகழும் பார்த்தீனியத்தை அழிப்பதற்கு பல்வேறு முறைகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பார்த்தீனியம் செடியுடன் ஒவ்வாமை உடையவர்கள் உரிய பாதுகாப்பு ஆடைகளை அணிந்த பின்னர்தான் இச்செடிகளை அழிக்கும் வேலையில் இறங்கவேண்டும்.                                                                                                                                                                                                                                                                                                                                                                    பார்த்தீனியம் கட்டுப்பாடு முறைகள்

செடி ஒழிப்பு முறை இச்செடியை வெட்டி விடுவதைவிட பூக்கும்பருவத்தை அடைவதற்கு முன்னால் வேருடன் பிடுங்கி அழிப்பது சாலச்சிற ந்தது. பார்த்தீனியத்தை இளம் வளர்ச்சிப் பருவத்தில் அழிப்பதற்கு பாதுகாப்பான களைக் கொல்- களைப் பயன் படுத்தலாம். உயிரியல் முறையில் பார்த்தினியம் செடியின் இலைகளை விரும்பித்தின்னும் பூச்சிகளை விட்டும் கட்டுப்படுத்தலாம். பார்த்தீனியம் மிகுந்துள்ள இடங்களில் கேசியா (Cassia) இனத்தைச் சார்ந்த எதிரிச் செடிகளை வளரவிட்டும் இவை பரவாமல் தடுக்கலாம். நன்கு நிலத்தை உழுது களைகளின்றி பண்படுத்தும் போது பார்த்தீனியம் வளருவதற்கு வாய்ப்பில்லை. அதிகமாக பார்த்தீனியம் காணப்படும் இடங்களில் அவைகளைப் பிடுங்கி உரக் குழியில்போட்டு கம்போஸ்ட் உரமாக மாற்றி விடுவது மிகவும் சிறப்பு.

களைக்கொல்லி உபயோகம்:

  • ஒரு லிட்டர் நீரில் 200 கிராம் சமையல் உப்பு (20 சதம்) மற்றும் 2 மில்லி டீபால் அல்லது சோப்பு திரவம் கலந்து நல்ல வெயில் நேரத்தில் செடிகள் முழுவதும் நனையும்படி கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.
  • ஒரு லிட்டர் நீருக்கு  கிளைபோசேட் (ரவுண்டப்) 15 மில்லியுடன் அம்மோனியம் சல்பேட் 20 கிராம் + சோப்பு திரவம் 2 மி.லி. அல்லது மெட்ரிபுசின் (சென்கார்) 4 கிராம் ஆகிய களைக்கொல்லிகளில் ஏதாவது ஒன்றை கலந்து, வளர்ந்த பார்த்தீனியம் செடிகள் முழுவதும் நனையும்படி கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

உயிரியல் முறை கட்டுப்பாடு

  • தரிசு நிலங்களில் அடர் ஆவாரை மற்றும் துத்தி வகைச் செடிகளை போட்டு, செடிகளாக வளரச் செய்து பார்த்தீனியத்தின் வளர்ச்சியைக் குறைக்கலாம்.
  • மேய்ச்சல் நிலங்களில் இயற்கையாக வளரும் தாவர இனங்களை வளர ஊக்குவிக்கலாம்.
  • பார்த்தீனியம் செடியை தின்று அழிக்கக்கூடிய சைக்கோகிராமா பைக்கலரேட்டா என்ற மெக்சிகன் வண்டுகளை பரவச் செய்தும் பார்த்தீனியத்தை கட்டுப்படுத்தலாம்.

பார்த்தீனியம் செடிகள் பூத்தபின் கட்டுப்படுத்தும் முறை

  •  செடிகள் பூத்த பின்னும் மேற்கூறிய களைக் கொல்லிகளைத் தெளிக்கலாம். ஆனால் செடிகள் முழுவதும் அழியாது.
  • இச்சூழ்நிலையில் பூத்த செடிகளை கையுறை அணிந்து அல்லது கருவிகள் மூலம் விதைகள் காற்றில் பரவும் முன் அகற்றி எரித்தல் வேண்டும்

Shortlink:

Posted by on March 11, 2012. Filed under பல்வேறு விவசாய தகவல்கள, பொது, விவசாயம். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

One Response to தாவரங்களின் எதிரி பார்த்தீனியம்

  1. நல்ல செய்தி…வாழ்த்துக்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *