வீடு வரை உறவு, வீதி வரை மனைவி,

alexanderவீடு வரை உறவு, வீதி வரை மனைவி,
காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ…

மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும்
கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்…பட்டார். பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை. சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.

ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து,
“என்னுடைய சாவு நெருங்கி விட்டது.
எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்” என்று கட்டளையிட்டார்.

அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக
வாக்களித்தனர். முதல் விருப்பமாக, “என்னுடைய
சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த
மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்.”

இரண்டாவது, ‘என்னைப் புதைக்கும் இடத்திற்குச்
செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த,
விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட
வேண்டும்.”

மூன்றாவதாக, “என் கைகள் இரண்டையும்
சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்.”
வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன.
என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.

அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து,
“அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக
நிறைவேற்றுகிறோம். ஆனால், இதற்கான காரணத்தை தாங்கள்
எங்களுக்கு விளக்க வேண்டும்” என்று கேட்க,

அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.

1. என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள்
தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும்
ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள்.
மருத்துவர்களால்எந்த ஒரு நோயிலிருந்தும்
ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது.
மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.
மரணம் ஒரு நிதர்சனமான உண்மை .

2. வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும்,
இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை யாரும்
தன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது.
அது சவக்குழி வரை மட்டும்தான்..! மனிதர்கள் வீணாக
சொத்துக்கள்,செல்வங்கள் போன்றவற்றின் பின்னால் செல்ல
வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!

3. உலகையே வென்றவன் இந்த மாவீரன் அலெக்ஸாண்டர்,
சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான்
இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக..

ஆம். நண்பர்களே, நாமும் அப்படித்தான் நம்ம
வாழ்க்கையை தற்போது வாழ்ந்து வருகின்றோம்.
நம் வாழ்க்கையே எப்போதும் பணம்,பணம்,பணம்தான்.
சதா நாம் அனைவரும் அதன் பின்னால் ஓடிக்
கொண்டே இருக்கின்றோம்.

நம் கவியரசு.கண்ணதாசன் அவர்களின் ஒருதிரைப்பாடல்.
அதை மறைந்த டி.எம்.எஸ்.அவர்கள் உயிரோட்டமாக பாடிஇருப்பார்.
“வீடு வரை உறவு, வீதி வரை மனைவி,
காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ, என்று..
என்ன அருமை நண்பர்களே,உண்மை
தானே…???

Shortlink:

Posted by on September 19, 2014. Filed under சிந்திக்க-சில-வரிகள். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *