பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 

எமது குப்பிழான் மண்ணின் மைந்தன், ஊர் பற்றாளன் திருவாளர் கந்தையா கிருஸ்ணன் அவர்களின் 100வது

பிறந்த நாளில் எமது மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடாவும் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது.

 

வாழ்க பல்லாண்டு.

———————

 

அன்பின் கிறிஸ்ணர்ஐயா 


இன்று உங்கள் அகவை 100


எங்கள் கிராமம் குப்பிளான். இந்த குப்பிழான் கிராமத்தின் அழியாத நிழல்களில் உங்கள் உருவமும் உள்வாங்கப்பட்டுள்ளது என்ற உண்மை செய்தியை எம் கிராமத்து காற்றை சுவாசிக்கும் அத்தனை மக்களும் இணைந்து இன்று அதை உங்கள் பிறந்தநாள் வாழ்த்து மடலாக உங்கள் காலடியில் சமர்ப்பணம் செய்யும் வேளையில் உங்கள் கிராமப் பற்றால் ஈர்க்கப்பட்ட நானும் இன்னும் பல ஆண்டுக்காலம் நோய் நொடி இன்றி வாழ வாழ்த்துகின்றேன்.

அன்புள்ள
நாகையா அப்பன்

—————————

நூற்றாண்டில் அடிபதிக்கும் பெற்றியன்

கண்ணன் திருநாமக்கிருஷ்ணரே வாழ்க உன்னை எண்ணி எண்ணி மகிழ்தின்றோம் செம்மண்பூமி குப்பிழானில் கண்ணியம்மிக்க கந்தையாவும் தெய்வானையும் இன்புடன் பெற்ற பெருமகனே நீ பல்லாண்டு வாழ்க தத்திதவழ்ந்து தளிர்நடைபோட்டு பள்ளிக்குச் சென்று சிலகாலம் படித்து பிள்ளர் சகோதர சகோதரிகளின் உயர்வு வேண்டி  சிங்கப்பூர் செள்றுபடித்து தபால் அதிபராக பணிபுரிந்தாய் செய்யும் தொழிலே தெய்வமெனக்கொண்டு பணிபுரிந்து பலர்பாரட்டையும் பெற்றாய் கூடப்பிறந்தோர் நிறைவாக வாழ அள்ளிக்கொடுத்தாய் தங்கை ஒருவரையும் சிங்கப்பூர் அழைத்து மணமுடித்து கொடுத்து மனமகிழ்ந்தாய் உற்றார் சுற்றாரை பேணிய உத்தமன் பசித்தோர் முகம்பார்த்து புசிக்க்கொடுக்கும் புண்ணியன் அனாதைகளுக்கு அன்னிக்கொடுத்த செய்யும் தொழிலே தெய்வமெனக்கொண்டு பணிபுரிந்து பலர்பாரட்டையும் பெற்றாய் கூடப்பிறந்தோர் நிறைவாக வாழ அள்ளிக்கொடுத்தாய் தங்கை ஒருவரையும் சிங்கப்பூர் அழைத்து மணமுடித்து கொடுத்து மனமகிழ்ந்தாய் உற்றார் சுற்றாரை பேணிய உத்தமன் பசித்தோர் முகம்பார்த்து புசிக்க்கொடுக்கும் புண்ணியன் அனாதைகளுக்கு அன்னிக்கொடுத்த  அற்ப்புதன் பெற்றதாயும் பிறந்தமண்ணும் நற்றவவானிலும் சிறந்தது எனக்கருதிய கண்ணியம் மிக்கவர் ஊர்என்றால் உருகிநிற்க்கும் உணர்வுடையோய் உனைபோற்றுகிறோம் உன்னோடுதோழ்ழோடு தோழ்நின்ற மனையாள் சரஷ்வதியையும் வாழ்த்துகன்றோம் போர் மேகம் சூழ்நது குண்டகள் கொட்டிக் கிராமம் சிதறிக்கிடக்க கதறிஅழுதாய்.உருக்காய் ஆலயங்களுககாய் உதவினாய் மண்ணில் சரிநத பள்ளியை கணடு கண்ணீர் சொரிந்தாய் சரிநதபள்ளி நிமர்ந்து நிற்க்க சபதம் பூண்டு பாரெங்கும் உள்ள குப்பழான் மக்களுடன்தொடர்பு கொண்டு ஊக்குவித்து உதவிய பெருமகனே தனிமனிதனய் பலலட்சம் நதிஉதவி நமிர்த்தி நிற்க்கும் கிருஷ்ணரே வாழ்க வாழ்க பல்லாணடு வாழ்க

 

குப்பிழான் தங்கம்
(திரு திருமதி தம்பித்துரை)

 

 

———————–

வாழ்த்துக்கள்! கிருஷ்ணர் ஐயா வாழ்த்துக்கள் !!

 

அவதாரத் தாத்தாவாய் எமக்கு நீர் கிடைத்த வரம்.

தொலை தூரம் வாழ்ந்தாலும் தொலையவில்லை ஈரம்

வேர்விட்ட தலம் தேடி கொடுக்கின்றாய் தினம் நாடி.

 

பேருக்கும் புகழுக்கும் பறப்பவர்கள் மத்தியிலே

ஊருக்கும் உறவுக்கும் மறுப்பின்றி கொடுப்பவனே

வாழி!    வாழி !!

 

சதம் கண்ட உம் வாழ்வின் வரலாறு

நிதம் ஆகும் எம் வாழ்வில் புது நூலாய்.

 

பாரோடித் திரவியங்கள் தேடினாலும்

ஊரோடித் தருவதுவே உண்மையின்பம்

இதை நூறாண்டு வாழ்ந்து சொன்னீர்

இனி ஊராண்டு சிறக்கச் செய்வர்.

 

பள்ளிக்கு மண்டபம் அள்ளிக் கொடுத்தனை.

அற்றோர்க்கும் பண்டங்கள் கிள்ளி  கொடுத்தனை.

மற்றோர்க்கும் சொல்லிக் கொடுத்தனை

கடிதத்தில் கட்டுரையில் வடிவான உரைநடையில்

கொடை செய்ய சொல்லிக் கொடுத்தனை.

எல்லைகள் பல தாண்டி எங்கோ இருந்தாலும்

அள்ளிக் கொடுக்கின்ற உந்தன் வழிவந்த

தில்லை மக்களும்  திறம்பட செய்கின்றார்

கள்ளமிலா உன் கரங்களாய் தொடர்க அவர்பணி.

 

தேருக்கும் மேலேறும் தெய்வத்தின் மேலானாய்! இனி

நூறுக்கும் மேலாக வாழிய பல்லாண்டு!!.

வாழிய! வாழியவே!!

 

-செல்வநாயகம் சற்சொரூபன்

 

Shortlink:

Posted by on October 18, 2017. Filed under செய்திகள், மண்ணிலிருந்து, முக்கிய செய்திகள். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *