ஆயிரந்தான் கவிசொன்னேன்…அழகழகாப் பொய் சொன்னேன் – நெஞ்சை உருக்கும் வைரமுத்து கவிதை

நம்மைப் பெற்று வளர்க்க தூக்கம், சாப்பாட்டைத் துறந்து, பிள்ளைகள் சந்தோஷமே தன் சந்தோஷம் என்று வாழும் தாயின் தியாகத்துக்கு எதுவுமே ஈடாகாது. நாற்பது வயதை எட்டிய ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அவரவர் அம்மாவை சரியாகப் பார்த்துக்கொள்ளவில்லையோ என்கிற குற்ற உணர்வு மனதுக்குள் தொக்கி நிற்கும். அப்படியொரு சந்தர்ப்பத்தில் கவிப்பேரரசு வைரமுத்து தன் தாய்க்காக முதல் முதலாய் அம்மாவுக்கு என்ற தலைப்பில் எழுதிய கவிதை இன்றளவும் பிரபலம். வைரமுத்துவின் கொஞ்சம் தேநீர் நிறைய வானம் தொகுப்பில் இந்தக் கவிதை இடம்பெற்றுள்ளது. நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் தாய்ப்பாசத்தின் அடி ஆழம் வரை பயணிக்கும் அவருடைய கவிதை வரிகள் `அம்மா’ எனும் அற்புதத்தை மீண்டும் ஒருமுறை உணர வைக்கும். பிள்ளை தனக்கு செய்யவேண்டிய கடமையைச் சரியாக நிறைவேற்றாவிட்டாலும், எங்கேயோ இருந்தாலும் `என் பிள்ளை நல்லாயிருக்கணும்’ என்று ஊர்க்கோயிலில் வேண்டுதல் வைக்கிற அந்த அம்மாக்களின் மனம் குளிரும் வண்ணம், அவர்கள் இருக்கும் இடம் தேடிச் சென்று நன்றி சொல்ல இந்தக் கவிதை பிள்ளைகளை இழுத்துச் செல்லும்; அவர்கள் விருப்பங்களை நிறைவேற்றத் தூண்டும்… வைரமுத்துவின் கவிதை வீடியோவாக 

 

 

Shortlink:

Posted by on May 14, 2017. Filed under செய்திகள். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *