ஆஸ்துமா (Asthma) வைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை.

ஆஸ்துமா (Asthma) வைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை.

உங்களுக்கு தொடர்ச்சியான இருமல், மூச்சு விடுவதில் சிரமம், மூச்சுவிடும் போது ஒலி ஏற்படுதல் (Wheezing) போன்றவற்றிற்கு அடிப்படையான காரணமாக அமைவது ஆஸ்துமா (ASthma) என்று சொல்லப்படும் ஒரு நிலை ஆகும்.

இது சுவாசக் குழாய்களைப் பாதிக்கும் ஒரு பிரச்சினையாகும். இது சுவாசக்குழாய்களின் உட்சுவரில் அலர்ச்சி / ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களால் உண்டாகும் தாக்கம் காரணமாக ஏற்படுகிறது.

இதனால் சுவாசக்குழாய்களின் உட்சுவரின் சுற்றளவு குடைவடைகின்றது. இவ்வாறாக சுருக்கமடைந்த சுவாசக்குழாயினுடாக வழியானது செல்லும் போது மூச்சிறைப்பு / இழுப்பு (Wheezing) எனும் ஒலி ஏற்படுகின்றது. அத்துடன் மூச்சு விடுதலில் சிரமம், இருமல் மற்றும் மார்புப்பகுதியில் இறுக்கம் போன்றன ஏற்படுகின்றது.

இந்த அறிகுறிகள் குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை வேளையிலேயே அதிகமாகக் காணப்படும். இவை
தானாகவோ சில மருந்துகளின் பாவனையின் பின்னரோ மீண்டும் பழைய நிலைக்கு திரும்புகின்றது. நீங்கள் சில முறையான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஆஸ்துமா (Asthma) வைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.

ஆஸ்துமா (Asthma) வைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் Asthma வைத் தீவிரப்படுத்தும் காரணிகளைக் கண்டறிந்து அவற்றைத் தவிர்த்துக் கொள்வதாகும். நீங்களும், உங்கள் குடும்ப அங்கத்தவர்களும் இந் நோய் பற்றியும் அதனைத் தூண்டும் காரணிகள் பற்றியும் அறிந்திருப்பதாலும், அவற்றைத் தவிர்ப்பதாலும் உங்கள் ஆஸ்துமாவை (Asthma) நீங்கள் கட்டுப் பாட்டிற்குள் வைத்திருக்க முடியும்.

உங்களுக்கு சில ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களால் ஆஸ்துமா (Asthma) தீவிரமடையலாம். உதாரணமாக தூசு, பூக்களின் மகரந்தம், பூனை, நாய் போன்ற மிருகங்களின் முடி, தூசியிலுள்ள சிறு பூச்சிகள், காற்றிலுள்ள மாசுக்கள், புகை – உதாரணமாக சிகரெட் புகை, அடுப்பு, நுளம்புச்சுருள் புகை, சில வாசனை யூட்டிகள் (Perfumes). எனவே நீங்கள் இவற்றை தவிர்த் துக்கொள்ள வேண்டும்.

வீடு, படுக்கை விரிப்பு, போர்வை போன்றவற்றை வழக்கமாக கழுவி தூசு சேராதவாறு பார்த்துக்கொள்ளவும். தூசு உள்ள இடத்தை சுத்தம் செய்யும்போது நீங்கள் உங்கள் மூக்கை துணியால் கட்டி தூசியிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். உங்களுக்கு குளிரான கால நிலை மற்றும் குளிரூட்டப்பட்ட அறைகளால் ஆஸ்துமா (Asthma) தூண்டப்படலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில்பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது.

சிலவேளைகளில் மனஅழுத்தம், உணர்ச்சிவசப்பட்ட நிலை போன்றவற்றினால் உங்களுக்கு ஆஸ்துமா (Asthma) காணப்படலாம். இதற்கு தியானம், மூச்சுப் பயிற்சி போன்றன உதவியாக அமையும். நீங்கள் தொழில் புரியும் இடத்திலுள்ள சில பொருட்களாலும் ஆஸ்துமா (ASthma) தீவிரமடையலாம். உதாரணமாக மரத்தூள், சில இரசாயனப் பொருட்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு தொடர்ந்து அந்த ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களிலிருந்து விலகிக்கொள்வது நல்லது.

சிலவேளை தடிமன் / சளிப்பிடித்தல் போன்ற சுவாசத்தொகுதி தொற்று நோய்களும் உங்கள் ஆஸ்துமா (ASthma) தீவிரமடைய காரணமாகலாம். எனவே இவற்றுக்கு உடனடியாக சிகிச்சை பெறுவது நல்லது.

உடற்பருமன் அதிகமாக இருப்பதும் ஆஸ்துமா (Asthma) கட்டுப்பாடில்லாமல் இருப்பதற்கு காரணமாகலாம். எனவே உங்கள் உடல் நிறையை சரியானளவில் பேணவேண்டும்.

சில மருந்து வகைகளும் ஆஸ்துமா (Asthma) வைத்தூண்டலாம். எனவே நீங்கள் மருந்து ஏதும் பாவிப்பின் வைத்தியரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

நீங்கள் வைத்தியரை வேறு காரணங்களுக்காக சந்திக்கும் போதும் உங்களுக்கு ஆஸ்துமா (Asthma) இருப்பதைத் தெரியப்படுத்தவும்.

ஆஸ்துமா (Asthma) விற்கு வழங்கப்படும் மருந்து வழியான சிகிச்சை முறைகள்.

தற்போது அநேகமான ஆஸ்துமா (Asthma) மருந்துவகைகள் மூச்சினால் உள்வாங்கப்படுபவையாக (உறிஞ்சப்படுபவை Inhaler) வருகின்றன. இவைநேரடியாகசுவாசக்குழாய்களைச்சென்றடைந்து தொழிற்படுகின்றன. எனவே சிறிய அளவான மருந்தே இங்கு பயன்படுத்தப்படுகிறது.

அத்துடன் இவை உடலின் ஏனைய பாகங்களுக்குச் செல்வது குறைவு என்பதனால் இதனால் ஏற்படும்பக்க விளைவுகள் மிகமிகக்குறைவாகும்.

இம்மருந்துகள் 2 விதமான தொழிற்பாடுடையன.

Salbutamol, TCrbutalinc போன்ற மருந்துகள் நிவாரணமளிக்கும் மருந்துகளாகும். இவை மூச்சி றைப்பு (Wheezing), மூச்செடுப்பதில் கடினம், நெஞ்சு இறுக்கம் போன்ற குணம் குறி உள்ள போது பாவிக்கப்பட வேண்டியவை. இவை உடனடியாக நோய் நிவார ணத்தைத் தருகின்றன.

Beclomethasone போன்ற (Brown நிற உறிஞ்சி) மருந்துகள் ஆஸ்துமா (ASmatha) வைக் கட்டுப்படுத் தும் மருந்துகளாகும். இம் மருந்துகள் உங்களுக்கு ஆஸ்துமா (Asthma) அறிகுறி இருந்தாலும், இல்லாவிட் டாலும் தொடர்ச்சியாகப் பாவிக்க வேண்டும். ஏனெனில் இவை தொழிற்படுவதற்கு நீண்ட காலம் எடுக்கும். இம்மருந்தை வைத்தியரின் அறிவுரைப்படி குறித்தளவு மருந்தை குறிப்பிட்ட காலத்திற்குப் பாவிப்பதால் உங்கள் ஆஸ்துமா (Asthma) வைக்கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கலாம்.

நீங்கள் உங்கள் உறிஞ்சிமருந்துகளை (Inhaler) பெற்றுக் கொள்ளும் போது அவற்றின் பாவனை முறை பற்றி வைத்தியரிடம் தெளிவாக கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.

ஆஸ்துமா (Asthma) என்பது உங்கள் வாழ்க் கையைக் கட்டுப்படுத்தும் பாரதூரமான நோய் அல்ல. இது உங்களின்கட்டுப்பாட்டிற்குள்வைத்திருக்கக்கூடியஒரு விடயமாகும். இதனைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப் பதனால் நீங்கள் ஒரு சாதாரண வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம்.

Dr.திவாகரன் சிவமாறன்

Shortlink:

Posted by on April 23, 2017. Filed under மருத்துவம். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *