குடும்பம்

காலவேகத்தினுள்
தொப்புள் கொடி உறவுகளுமா
அருந்து போகும்…..
கூடல்கள் இல்லையென்றால்
குடும்பங்கள் குலைந்து
கலைந்து போய்விடுமோ….
இதில் KUDUMBAM
ஊடலில் கண்ட உறவுகளை
என்னவென்று சொல்வதுவோ….
தாய் தந்தையரைத் தொட்ட
சாதி சனங்கள் கூட – இன்று
சிதரிப்போய்க் கிடக்கிறது…..
உறவுகளில்
குருதி ஓட்டத்தையேனும்
காணவில்லையே – இதில்
பாதைகளை எங்கே தேடுவது…..
“குடும்பம்”
ஒரு கோயிலென்றார்கள்!….
அது கோடி மையில் தூரம்
ஆனதேனோ?…..

Shortlink:

Posted by on March 25, 2014. Filed under சிந்திக்க-சில-வரிகள். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *