Home » Archives by category » விவசாயம்
நவீன விவசாயம்

நவீன விவசாயம்

விவசாயம் என்பது கால்நடை வளர்ப்புடன் நெருக்கமான தொடர்புடையது. ஆனால் இன்று நவீன விவசாயம் என்ற பெயரால் இதன் கூட்டு அடித்து நொறுக்கப்பட்டுவிட்டது. அதன்காரணமாக மருந்து, மாத்திரைகள், டானிக் இவற்றைமட்டும் நம்பிவாழும் ஒரு மனிதனுக்கு ஈடாக விவசாயமும் நிறைய செலவு பிடிப்பதும் அதேசமயம் உயிரோட்டமில்லாததும் ஆகிவருகிறது!

ஆரோக்கியமான மிளகாய் நாற்றுகளை வளர்ப்பது எப்படி?

ஆரோக்கியமான மிளகாய் நாற்றுகளை வளர்ப்பது எப்படி?

      வீரிய ஒட்டு ரக மிளகாயை பயிரிட்டாலும் ஆரோக்கியமான நாற்றுகளை உற்பத்தி செய்து நடவு செய்வதன் மூலமே நல்ல மகசூல் பெற முடியும் எனவும், அதை செயல்படுத்தும் முறை குறித்தும் வேளாண் துறையினர் யோசனை கூறியுள்ளனர். மேட்டுப்பாத்தி நாற்றங்கால்: பாத்திகளை ஓரளவு நிழல்படியும் படியான இடத்தில் 10-15 செ.மீ. உயரத்தில் தயாரிக்க வேண்டும். அதன் அகலம் 1 மீட்டர், நீளம் 3 மீட்டர் வரை அமைக்கலாம். மண் மிருதுவாகவும், ஈரம் காக்கும் தன்மையுடையதாகவும் இருக்க வேண்டும். இதற்காக […]

Read More

வாழை இலை மஞ்சள் நிறமாகிறதா – வாடல் நோய்

வாழை இலை மஞ்சள் நிறமாகிறதா – வாடல் நோய்

வாழையில் மஞ்சள் நோய் என்பது மரத்தை ஒட்டு மொத்தமாக காலி செய்து நஷ்டம் அடையச் செய்யும். இதன் அறிகுறிகள் ஆரம்பத்தில் அடி இலையின் ஓரங்கள் மஞ்சளாக காணப்படும். நாளடைவில் இந்த மஞ்சள் நிறம் இலையின் மையப்பகுதி அல்லது நடுநரம்புக்குப் பரவி, கடைசியில் இலை முழுவதும் மஞ்சள் நிறமாக மாறுகிறது.பின்னர், இந்த மஞ்சள் நிறமானது அடி இலையிலிருந்து மேல் இலைகளுக்கும் பரவி வாழை மரத்திலுள்ள அனைத்து இலைகளும் மஞ்சள் நிறமாக மாறும்.பாதிக்கப்பட்ட மரத்தின் அடி இலைகள், இலைக்காம்பு பகுதிகள் […]

Read More

ஆட்டு எரு: சத்துமிக்க இயற்கை உரம்

ஆட்டு எரு: சத்துமிக்க இயற்கை உரம்

பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றால் ஏற்படும் பக்க விளைவுகள் மனித சமுதாயத்திற்கு பெரும் தீங்கை விளைவிக்கின்றன. அன்றாடம் பயன்படுத்தப்படும் காய்கறிகள் முதல் கடுகு வரை ஒவ்வொன்றையும் விளைவிக்க பயன்படுத்தப்படும் யூரியா போன்ற செயற்கை ரசாயன உரங்கள் உடலுக்கு பெரும் தீங்கை விளைவிக்கக் கூடியவை அதேநேரத்தில், ரசாயன உரங்களின் விலையும் தற்போது வேகமாக உயர்ந்து வருகிறது. செயற்கை ரசாயன உரங்களால் நமக்கு ஏற்படும் ஆபத்துகளைப் போக்க […]

Read More

பசுக்களின் வயதைக் கணக்கிடும் முறை

பசுக்களின் வயதைக் கணக்கிடும் முறை

மாடுகளின் வயதை அதன் கீழ்த் தாடையிலுள்ள எட்டு நிரந்தர முன் வரிசைப் பற்களின் வளர்ச்சியை வைத்து கணக்கிடலாம். மாடுகளில் நிரந்தரப் பற்களாக் கீழ்தாடையில் 4 ஜோடி அதவாது 8 முன் வரிசைப்பற்கள் இருக்கும், மேல் தாடையில் முன் வரிசைப்பற்கள் இருக்காது. பொதுவாக கலப்பின மாடுகளில் 2 வருட வயதில் மத்திய ஜோடி நிரந்தர முன் வரிசைப் பற்கள் முளைக்கும். 2 1/2 வருட வயதில் இரண்டாவது ஜோடி நிரந்தர முன் வரிசைப் பற்கள் முளைக்கும். 3 வருட […]

Read More

விவசாயிகள் விஞ்ஞானத்தைக் கத்துக்கணும்!

விவசாயிகள் விஞ்ஞானத்தைக் கத்துக்கணும்!

பாண்டிச்சேரியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இருக்கும் கூடப்பாக்கம் கிராமம் கொண்டாட்டத்தில் இருக்கிறது. ‘எங்க மாநிலத்துக்குக் கிடைச்சிருக்கும் முதல் பத்ம விருது இது” என்கிறார்கள் ஊர்க்காரர்கள். பூரிப்பில் இருக்கிறார் ‘பத்மஸ்ரீ’ வெங்கடபதி. ”தோட்டத்துக்குப் போலாமா?” என்று ‘ஹுண்டாய் வெர்னா’ காரில் செல்கிறார்.   வெங்கடபதி தோட்டத்தில் அவர் உருவாக்கிய புதிய ரக கனகாம்பரச் செடிகள் வேறு எங்கும் காணக் கிடைக்காத நிறப் பூக்களால் நிரம்பிவழிகின்றன. சவுக்கு மரங்கள் இயல்பான வடிவத்தைக் காட்டிலும் பல மடங்கு பெருத்து நிற்கின்றன. […]

Read More

மண்ணின் மகத்தான ஆற்றல்

மண் என்றால் என்ன என்று உனக்கு தெரியுமா? மண் என்றால் விஞ்ஞானம் ஆயிரம் விளக்கம் கொடுக்கும். உயிராற்றல் அடிப்படையில் மெய்ஞான உணர்வோடு கூறினால் மண் என்பது ஜீவாதாரம், அன்ன ஆதாரம், உயிர் ஆதாரம், இந்த உலகின் மிகப்பெரிய விசய மெய்ஞானமே மண் என்பதில் அடங்கும். மண் நீ பூமியில் பிறந்ததிலிருந்து அல்ல, நம் ஆதிவேரையும் அதுவே தாங்கி நம் சரீரம் முதலானவைகளின் பலன்களை இந்த உலக சொந்தபந்தங்கள் உறிஞ்சி உன் சக்கையை வெளியே தூக்கி எறியும்போதும் அந்த […]

Read More

முள்ளங்கி.

முள்ளங்கி.

            முள்ளங்கி.      தாவரக் குடும்பப் பெயர் -: BRASSICACEAE.     பயன்தரும் பாகங்கள் -: கிழங்கு, இலை.     வகைகள் -: வெள்ளை , சிவப்பு முள்ளங்கி     வளரியல்பு -: முள்ளங்கி சமைத்துண்ணக்கூடிய கிழங்கினம். மணற்பாங்கான இடத்திலும், வளமான மண்ணில் நன்கு வளரும். குளிர் காலத்தில் மலைப்பிரதேசங்களில் அதிக மகசூல் கொடுக்கும். இதன் கிழங்குகள் முட்டை வடிவத்திலும், சிலிண்டர் வடிவத்திலும், உருண்டை வடிவத்திலும் இருக்கும். கிழங்குகள் இழசாக இருக்கும் போதே பிடுங்கி உபயோகிக்க வேண்டும். […]

Read More

தாவரங்களின் எதிரி பார்த்தீனியம்

தாவரங்களின் எதிரி பார்த்தீனியம்

  மண்ணில் வளரும் மரம், செடி, கொடி, புல், பூண்டுகள் மலர்ச்சியுடன்              இருப்பதைப் பார்த்து மனமகிழ்ச்சி கொள்கிறோம். அதே வேளையில் மனித குலத்தை அச்சுறுத்தும் தாவரங்கள் இருப்பதை அறியும் போது இதயம் பதறுகிறது. தற்போது   ஒரு பயங்கர தாவரம் பரவி வருவதை நினைக்கும்போதுமனம் விசனப்படுகிறது. அந்த தாவரத்தை அழிப்பதற்காக அரசு இயந்திரங்கள் இப்போது முழுமையாக முடுக்கி விடப்பட்டுள்ளது. அந்த தாவரம் தான் தாவரத்தின் தீவிரவாதியாகக் கருதப்படும் பார்த்தீனியம். மனிதனுக்கும் கால்நடைகளுக்கும், பயிர் வகைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பயங்கரவாத […]

Read More

முயல் வளர்ப்பு

முயல் வளர்ப்பு

முயல் வளர்ப்பு குறைந்த இடத்தில் குறைந்த முதலீட்டில் குறுகிய காலத்தில் கணிசமான வருவாய் ஈட்டும் தொழிலாக விளங்கி வருகிறது. முயல்களைத் தோலுக்காகவும், இறைச்சி மற்றும் உரோமத்திற்காகவும் வளர்க்கலாம். சாதாரண தீவனத்தை உண்டு சிறந்த இறைச்சியாக மாற்றும் தன்மை முயலுக்கு உண்டு. நிலமற்ற விவசாயிகள், வேலை இல்லாத இளைஞர்கள் மற்றும் பெண்கள் போன்றோருக்கு முயல் வளர்ப்பு ஒரு பகுதி நேர வருமானம் ஈட்டி தரும் தொழிலாகும்.   இனங்கள் சின்செல்லா இந்த இனம் சோவியத் குடியரசு நாடுகளில் அதிகம் […]

Read More