Home » Archives by category » படைப்புகள் » கதை
உழவுப் பரம்பரைகள்

உழவுப் பரம்பரைகள்

தோள்மீது கலப்பை தூக்கி நெடுந்தூரம் போயுழுது புண் செய் நிலத்தையும் நன்செய் நிலமாக்கி நெற்கதிர் வாசனையை காதலித்து மகிழ்ந்திருந்தார்கள் நம் எள்ளுப் பரம்பரைகள்.. வயலில் கதிரறுத்து, களத்தில் கதிரடித்து சிதறும் தானியத்தை பறவை குடும்பங்கள் கொத்தி உண்ண அந்தக் காதலில் நெகிழ்ந்திருந்தார்கள் நம் கொள்ளுப் பரம்பரைகள்.. பேய்களையும் பூதங்களையும் கதைகளாக்கிச் சொன்னாலும் மனிதனோடு மனிதமாய் கால்நடை விலங்குகளிடமும் காதலோடு மகிழ்ந்தே இருந்தார்கள் பாட்டன் பரம்பரைகள் முன்னோர்கள் விட்டுப்போன விளைநில வெளிச்சங்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் விலை நில […]

அப்பாவின் மண்வெட்டி

அப்பாவின் மண்வெட்டி

மண்வெட்டியின்றி அப்பாவை தனியே பார்க்கமுடியாது. அப்பா வயலுக்குப்போகும் போதெல்லாம் அவர் சட்டையில்லாத வெறுந்தோளில் சாய்ந்தபடி கூடவே போகும் ஒரு குழந்தையைப்போல. அப்பாவுக்கும் இதற்குமான உறவை எங்கள் நிலம் காடு கரை என யாவும் அறியும். அவர் இதை காய்ந்தநிலத்தில் லாவகமாக சாய்த்து இறக்கும்போது பூமி இத்தனை இலகுவானதா எனத்தோன்றும். ஒருநாள் வாங்கிய விவசாயக் கடனுக்காக வளர்த்த மரத்திலே தொங்கிப்போனவரை புதைக்கக்கூட குழிதோண்டியது இதோ இந்த மண்வெட்டியால்தான். விவசாயக்குடும்பத்தின் கடைசி சாட்சியாய் ஒவ்வொரு வீட்டிலும் மிஞ்சிவிடுகிறது வெட்ட மண் […]

Read More

பயணம் மட்டும் தொடர்கின்றது

பயணம் மட்டும் தொடர்கின்றது

வலிகளைக் கண்டு அஞ்சவில்லை வாழ்க்கை ஏனோ கசக்கின்றது துன்பம் எது என்று தெரிந்த பின்பும் வழிகள் தேடிட மறுக்கின்றது பாதைகள் எதுவும் தெரியவில்லை பயணம் மட்டும் தொடர்கின்றது  

Read More

இன்பம் துன்பம் – வழமை

இன்பம் துன்பம் – வழமை

காதலுக்கு தேவை – இளமை அனுபவத்துக்கு தேவை – முதுமை பண்பாட்டுக்கு தேவை – பழமை நட்புக்கு தேவை – தோழமை முன்னேற்றத்துக்கு தேவை -திறமை அளவான சொத்து இருந்தால் – இனிமை காதலில் தோற்றவன் விரும்புவது – தனிமை நம்பிக்கை துரோகம் ஒரு -கொடுமை வாழ்க்கையின் இன்பம் துன்பம் -வழமை

Read More

ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி

ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி

ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான். இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும். […]

Read More

படிக்காத பாமரன் முட்டாளும் அல்ல…..

படிக்காத பாமரன் முட்டாளும் அல்ல…..

படிக்காத பாமரன் முட்டாளும் அல்ல….. படித்தவர்கள் அனைவரும் அறிவாளிகளும் அல்ல…. நான் காய்கறி வாங்க கடைக்கு சென்றேன்.. அங்க எனக்கு முன் ஒரு பெரியவர் வாங்கி கொண்டிருந்தார்…. … வெள்ளை வேட்டி(பளுப்பு நிறமாக மாறியது).. சந்தனகலர் கட்டம் போட்ட சட்டை… கையில் ஒரு கருப்பு குடை… காலில் இப்பவோ அப்பவோ என உயிர் ஊசலாடி கொண்டிருக்கும் செருப்பு…. சில காய்கறிகளை வாங்கினார்.. கடையில் இருப்பவர் விலை சொன்னதும் இடுப்பில் கட்டி இருந்த பெல்ட்டிலிருந்து பணத்தை எடுத்து இருமுறை […]

Read More

கடினமான (தகாத, கெட்ட) வார்த்தை:

கடினமான (தகாத, கெட்ட) வார்த்தை:

கடினமான (தகாத, கெட்ட) வார்த்தை: ஒருமுறை சென்னை கடற்கரையில் ஒரு பொதுக்கூட்டத்தில் இரண்டு மணி நேரம் அண்ணல் காந்தியடிகள் பேசினார். … அவரைக் கண்டித்து பாரதியார் ஒரு கடிதம் எழுதினார். “Mr. Gandhi’ என்று அந்தக் கடிதத்தைத் தொடங்கி, “நேற்று சென்னை கடற்கரை கூட்டத்தில் நன்றாகப் பேசினீர்கள். ஆனால், உங்கள் தாய்மொழியில் பேசியிருக்கலாம். அதை விடுத்து ஆங்கிலேயர்களை விரட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட தாங்கள் ஆங்கிலத்தில் பேசியது மன வருத்தமாக உள்ளது.’ என்று கடிதத்தை முடித்திருந்தார். […]

Read More

வியாபாரி வியாபாரிதான்..!

பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். ‘ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!’ என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். ‘ஆறு பழங்கள் பத்து ரூபாய்!’ என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை! மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், ‘ ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!’ என்று […]

Read More

இருட்டில் கட்டிய தாலி

  அம்மன் கோவில் மணியடிக்கும்  போது இரவு நேரம் மணி பனிரெண்டை தாண்டி இருக்கும்.  மணி விடாமல் அடித்தது.  யாரோ கயிற்றை பிடித்து தொங்குவது போல் விடாமல் மணியோசை கேட்கவும் ஊரே எழுந்துவிட்டது.  பொதுவாக இப்படி கிராமத்தில் எங்கோ தீப்பிடித்து விட்டாலும், யார் வீட்டிலாவது திருடன் புகுந்து மாட்டிக் கொண்டாலோ ஊராரை கூப்பிட மணியடிப்பது வழக்கம்.இன்றும் அப்படி தான் எதாவது அசம்பாவிதம் நடந்திருக்கும் என்று ராகவன் எழுந்தான்.  பாதி தூக்கத்தில் இருந்த மனைவி தூக்கம் கலையாமலேயே ஏங்க எழுந்து […]

Read More