அமரர் திரு கந்தையா சண்முகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவு தினமும் விசேட மதிய உணவு வழங்கலும்

குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தின்
ஓய்வுபெற்ற அதிபர்
அமரர் திரு கந்தையா சண்முகம்
அவர்களின்
1ம் ஆண்டு நினைவு தினமும்
விசேட மதிய உணவு வழங்கலும்
(அனுசரனை :- கனடா விக்கினேஸ்வரா மக்கள் மன்றம்)

DSC02891

மேற்படி நிகழ்வு 30.03.2015 திங்கட்கிழமை அதிபர் திரு த. தவராஜா அவர்களின் தலைமையில் கிருஸ்ணன் மண்டபத்தில் நடைபெற்றது.இந் நிகழ்விற்கு ஓய்வுபெற்ற அதிபரும் எமது பாடசாலையின் முன்னைநாள் ஆசிரியருமான திருவாளர் பொன்னம்பலம் அவர்கள் நினைவு உரையை வழங்கி சிறப்பித்தார். அமரர் அவர்கள் அதிபர் பணி ஆற்றிய காலத்திலே தாமும்; சக ஆசிரியராகச் செயற்பட்டதையும் அமரர் அவர்கள் பாடசாலையின் சிறப்பை மேலோங்கச் செய்தவைகள் பற்றியும் எடுத்துரைத்தார்.

காலைப் பிரார்த்தனையுடன் ஆரம்பமாகிய இந் நிகழ்வில் அமரரின் திருஉருவத்திற்கு அஞ்சலி செலுத்தியதுடன் இரண்டு நிமிட அக வணக்கமும் செலுத்தப்பட்டது. அத்துடன் பாடசாலையின் உப அதிபர் திருமதி விஜயராணி கிருபாரூபன் அவர்களும் அமரரின் சேவைகள் பற்றியும் அவரது குடும்பச் சிறப்புக்களையும் வழங்கினார்.

தொடர்ந்து காலை 11.30 மணிக்கு அமரரது குடும்பத்தவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட விசேட மதிய உணவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பாடசாலைச் சமூகத்தினரும்; இறைவனைப் பிரார்த்தித்து நிற்கின்றோம். குடும்பத்தவர்களுக்கு எமது நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும் கனடா விக்கினேஸ்வரா மக்கள் மன்றத்தினருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

திரு த. தவராஜா
அதிபர்
(பாடசாலைச் சமூகம் சார்பாக)

DSC02888

 

DSC02889 DSC02890  DSC02892 DSC02893 DSC02894 DSC02895 DSC02900 DSC02901

Shortlink:

Posted by on March 30, 2015. Filed under செய்திகள், மண்ணிலிருந்து. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

One Response to அமரர் திரு கந்தையா சண்முகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவு தினமும் விசேட மதிய உணவு வழங்கலும்

 1. Jeeva Sanmugam

  Hi,
  On behalf of our family, we would like to thank School Principal Mr.Thavarajah, Vice Principal and staff for making it as a very successful event. We are delighted to see many little kids studying in our village school & please keep up the good work.

  Also hats off to Kuppilan Vigneswara Mandram (Canada) for taking this great initiative.

  Regards,
  Jeeva Sanmugam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *