புரோஸ்டேட் புற்றுநோய்

புரோஸ்டேட் சுரப்பியில் உள்ள சாதாரண செல்கள் அசாதாரண செல்களாக மாறி, கட்டுப்பாட்டை மீறி வளரும் போதும் புரோஸ்டேட் புற்றுநோய் உருவாகிறது. இந்தபராஸ்டேட்சுரப்பிவிந்துவின் ஒரு பகுதியான ஒரு திரவத்தை உருவாக்குகிறது. இந்த சுரப்பி,சிறுநீர்ப்பைக்குக் கீழே,
மலக்குடலுக்கு முன்னால் இருக்கும், மற்றும் யூரித்ராவை சுற்றி ஒரு வளையத்தை உருவாக்கும். இந்தயூரித்ரா என்பது உடலில் இருந்து சிறுநீரை உடலில் இருந்துகொண்டு செல்லும் ஒரு குழாய் ஆகும் .புரோஸ்டேட் புற்றுநோய் பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கே ஏற்படும். புரோஸ்டேட் புற்றுநோய் வெகுவாக காணப்பட்டாலும் இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கைகுறைவே ஆகும். புரோஸ்டேட் புற்றுநோய் மெதுவாக வளர்வதே இதற்குக் காரணம்.

புரோஸ்டேட் புற்றுநோயின் அறிகுறிகள்-இது முதலில் எந்த அறி குறிகளையும் காட்டாது . ஆனால் அறிகுறிகள் தெரிந்தால் அவை கீழ்காணுபவையாக இருக்கும் :
• வழக்கத்தை விட அடிக்கடி சிறுநீர்கழிக்கத் தோன்றுதல்.
• சிறுநீர் வெளியேற்றம் வழக்கத்தை விட மெதுவாக இருத்தல்.
• விறைப்புத்தன்மையில் சிக்கல்.
• சிறுநீர் அல்லது விந்துவில் இரத்தம்.

புரோஸ்டேட் புற்றுநோய் இல்லாத நிலைமைகளிலும் மேற்கண்ட அறிகுறிகள் காணப்படலாம். இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை உடனே அணுகவும்.

புரோஸ்டேட் strong – மருத்துவர்கள் PSA டெஸ்ட் எனப்படும் இரத்த சோதனையும், மலக்குடல் சோதனையும் புற்றுநோய் இருக்கிறதா என்று கண்டுபிடிக்க பயன்படுத்துவர். மலக்குடல் சோதனையில் மருத்துவர் அல்லது செவிலி அவர்களின் ஒரு விரலை புற்றுநோய் உள்ளவரின் ஆசனவாய் வழியாக மலக்குடல் வரை வைத்து அதன் சுவர்களின் மேல் அழுத்தி அசாதாரண பகுதிகள் புரோஸ்டேட்டில் உள்ளதா என்று சோதனைசெய்வார்கள்.

புரோஸ்டேட் புற்றுநோய் இருக்கிறது என்று மருத்துவருக்கு சந்தேகம் எழுந்தால் கீழ் காணும் பரிசோதனைகளில் ஒன்று அல்லது அதற்குமேற்பட்டசோதனைகளை செய்வர்:

• திசுசோதனை – ஒரு சிறிய மாதிரி திசுக்களைப் புரோஸ்டேட்டில் இருந்து எடுத்து மற்றொரு மருத்துவரிடம் கொடுத்து, அதை மைக்ரோஸ்கோப்பின் அடியில் வைத்து புற்றுநோய் உள்ளதா என்று சோதிப்பார்கள்.

• அல்ட்ரா சவுண்ட் , MRI ஸ்கேன், அல்லது மற்ற இமேஜிங் பரிசோதனைகள் – இமேஜிங் பரிசோதனை உடலின் உட்பகுதிகளைப் பாடமாக்கிக் கொடுக்கும்.அதன் மூலம் உடலில் உள்ள அசாதரண வளர்ச்சிகளை அறியலாம்.

புற்று நோயின் நிலைகள் சோதனை – புற்று நோயின் நிலை சோதனை மூலம் மருத்துவர்கள் புற்றுநோய் உடலில் எந்த தூரத்திற்கு பரவி உள்ளது என்று அறிவார்கள்.

புரோஸ்டேட் புற்றுநோய்க்கானச் சிகிச்சைகள் – புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆட்களுக்குப் பல விதமான சிகிச்சைகள் உள்ளது.அவை:

• “முழு கண்காணிப்பில் வைத்திருத்தல் மற்றும் காத்திருத்தல்” – இதை தீவிரகண்காணிப்பு என்றும் அழைப்பார்கள். இந்த முறையைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு உடனடியாக எந்த சிகிச்சையும் இருக்காது. ஆனால் புற்றுநோய் வேகமாக வளரத் தொடங்குகிறதா என்பதைச் சரிபார்க்க வழக்கமாக சோதனைகள் உண்டு. அப்படிவேகமாகவளரத்தொடங்கும்போதுதீவிர சிகிச்சைகள் தரப்படும்.

• அறுவைச்சிகிச்சை – இம்முறையின் மூலம் அறுவை சிகிச்சைகளின் வழியாக புரோஸ்டேட் சுரப்பியை முழுவதுமாக நீக்கி விடலாம்.

• கதிர்வீச்சு சிகிச்சை– கதிர்வீச்சின் மூலம் நோயால் பாதிக்கப்பட்ட செல்களை அகற்றும் முறையாகும். உடலை சுற்றிநகரும் ஒரு கருவியின் மூலம் இந்த கதிர்வீச்சுசிகிச்சை செய்யப்படும் அல்லது மருத்துவர் பராஸ்டேட்சுரப்பியின் மேலேயே கதிர்வீச்சை செலுத்துவார்.

 ஹார்மோன்தெரபிகள் – உடலில் உள்ளஆண் ஹார்மோன்களால் புரோஸ்டேட் புற்றுநோய் வளர்கின்றது. ஹார்மோன்தெரபபிஉடலில்இந்தஹார்மோன்களின் உற்பத்தி அளவை குறைத்து, புற்றுநோயை சுருங்கச் செய்கின்றது. இந்த தெரப்பியில் ஆண்களுக்கு மருந்துகள் தரப்படும். அல்லது அறுவை சிகிச்சைகள் மூலம் விதைப்பைகளைஅகற்றி விடுவார்கள். (ஆண் ஹார்மோன்ஸ் இந்த விதைப்பைகளில் தான் உருவாகின்றன.) ஆயினும் இம்முறை, முற்றிய நிலையில் புற்றுநோய் இருக்கும் ஆண்களுக்கே செய்யப்படும். ஆரம்ப நிலையில் புற்றுநோய் இருக்கும் சில ஆண்களுக்கும் இம்முறை,கதிர்வீச்சு மற்றும் அறுவைச் சிகிச்சைகளுடன் செய்யப்படும்.
மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை – புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும, மருத்துவரும் சேர்ந்தே எந்த சிகிச்சைமுறையை ஏற்பது என்று முடிவெடுக்க வேண்டும். சரியான சிகிச்சை கீழ்காணுபவற்றைச் சார்ந்தே இருக்கும்.

• புற்றுநோயின்நிலை
• பாதிக்கப்பட்டவர்களின் வயது
• பாதிக்கப்பட்டவர்க்கு இருக்கும் மற்ற மருத்துவப் பிரச்சனைகள்.
• பரிசோதனைகள் பற்றி பாதிக்கப்பட்டவரின் அபிப்பிராயம்.

பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் எடுக்கும் பரிசோதனை முறை பற்றிய தங்கள் கருத்தை முன்னரே மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். ஒரு சிகிச்சை முறைதரப்படும் போது கேட்க வேண்டியவை:

• இச்சிகிச்சை முறையால் பயன்கள் என்ன? நான் நீண்ட காலம் வாழ வழி செய்யுமா? அறிகுறிகளைத் தடுக்கவோ அல்லது குறைக்கவோ செய்யுமா?
• இச்சிகிச்சை முறையால் வரும்பின் விளைவுகள் என்ன?
• இம் முறையைத் தவிர வேறு முறைகள் உள்ளனவா?
• இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் வரும் விளைவுகள் என்ன?

சிகிச்சைக்குப் பின், சிலருக்கு மட்டும் அடிக்கடி மருத்துவர்கள் புற்றுநோய் மீண்டும் வந்துவிட்டதா அல்லது வேகமாக வளரத் தொடங்கிவிட்டதா என்று பரிசோதிப்பார்கள். பின் தொடர் சிகிச்சைகள்,BSA டெஸ்ட், சோதனைகள், திசுசோதனைகள், அல்லது இமேஜிங் டெஸ்ட் (படவரைவுசோதனை)ஆகியவற்றை உள்ளடக்கும்.
புற்றுநோய் மீண்டும் வந்தால், மேலும் அறுவைச்சிகிச்சை , கதிர்வீச்சுசிகிச்சை அல்லது ஹார்மோன்தெரபி ஆகியச்சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
சில நேரங்களில் கீமோதெரபி முறையும் இருக்கலாம் . கீமோதெரபி என்பது மருந்துகள் மூலம் புற்றுநோய் வாய்ப்பட்ட செல்களை அழிப்பதாகும்.

புரோஸ்டேட் புற்றுநோயை தடுக்கும் முறைகள் – புரோஸ்டேட் புற்றுநோய் வர அதிக வாய்ப்புகள் இருக்கும் ஆண்கள் சில நேரங்களில் நோயைத் தடுக்க உதவும் மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். உங்கள் முன்னோர்களுக்கு இந்த புற்றுநோய் இருந்திருந்தால், மருத்துவரை அணுகி இதைப் பற்றி பேச வேண்டும்.

ஆசிரியர்:
DR. S. அருண்சேஷாசலம்.M.D, DNB, MNAMS, DM
A. யோகேஷ்

Shortlink:

Posted by on December 21, 2015. Filed under மருத்துவம். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

2 Responses to புரோஸ்டேட் புற்றுநோய்

  1. siva master

    நிட்சயமாக எல்லா வயது வந்த ஆண்களும் தெரிந்து வைத்திருக்க வேண்டியவிடயம். குப்பிழான் நெற்றிக்கு நன்றி இது போன்ற மருத்துவ தகவல்கள் பல்வேறுபட்ட மக்களுக்கு பயன்படும் ஆகையால் முடியுமானால் மாதம் ஒருமுறையோ அல்லது வாரம் ஒருமுறையோ பதிவு செய்வது எல்லோர்க்கும் நன்மை பயர்க்கும் என நம்புகிறேன்.

  2. CHANDRAN

    PLEASE CONTINUE OTHER SICK PROBLEMS TO THANK YOU.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *