குப்பிளான் வீரமனை கன்னிமார் கெளரியம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத் திருவிழா

யாழ். இன்று திங்கட்கிழமை(01) சரியாக முற்பகல்-11 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

வருடாந்த மஹோற்சவத்தின் கொடியேற்ற உற்சவத்திற்கான கிரியைகள் இன்று காலை-07.30 மணியளவில் கும்ப பூஜையுடன் ஆரம்பமாகியது.

வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து கொடியேற்றம் இடம்பெற்றது.

உள்நாட்டில் இருந்து மட்டுமல்லாமல் வெளிநாடு வாழ் குப்பிளான் மக்களும் ஏராளமாக நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பத்துத் தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் அடுத்த மாதம்-08 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை-07 மணிக்குச் சப்பறத் திருவிழாவும், 09 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல்-10.30 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் புதன்கிழமை முற்பகல்-11மணிக்குத் தீர்த் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

Shortlink:

Posted by on May 1, 2017. Filed under கன்னிமார் கௌரி அம்பாள். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *