Home » Archives by category » எமது மண் பற்றி…
சொக்கர்வளவு சோதி விநாயகப்பெருமான் ஆலய தீர்த்த திருவிழா

சொக்கர்வளவு சோதி விநாயகப்பெருமான் ஆலய தீர்த்த திருவிழா

சொக்கர்வளவு சோதி விநாயகப்பெருமான் ஆலய தீர்த்த திருவிழா நன்றி ஜெகன் சுமதி பேரம்பலம் திலீபன் மோகனதாஸ் உங்களிடம் உள்ள எமது கிராமம் பற்றிய புகைபடம்கள் இருப்பின் எமக்குப் அனுப்பி வைக்கவும் எம்மால் உடன் பிரசுரிக்கப்படும்.

குப்பிழான் புல்லிலிருந்து உருவான பெயர் www.ourjaffna.com

குப்பிழான் புல்லிலிருந்து உருவான பெயர் யாழ்ப்பாண நகரில் இருந்து வடக்குப்பக்கமாகச் சுமார் எட்டு மைல்களுக்கு அப்பால் குடாநாட்டின் பிரதான வீதிகளான பலாலி வீதியில் புன்னாலைக் கட்டுவன் (வடக்கு) சந்தியினையும், காங்கேசன்துறை வீதியில் மல்லாகம் சந்தியினையும் இணைக்கும் வீதியில் (மத்திய ரேகை போன்று கிராமத்தினை ஊடறுத்துச் செல்லும் வீதி) கடும் சிவப்பு நிறமான செம்மண் வளம் கொழிக்கும் சிறு கிராமமே “குப்பிழான்” என்னும் சிற்றூர் ஆகும். மானிப்பாய்த் தொகுதியில் சுமார் இரண்டு சதுர மைல்களை பரப்பளவாகக் கொண்ட இக்கிராமத்திற்கு […]

Read More

குப்பிளான் வீரபத்திரர் கோவில் புதிய நிர்வாகிகள் தெரிவு!

குப்பிளான் வீரபத்திரர் கோவில் புதிய நிர்வாகிகள் தெரிவு! பொதுக் கூட்டம் இனிதே நடைபெற்று புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. 1) தலைவர்- திரு . நல்லதம்பி  சிவலிங்கம் 2)செயலாளர்- திரு.வை. குமாரசாமி 3)பொருளாளர்-திரு.வி. கிர்ஷனராஜ் அங்கத்தவர்கள்- ரவீந்திரன், ச. நிக்சன்  தி.சசிதரன்  சி. ராஜகுலந்திரன் நா. செல்வரத்தினம் வீரபத்திர கோவில் நிர்வாகிகளுக்கு   குப்பிளான். நெற்  வாழ்த்துகிறது! தகவல்: தி. சசிகரன்

Read More

1930 ஆண்டு தொடக்கம் 1938 ஆம் ஆண்டு வரை நான் கண்ட குப்பிழான்.

1930 ஆண்டு தொடக்கம் 1938 ஆம் ஆண்டு வரை நான் கண்ட குப்பிழான்.

எழுத்துருவாக்கம் க.கிருஷ்ணன் குப்பிழான் உறவுகள் அனைவரும் முன்னைய குப்பிழான் எப்படி இருந்தது பற்றி ஆவலுடன் இருப்பீர்கள். எனக்கு தெரிந்தவற்றையும் கேள்விப்பட்டவற்றையும் நான் எழுதுகிறேன். தனிப்பட்ட எவரையும் இழித்தோ உயர்த்தியோ எழுதவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.   வீதி, தெருக்கள் ஒன்று பலாலி – யாழ்ப்பாண வீதியில், அற்பையில் இருந்து மல்லாகம் போவதும் மற்றது மதவடியில் இருந்து குரும்பசிட்டி போவதும், தெற்கே மதவடியில் இருந்து பைங்கிலிட்டி வரைக்கும் மதவடியிலிருந்து கிழக்கு, வடக்கு, மேற்கு போவது கற்களால் போட்ட வீதிகள். […]

Read More

குப்பிழான் புல்லிலிருந்து உருவான பெயர்

புல்லிலிருந்து உருவான பெயர் யாழ்ப்பாண நகரில் இருந்து வடக்குப்பக்கமாகச் சுமார் எட்டு மைல்களுக்கு அப்பால் குடாநாட்டின் பிரதான வீதிகளான பலாலி வீதியில் புன்னாலைக் கட்டுவன் (வடக்கு) சந்தியினையும், காங்கேசன்துறை வீதியில் மல்லாகம் சந்தியினையும் இணைக்கும் வீதியில் (மத்திய ரேகை போன்று கிராமத்தினை ஊடறுத்துச் செல்லும் வீதி) கடும் சிவப்பு நிறமான செம்மண் வளம் கொழிக்கும் சிறு கிராமமே “குப்பிழான்” என்னும் சிற்றூர் ஆகும். மானிப்பாய்த் தொகுதியில் சுமார் இரண்டு சதுர மைல்களை பரப்பளவாகக் கொண்ட இக்கிராமத்திற்கு “குப்பிழான்” […]

Read More

எமது மண் பற்றி…சாந்தன்-

எமது மண் பற்றி…சாந்தன்-

      திருமூலரால் சிவபூமி என்றழைக்கப்பட்ட ஈழவளத் திருநாட்டின் வடமுனை எனக் கருதப்படுவது யாழ்ப்பாணக் குடாநாடு ஆகும். இது ஒரு சிறப்பான தரைத்தோற்றங்களைக் கொண்ட புவியியற் பிரிவாகும். அண்ணளவாக 1262 சதுர மைல் பரப்பளவைக் கொண்டது. யாழ் குடாநாடு சிறப்பான நிர்வாக வசதி கருதி வலிகாமம், யாழ்ப்பாணம், தென்மராட்சி, வடமராட்சி, தீவகம் என ஐந்து பிரிவுகளாக நிர்வகிக்கப்படுகிறது. குடாநாட்டின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது வலிகாமம் பிரிவாகும். குடாநாட்டின் வளம் மிக்க செழிப்பான பகுதிகள் வலிகாமம் பகுதியிலேயே அமைந்துள்ளன. […]

Read More

குப்பிளான் கிராமிய கீதம்

குப்பிளான் கிராமிய கீதம் வாழ்க எம் தாய்நிலம் வளம்மிகு குப்பிளான் வளர்புகழ் கொண்டென்றும் வாழியவே. (வாழ்க) பச்சைக் கம்பளம் விரித்திடும் பயிர்கள் பனை மா வாழை பலாவுடன் தென்னை இச்செகத்தினிலே எந்தையும் தாயும் ஆண்ட எம் செம்மண் நிலமே வளமே! (வாழ்க) அறநெறி சிவநெறி தவநெறி நின்றவர் அறிஞர் புலவர் நல்லாசிரியர் நிறை தொழில் உழவினைக் கொண்டவர் வாழ்ந்திட நீள் புகழ் கொண்டதும் எம் நிலமே. (வாழ்க) அருள்பொழி இறைதிருக் கோயில்கள் பலவும் அமைதியை வாழ்வினில் சேர்த்துவிடும். […]

Read More