நான் நாடக நடிகன்… கமரா இஷ்டத்துக்கெல்லாம் திரும்பி நடிக்க மாட்டேன்

நான் நாடக நடிகன்… கமரா இஷ்டத்துக்கெல்லாம் திரும்பி நடிக்க மாட்டேன்… என் இஷ்டத்துக்குத்தான் கமரா திரும்பி திரும்பி என்னைப் படம் பிடிக்க வேண்டும்” இவ்வாறு இயக்குனர்களிடம் தயங்காமல் சொன்னவர்…எனக்கு சினிமாவை விட நாடகம் தான் முக்கியம், நாடகம் முடிந்த பிறகு இரவில் மட்டுமே சூட்டிங்கிற்கு வருவேன்… என்று நிபந்தனை போட்டவர்…

நாடக மேடைகளை உயிராய் நேசித்தவர்… இவரது இரத்தக் கண்ணீர் நாடகம் மட்டும் 5000 முறைக்கும் மேல் மேடையேறியிருக்கிறது…
ரத்தக் கண்ணீர் நாடகத்தில் அன்றாடம் செய்தித்தாளில் வரும் செய்திகளுக்கு இவர் அடிக்கும் கமன்ட்களைக் கேட்க கூட்டம் அலை மோதுமாம்…

இதுவரை 120 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்… இவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது… ஆனால் சமூகம் ஏற்றம் பெற ஒரு பேராசிரியன் போல் ஏராளமான விசயங்களைப் போதித்தவர்….

-நடிகவேள் எம்.ஆர் ராதா-

Shortlink:

Posted by on March 2, 2012. Filed under ஒலி பதிவுகள், ஒளி பதிவுகள். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *