குப்பிளான் தெற்குப் பகுதியிலுள்ள வாழைக்குலை திருட்டு

யாழ். குப்பிளான் தெற்குப் பகுதியிலுள்ள வாழைக்குலைத் தோட்டமொன்றில் இடம்பெறவிருந்த திருட்டு சம்பவம் பெண்ணொருவரின் சாதுரியத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று (14) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாயும், மகளும் தனித்திருந்த வேளையில் நபரொருவர் வெளியிடத்திலிருந்து வருகை தந்து குப்பிளான் வீதியோரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டிற்குப் பின்புறமாகவுள்ள வாழைத் தோட்டத்தில் வாழைக்குலைகளைத் திருடுவதற்கு முயற்சித்துள்ளார்.

இதன்போது வீட்டுக்கார பெண்ணின் மகள் திருடனைக் கண்டு கூக்குரலிட்டுக் கத்தியுள்ளார்.

இதனையடுத்துக் குறித்த நபர் தான் வெட்டிய வாழைக்குலையையும் கைவிட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பியோடியுள்ளார்.

சந்தேக நபர், வெளியிடத்திலிருந்து வருகை தந்து கடந்த சில மாதங்களாக நல்லெண்ணை வியாபாரம் மேற்கொண்டு வருவதாகவும், குறித்த வீட்டிற்கும் நல்லெண்ணை விற்பனை செய்யும் நபர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து ஊர் முழுவதும் சந்தேக நபரை தேடிய போதும் பிடிபடவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, குப்பிளான் பகுதியிலுள்ள வாழைக்குலைத் தோட்டமொன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரவு வேளையில் சில செவ்வாழைக் குலைகள் திருட்டுப் போயிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Shortlink:

Posted by on April 22, 2017. Filed under செய்திகள். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *