சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

1

11119655_860950687313729_2952192749645161337_o

11225100_860950683980396_255475684536266133_o

11411718_860950660647065_3260004503614859931_o

11538002_860950703980394_904651834986679047_o

11539035_860950680647063_1800051438415741713_o

11709697_860950700647061_1339120995733395713_o

11713707_860950697313728_4732653964516237807_o

11722445_860950690647062_3786178809527025933_o
யாழ்.குப்பிளான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்
ஐந்தாம் குரவர் எனப் போற்றப்படும் ஆறுமுகநாவலர் பெருமானின் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்த சித்தாந்த பண்டிதர் மகான் காசிவாசி செந்திநாதையர் பிறந்ததால் பெருமையடைந்த யாழ்.குப்பிளான் மண்ணில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா இன்று சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
காலை 7 மணிக்கு விசேட அபிஷேக பூசைகள்,வசந்த மண்டபப் பூசைகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து காலை 11 மணிக்குக் கொடியேற்ற உற்சவம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பெருமளவு பக்தர்கள் புடைசூழ விக்கினந் தீர்க்கும் விநாயகப் பெருமான், வள்ளி தெய்வயானை சமேத முருகப் பெருமான்,சண்டேசுவரப் பெருமான் ஆகிய தெய்வங்கள் வீதி வலம் வரும் திருக்காட்சியும் இடம்பெற்றது.
தொடர்ந்து 12 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வேட்டைத் திருவிழாவும்,13 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 7 மணிக்கு சப்பறத் திருவிழாவும், மறுநாளான செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு இரதோற்சவமும்,அடுத்தநாள் புதன்கிழமை முற்பகல் 11 மணிக்குத் தீர்த்தோற்சவமும் இடம்பெறும்.
மஹோற்சவக் கிரியைகளை வித்வஜோதி,ஆகமகலாசூரி,கிரியா கலாபமணி சி.கிருஸ்ணசாமிக் குருக்கள் நிகழ்த்தி வருகிறார்.
மஹோற்வச தினங்களில் தினசரி காலைப் பூஜை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், முற்பகல் 11.30 மணிக்கு வசந்த மண்டபப் பூஜையும் இடம்பெற்று அதனைத்தொடர்ந்து சுவாமி வீதியுலா இடம்பெற்று காலைப் பூசை பகல் 12.30 மணிக்கு நிறைவு பெறும்.
மாலைப் பூஜை 5.30 மணிக்கு ஆரம்பமாகி 7 மணிக்கு ஆன்மீகப் பெரியோர்களின் சமயச் சொற்பொழிவும், 7.30 மணிக்கு வசந்தமண்டபப் பூஜையும் அதனைத் தொடர்ந்து சுவாமி வீதி வலம் வரும் நிகழ்வும் இ;டம்பெற்று மாலைப் பூஜை இரவு 9.30 மணிக்கு நிறைவு பெறும். மஹோற்சவ தினங்களில் தினசரி மதியம் அன்னதானம் நடைபெறவுள்ளது.

Shortlink:

Posted by on July 4, 2015. Filed under சொக்கவளவு சோதிவிநாயகர். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *