வாழை இலையில் அடங்கியுள்ள சத்துக்கள்!

banana

[ வியாழக்கிழமை, 20 ஓகஸ்ட் 2015, 08:42.50 மு.ப GMT ]
வளர்ந்து வரும் நாகரீக உலகில் மனிதர்கள் வாழை இலை சாப்பாட்டை மறந்துவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.என்னதான் வண்ண வண்ண கலர்களில் அழகிய பீங்கான் தட்டுகள், பிளாஸ்டிக் தட்டுகள் வந்துவிட்டாலும், வாழை இலை சாப்பாட்டுக்கென்று தனி ருசி இருக்கிறது.

நாம் வாழை இலையில் சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கிறது.

வாழை இலையில் உள்ள சத்துக்கள்

நார்ச்சத்து, உடலில் உப்புகளை சரியாக வைத்திட பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் செம்புச் சத்துக்கள், விட்டமின் ஏ.சி, மற்றும் கே, குடற்புண்களை ஆற்றும் ஆல்வான்பியின் கிருமிகளை அழிக்கும் பீனால், ரத்தம் உறைவதைத் தடுக்கும் சாலிசிலிக் அமிலம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

மருத்துவ பயன்கள்

1.முதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் (Germ Killer) ஆகும்.

2. வாழை இலையில் நீரை தெளித்து உணவுகளை வைத்து நாம் சாப்பிடும்போது அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும், உணவோடு சேர்ந்து நமது உடலுக்குள் செல்கிறது.

3. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

4. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.

5. சாப்பாட்டை வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.

6. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும்.

7. விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.

8. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவி வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.

6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.

7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.

வாழை இலை சாறு

வாழை இலைகளை கழுவி சிறுசிறு துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும்.

இதன் எடைக்கு எடை தேன் எடுத்துக் கொள்ள வேண்டும். வாழை இலை துண்டுகளை மிக்சியில் அடித்து, துணியில் பிழிந்து சாறு எடுத்து, தேன் சேர்த்து, 10 நிமிடங்கள் இளஞ்சூட்டில் அடுப்பில் வைத்து வடிகட்டி, சூடாறிய பின்பு 10 – 15 மி.லி தினமும் 2- 3 வேளை சாப்பிட்டு வரவும்.

இவ்வாறு குடித்து வந்தால் தோல் சுத்தமாகும்.

ஈறு வாய் புண்கள், வாய் துர்நாற்றம் ஆகியன நீங்கும்.

Shortlink:

Posted by on August 21, 2015. Filed under ஆயுள்வேதம், மருத்துவ செய்திகள், மருத்துவம். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *