கோடி தந்த ஈஸ்வரர்கள்!

கோடி தந்த ஈஸ்வரர்கள்!Library

எமது குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையக் கட்டடப் பணிகளுக்காக எம் செம்மண்ணின் மைந்தர்கள் இணைந்து இதுவரையில் ஒரு கோடி ரூபாவுக்கு மேலாகத் தந்து சாதனை படைத்துள்ளர்கள். இவர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள் ஆக இல்லாவிடினும் கோடி தந்த ஈஸ்வரர்கள் ஆக போற்றப்பட வேண்டியவர்கள்.

 

மகத்தான ஒரு சமூக அரும்பணிக்காக தமது கடின உழைப்பின் ஒரு பகுதியை மனதார தந்த இவர்கள் என்றென்றும் எல்லோரதும் நன்றிக்குரியவர்கள். இவர்களது பணத்தின் ஒவ்வொரு சதமும் இரண்டு கட்டுக்கோப்பு மிக்க மன்றங்களின் உன்னிப்பான அவதானத்துடன் புதியவொரு இரு மாடி சனசமூக நிலையமாக நம் மண்ணில் மலர்ந்து கொண்டிருக்கின்றது.

 

திறப்பு விழாவுக்கான நாளை எண்ணிக் காத்திருக்கும் இந்த நிலையத்தின் இறுதிக் கட்டப் பணிகள், தளபாடங்கள், கணனிகள் என இன்னும் இருக்கின்றன.

 

இதற்கு தேவையான நிதியை யார் தருவார்கள்?

 

எம் மண்மீது அக்கறையும் பற்றும் கொண்ட யார் யாரெல்லாம் இன்னும் நிதி தரவுள்ளார்கள்?

 

$1000அல்லது அதற்க்கு குறைவான ஒரு தொகையாவது தரூவீர்களா?

 

அடுத்து வரும் தொலைபேசி அழைப்பு நிதி வழங்குவதற்கான அழைப்பாக இருக்குமோ… அல்லது

 

 

 

உங்களை அன்புடன் அழைத்து ஒரு சிறு தொகையேனும் பெற்று விடலாமோ… என எமது மன்ற உறுப்பினர்கள் தமது பொன்னான நேரத்தை ஒதுக்கி உங்கள் பெயர்களையும் தங்கள் மனதில் நிறுத்திக் காத்திருக்கிறார்கள்.

 

அன்புக்குரிய செம்மண்ணின் மைந்தர்களே! நீங்களாகவே அழைப்பீர்களா?

 

$1000அல்லது அதற்க்கு குறைவான ஒரு தொகையாவது தரூவீர்களா? தந்து கோடி தந்த ஈஸ்வரர்கள் வரிசையிலே

உங்கள் பெயரையும் சேர்ப்பீர்களா?

 

 

 

கோடியிலே  ஒழிவதற்கு

பேடியல்லர் !

கொடிபிடித்து நடந்தவர்கள்

கொடை எடுத்துத் தருபவர்கள்

கோடி தந்த ஈஸ்வரர்கள்!!

Shortlink:

Posted by on March 1, 2016. Filed under கனடா, செய்திகள், விக்கினேஸ்வர சனசமூக நிலைம். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *