குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையப் புதிய கட்டடத்திற்கான பால் காய்ச்சுதல், படம் வைத்தல் நிகழ்வுகள்

பெருமகிழ்ச்சியுடன் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம்-கனடா

 fb_img_1478914440590

 

எம் இனிய உறவுகளே உங்களால் வழங்கப்பட்ட அளப்பரிய ஒத்துழைப்பின் மூலம் தான் இன்று எமது மண்ணில் அழகான இருமாடிகளைக் கொண்ட ஒரு நூல் நிலையத்தை உருவாக்க முடிந்தது என்பதனை அனைவரும் அறிவீர்கள். நிதி உதவியும் ஊக்கமும் ஒத்துழைப்பும் நம்பிக்கையும் தந்து உதவிய உங்களுக்கு நன்றி சொல்வதற்கு எம்மிடம் வார்த்தைகள் இல்லை. இருப்பினும் நன்றியுடன் வாழ்த்தி மகிழ்கின்றோம்.

fb_img_1479509404574

தற்பொழுது முதற்கட்டமாக சமய, சம்பிராதயபூர்வமான பால் காய்ச்சுதல் நிகழ்வு முடிவடைந்துள்ளது. அடுத்த கட்டமாக தளபாடவசதிகளும் இதரவசதிகள், வேலைகள் யாவும் முடிக்கப்பட்டு உத்தியோகபூர்வமான திறப்பு விழா ஒன்றை அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் நடத்தலாம் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

fb_img_1478914455112

இதற்கு எம்மிடம் போதிய பணவசதி இல்லாமையால் வருகின்ற மார்கழிமாதம் 10ம் திகதி சனிக்கிழமை இராப்போசன நிகழ்வு ஒன்றை கனடாவில் நடாத்தி அதன்மூலம் நிதி திரட்டப்படும். மேலும் நிதி தருவதாக உறுதியளித்து இன்னும் தந்து முடிக்காதவர்களின் பணமும் பெறப்படும். (அவர்கள் தந்து முடிப்பார்கள் என்ற நம்பிக்கை இன்னமும் எமது எண்ணத்தில் உண்டு) புதிதாக தரவிரும்புவர்கள் கூட இன்னமும் தந்துதவலாம் என்பதனையும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

fb_img_1479509440997

இலங்கைப் பணத்தில் ஒரு இலட்சம் ரூபாவோ அல்லது ஆயிரம் கனேடியன் டொலர்களோ தந்து உதவியவர்களின் பெயர்களும் அவர்களின் ஞாபகார்த்தத்துக்கு உரியவர்களின் பெயர்களும் நூல்நிலையத்தின் உள்ளே பொறிக்கப்படும். அதற்கு குறைவான பணத்தை தந்த அனைவரின் பெயர்களும் ஆவணப்புத்தகத்தில் பதியப்பட்டு நூல்நிலையத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும். இவை யாவும் நூல் நிலைய திறப்புவிழாவக்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்படும்.

fb_img_1479509431708

எம்முடன் கைகோர்த்து நின்று எமது இலட்சியக்கனவையும் எமது மக்களின் நலத்தினையும் கருத்தில் கொண்டு நூல்நிலையத்தை கட்டிமுடித்து பால் காய்ச்சுதல் நிகழ்வையும் சிறப்பாக நடத்தி முடித்த குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிர்வாக சபைக்கும் பெரியவர்களுக்கும் செயற்பாட்டு, தொண்டர் குழுவினர்க்கும் பொது மக்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

fb_img_1479509474738

அன்புள்ள குப்பழான் மக்களே இது உங்கள் நூல் நிலையம் இதனை மக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் நடத்துவதும் நடத்துபவர்களுக்கு ஓத்துழைப்பு வழங்கி யாழ் மாவட்டதிலேயே இதுவும் ஒரு சிறந்த நூல்நிலையம் என்ற பெயரை ஏற்படுத்தித் தருவீர்கள் என்ற அசையாத நம்பிக்கை எமக்கு உண்டு.

fb_img_1479509489720

இதற்கான செயற்திட்டங்கள் எம்மிடம் உண்டு. நல்லதை மட்டுமே செய்து நன்மையைப் பெறுவோம். மிகவிரைவில் முழுமையாக இயங்க ஆரம்பிக்க வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திப்போம். எமக்கு நிதி தந்து உதவ முடிவில்லையே என்று மனம் கலங்காதீர்கள். உங்கள் ஊக்கப்டுத்தும் வார்த்தைகளும் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தி ஊக்கப்படுத்துவதும் எமக்கு பேருதவியாக இருக்கும்.

fb_img_1479509599621

fb_img_1479509589938

fb_img_1478914508763

 

எம்மண்ணின் உயர்வு ஒனறே எம் மன்றத்தின் குறிக்கோள்

குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடா.

 

fb_img_1479509252499 fb_img_1478914394095 fb_img_1479509285886 fb_img_1479509357648 fb_img_1478914411461 fb_img_1478913903589 fb_img_1478914380175 fb_img_1478914518615

 

 

 

 

Old News –

மேற்படி நிகழ்வுகள் எதிர்வரும் 02-11-2016 புதன்கிழமை சுப நேரம் காலை 9:30 – 11:10 மணியளவில் நடைபெறவுள்ளது.

 

milk-boiling

 

புலம்பெயர் நாடுகளில் வாழும் குப்பிழான் நலன்விரும்பிகளின் நிதியுதவியுடன் குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடாவின் ஒருங்கிணைப்பில் அமையப் பெற்ற இரு மாடிகளைக் கொண்ட இப் புதிய கட்டடமானது இந்த பால் காய்ச்சுதல் நிகழ்வுடன் அடுத்த அத்தியாயத்தில் கால் பதிக்கின்றது.

முதற் கட்டமாக நடைபெறும் இந்த சமய சம்பிரதாய நிகழ்வு சிறப்புற அமைய குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடா மனதார வாழ்த்துகின்றது.

 

received_10154408379457 received_10154408379637170 received_10154408379762170

Shortlink:

Posted by on November 18, 2016. Filed under கனடா, செய்திகள், மண்ணிலிருந்து, முக்கிய செய்திகள், விக்கினேஸ்வர சனசமூக நிலைம். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

One Response to குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையப் புதிய கட்டடத்திற்கான பால் காய்ச்சுதல், படம் வைத்தல் நிகழ்வுகள்

  1. சிறந்த சேவை மேலும் தொடரட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *