கண்ணீர் அஞ்சலிகள்

 

திரு பொன்னம்பலம் நடனசிகாமணி

(இளைப்பாறிய வீரகேசரி பத்திரிகை ஆசிரியர்)

Nada

 

எங்கள் நடனமே! எங்கு சென்றாய்!!

 

நடனம் எனச் செல்லமாய் அழைக்கும் நடனசிகாமணியே! எங்கு சென்றாயப்பா?

 

அன்னை குப்பிழான் பெற்ற செல்வமே! உன்னை நாம் மறவோம்.

துள்ளித் திரிந்து பள்ளிக்குச் செல்லும் வயதிலேயே ஊரை உயர்த்திட அரும்பாடுபட்ட அற்புதச் செல்வன் நீ! கிராம மக்களின் பல்துறை வளர்ச்சிக்கும் உந்து சக்தியாக இருப்பது நூல்நிலையம் என்பதை உணர்ந்து நூல் நிலைய வளர்ச்சியில் ஈடுபாடு கொண்டு உழைத்தாய். சிறந்த பத்திரிகை (வீரகேசரி) ஆசிரியராக பணி புரிந்த சீரிய சிந்தனையாளன். உள வளர்ச்சியோடு உற்சாகமாக உடல் வளர்ச்சியிலும் ஊர் மக்கள் சுறுசுறுப்பாக வாழ வெளியூர் வாசிகள் சங்கத்தினர் நடாத்திய விளையாட்டுப் போட்டிகளில் கிராம பிள்ளைகளை ஊக்குவித்துப் பங்கு பற்றச் செய்த பெருமைக்குரியவர்.

உதைபந்தாட்டப் போட்டியாளர்களை உற்சாகமாக விளையாடச் செய்யும் உற்சாக மருந்து நீயப்பா!

சிறந்த உதைபந்தாடட வீரன் நீ!

உடுக்கை இழந்தவனுக்கு உதவும் கைபோல ஆபத்தில் உதவும் அரிய குணம் படைத்த அற்புதன்!

காவற் துறையினரால் கைது செய்யப்பட்டோரை உன் சுவாரசியமான, தந்திரமான பேச்சால் விடுவித்த பெருமகன் நீ!

கல்லூரிகளில் அனுமதி கிடைக்காத மாணவர்களை அழைத்துச் சென்று அனுமதி பெற்று அவர்களை கல்வியில் வளரச் செய்த கருணையினன். புன்னகை சிந்தும் உன் பொன் முகத்தை மறக்க முடியுமா? மறக்கவும் கூடுமா?

ஊருக்காய் உழைத்த உத்தமனே!

அந்த பொல்லாத காலன் உன்னைக் கொண்டு சென்று விட்டான். உன் பிரிவில் கதறி அழும் மனைவி மக்கள் உற்றார் உறவினரோடு நாமும் துயருறுகின்றோம்.

உன் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

 

குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம்கனடா.

(ஆக்கம்: திருமதி தங்கமுத்து தம்பித்துரை)

_______________________________________________

எங்கள் மணி எம்மண்ணுக்காக ஒலித்து ஓய்ந்தது!  

Bell

எங்கள் மணி எம்மண்ணுக்காக ஒலித்து ஓய்ந்தது!

ஓய்ந்த மணி ஒலித்தபோது  தெறித்த  ஓசையினால் எம்மண்ணெல்லாம்  சிலிர்த்தது.

கற்றவர் சபைதனில்  உனக்கென ஒருவரலாறு எழுதினாய்.

எதிரியையும் நண்பனாக்கும்  உன் சாமர்த்தியம் அது உன்னுடன்  கூடப் பிறந்த கலை.

பேச்சில் வாள்வீச்சும் வரலாறும்  கலந்து  நீ ஆற்றும்   உரைநடையில்  எதிராளியும்  தலைவணங்கினர்.

எழுத்துத் துறையிலும்   உன்னுடைய  நகைச்சுவை தனிரகம்.  

வசீகரத்துக்கும்  உடல் வாகுக்கும்  பொருத்தம் பார்த்தால்  உன்னைபோல் ஒருவன் இனி பிறந்தால்  தான் என்று சொல்ல வைக்கும் தோற்றம் பெற்ற  எம் அன்புக்கும் பாசத்திற்கும்  உரியவனே! 

கிராமத்தின்  வழர்ச்சியில்  உன் கால்படாத இடமில்லை.

உன்னை ஆசானாய் ஏற்றவர்களாகி நம்மில் சிலர் உன்னுடைய அரும்பணியை எந்த நாட்டில் வாழ்ந்தாலும்  தொடர்ந்து  எமது கிராமத்திற்கு செய்ய  முன்னிற்போம்.

 பாடசாலை, சனசமூகநிலையம், கிராமமுன்னேற்றசங்கம், பலநோக்கூக் கூட்டுறவுசங்கம், விளையாட்டுகளகம்,  தனிகிராமமாக்க  எம்கிராமத்துக்கு எவ்வளவு பாடுபட்டீர் என்பதை நாம் அறிவோம்.

இத்தனை துறையிலும்  உன்னை  ஈடுபடுத்தி  உண்மையான கிராமத்தின் சுடராய் திகழ்ந்தாய்!

 இன்று நாம் அமைத்திருக்கும்  விக்கிநேஸ்வரா  விளையாட்டுகளகத்திற்கான மைதானம் அமைக்க  நாம் முற்பட்ட பொழுது உங்களால் தரபட்ட உதவிகளை  வேறு ஒரு கிராமபற்றாளனால்  நிச்சயம் தரமுடியாது  என்பதை  நாம் நேரில் கண்டோம்.

மதிநுட்பம் நிறைந்த மன்னன் என்பதை  நாம் அன்றே அறிந்தோம்.

  நம்பினோற்கும் நம்பாதோற்கும் இன்னல் வரும்போது நீயாக வந்து அவர்கள் முன்னே நடராசபெருமானாக  நிற்கும் அரியகுணம் படைத்தோனே!

எம் மணணின் மைந்தர்கள்  மனதில் என்றும் நீங்காத இடமொன்று உனக்குண்டு.

 

நன்றி.

நாகையா அப்பன்

 

Shortlink:

Posted by on August 23, 2016. Filed under அறிவியல். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *