முதுமையும் வியாதிகளும்

முதுமையும் வியாதிகளும்:

குடும்பத்தினர் அனைவரின் அன்பையும் எதிர்பார்க்கும் காலம் இது. அது கிடைக்காதபோது, மனம் பாதிக்கப்பட்டு பல பிரச்சினைகள் ஏறப்டும். வயதாவதால், பார்வை மங்குதல், காது கேளாமை, தூக்கமின்மை, அடிக்கடி சிறுநீர் கழித்தல், மலச்சிக்கல், சோர்வு, கைகால் நடுக்கம்போன்றவை ஏற்படும்.இது மட்டுமல்ல. நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருந்தால், இதன் பாதிப்பால், பல நோய்கள் ஏற்படக்கூடும்.

‘டிமென்ஷியா’ எனும் மறதி நோய்,  ‘பார்க்கின்சன்’ எனும் நடுக்கம், புற்று நோய், சிறுநீர் அடக்க முடியாமை, ஆணாக இருந்தால், புரோஸ்டேட் வீக்கம், போன்றவை முதுமையில் ஏற்படக்கூடியவை. வயதாகிவிடால், உடற்பயிற்சி  செய்யவேண்டியது இல்லை என்ற எண்ணம் தவறு. தினந்தோறும், முடிந்தவரை, உடற்பயிற்சி மற்றும் நடைப் பயிற்சி அவசியம். இவை தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் போன்ற நோய்களை விரட்டும்.

ஆரோக்கியத்தைக் கொடுக்கும் பல வண்ண காய்கறிகளை உண்பதோடு , கீரைகள், நார்ச் சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உணவை மூன்று வேளையாக பிரித்து உண்பதைக் காட்டிலும், 5 அல்லது 6 வேளையாக  பிரித்து உண்ணலாம். இதன் மூலம், உடல் பருமன், இதய நோய்கள், எலும்பு தேய்மான பாதிப்பு, டைப் 2 சர்க்கரை  என பல நோய்களை தவிர்க்கலாம்.

சின்னம்மை, ரூபெல்லா, ப்ளூ, நிமோனியா, மஞ்சள் காமாலை, டெட்டனஸ், தொண்டை அடைப்பான், கக்குவான், இருமல் போன்ற நோய்களைத் தடுக்க தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளலாம். பல், கண், சிறுநீரகம், கல்லீரல், இதயம், காது போன்ற உறுப்புகளை, குறைந்தது ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.

வயதானவர்கள், வாரத்திற்கு ஒருமுறை, கை காலகளில் உள்ள நகங்களை வெட்டி , ஒழுங்காக பராமரிக்கவேண்டும். இல்லையேல், நகங்களுக்கு இடையே கிருமிகள் மற்றும் அழுக்குகள் சேர்ந்து, நோய்த் தொற்று ஏற்படும். நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் உடலில் காயங்களோ, புண்களோ வராதவாறு கவனமாக இருக்கவேண்டும்.

 

கண் வீக்கத்தைத் தவிர்க்க :

கண் வீக்கத்திற்கு பல்வேறு காரணங்கள் உண்டு.அதிகமான வேலைப்பளு, கண் அழுத்தம் மற்றும் ஹார்மோன் குறைபாடுகள் , மேலும் தூக்கமின்மை கண் வீக்கத்திற்கு முக்கிய காரணமாகும். கண் சோர்வாக இருந்தால், புத்துணர்வு இருக்காது. எனவே பின்வரும் குறிப்புகளைப் பின்பற்றி, பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

  • குளிர்ந்த நிலையில் உள்ள தேநீர்ப் பைகளை கணக்ளின் மேல் 10 நிமிடங்கள் வைத்திருக்கவேண்டும்.
  • ஒரு நாளைக்கு ஒருமுறை இவ்வாறு செய்தால் போதும்.
  • உருளைக் கிழங்கில் உள்ள எதிர்ப்பு சக்தியுடன் கூடிய மருத்துவவகுணம், கண் வீக்கத்தை எளிதாகக் குறைக்கும். உருளைக் கிழங்கை வெட்டி கண்களின் மேல் 10 நிமிடம் வைக்கலாம்.
  • வெள்ளரிக்காயிலுள்ள என்ஸைம் கண் வீக்கத்தைக் கட்டுப்படுத்தும். இதிலுள்ள மருத்துவத் தன்மை மிகுந்த பலன் அளிக்கும்.

 

Shortlink:

Posted by on April 14, 2017. Filed under மருத்துவம். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *