கிராம வலம் வந்தார் குப்பிளான் சொக்கவளவு சோதி விநாயகர்

11224652_867742743301190_1270229592348828404_o

1941343_867742749967856_1770696330398665218_o

10838260_867742739967857_6214712344913646777_o

11023295_867742746634523_4090246299110300022_o

11114056_867742753301189_8826404077146811748_o

11224562_867742736634524_8720183409023470386_o .
யாழ்.குப்பிளான் மண்ணில் எழுந்தருளி குன்றாது நலம் வழங்கி அருள் பாலிக்கும் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் கிராம ஊர்வலம் இன்று 18 ஆம் தி சனிக்கிழமை இடம்பெற்றது.
முற்பகல் 11 மணிக்கு ஆலயத்திலிருந்து பக்தர்களின் அரோகராக் கோசத்துடன் ஊர்வலமாகப் புறப்பட்ட விநாயகப் பெருமான் குப்பிளான் மயிலங்காடு வீதி வழியாக குப்பிளான் சிவபூமி ஞான ஆச்சிரமம் அடைந்து குறிஞ்சிக் குமரன் வீதி வழியாக கன்னிமார் கெளரி அம்பாள் ஆலயம் அடைந்தது.
அதனைத் தொடர்ந்தது விவசாய வீதி வழியாக புன்னாலைக்கட்டுவன்-மல்லாகம் வீதி வழியாக மயிலங்காடு ஞானவைரவர் ஆலயம் அடைந்ததது.மீண்டும் அதே வீதி வழியாக குப்பிளான் மயிலங்காடு வீதி வழியாக ஏழாலை புளியடி வைரவர் ஆலயம் அடைந்தது.
அங்கிருந்து குப்பிளான் வட ப த்திரகாளியம்மன் ஆலயம் அடைந்து பிற்பகல் 6 மணியளவில் மீண்டும் தனது இருப்பிடம் சென்றடைந்தது.எம்பெருமானை வரவேற்கும் முகமாக பக்தர்கள் தங்கள் இல்லங்கள் தோறும் பூரண கும்பம் வைத்து மங்கள விளக்கேற்றி நைவேத்தியம் படைத்து வழிபட்டனர்.
ஆலயத்தில் நாளை காலை திருக் குளிர்த்தி (அன்னதானம்) சிறப்பாக இடம்பெறவுள்ளது.

Shortlink:

Posted by on July 19, 2015. Filed under சொக்கவளவு சோதிவிநாயகர். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *