Home » Archives by category » படைப்புகள் » சிந்திக்க சில வரிகள் !!! (Page 2)

ஒளவையார் அருளிய கொன்றைவேந்தன்

ஒளவையார் அருளிய கொன்றைவேந்தன்

1 – 20 கடவுள் வாழ்த்து கொன்றை வேந்தன் செல்வ னடியிணை என்று மேத்தித் தொழுவோ மியாமே. … (பொழிப்புரை) சிவபெருமானுக்குத் திருக்குமாரராகிய விநாயகக் கடவுளின் இரண்டு திருவடிகளையும் நாம் எப்பொழுதும் துதித்து வணங்குவோம். 1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் (பொழிப்புரை) தாயும் தந்தையும் முன்பு காணப்பட்ட தெய்வங்களாவார். 2. ஆலயம் தொழுவது சாலவு நன்று (பொழிப்புரை) கோயிலுக்குப் போய்க் கடவுளை வணங்குவது மிகவும் நல்லது 3. இல்லற மல்லது நல்லற மன்று (பொழிப்புரை) வீட்டிலிருந்து […]

Read More

திருமண நாள்

திருமண நாள்

அதி வேக உலகம் ஒயாத உழைப்பு நின்று பேசி நலம் விசாரித்து செல்ல கூட நேரமின்மை முந்தி செல்லும் சக மனிதனை தோற்கடித்து முன்னேற துடிப்பு இவற்றுகிடையில் மனைவி குழந்தை குடும்பம் என்பதெல்லாம் மூன்றாம்பட்சமாகி விட்ட எனக்கு அன்பை அவசரமாக பரிமாற ஒரு வாய்ப்பு திருமண நாள்

Read More

இன்னமும் சொட்டும் இரத்தம்

இன்னமும் சொட்டும் இரத்தம்

நிலைமாறி ஒருநாளும் . எதிர்காலம் பின்னாலே . நிகழ்காலம் வருவதில்லை தலைமாறி எழுஞ்சூர்யன் . தடுமாறி மேற்கென்ற . தாயுதய மாவதில்லை வலைமாறி நீர்பற்றி . மீன்நழுவி ஓடவிடும் . வழமைக்கு ஆவதில்லை தலைசீவி கொலையாக்கும் . தரம்கெட்ட மனிதகுலம் . தவறியும் திருந்தவில்லை இலை மாறி அழகோடு . இதழ்கொண்டு வாசமெழ . இனிதேனை சுரப்பதில்லை கலைமாறிக் கவின்பாடும . கனிபோலும் செந்தமிழின் . காண்சுவை கசப்பதில்லை அலைமாறி கரைதோன்றி . ஆழநடு கடல்நோக்கி . […]

Read More

வளைகாப்பு நடத்துவது ஏன்?

கர்ப்பிணி பெண்கள் கடைசி மூன்று மாதங்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டிய தருணம் . அக்காலத்தில் வைரஸ், பாக்டீரியா போன்ற நுண் கிருமிகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேப்பிலை காப்பு அணிவித்தனர். எதிலும் அவசரம் இல்லாமல் நிதானமாகச் செயல்படுவதற்குக் கை நிறைய கண்ணாடி வளையல் அணிவித்து அவை உடையாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று கூறினர். மேலும், கண்ணாடி வளையல் சத்ததிற்கு குழந்தையின் கேட்கும் திறன் அதிகரிக்கும்.

Read More

ஆட்டமா… தள்ளாட்டமா…! குடிகாரன் பேச்சு…! விடிஞ்சா போச்சு…!!

ஆட்டமா… தள்ளாட்டமா…! குடிகாரன் பேச்சு…! விடிஞ்சா போச்சு…!!

“”நாளை முதல் குடிக்க மாட்டேன், சத்தியமடி தங்கம், இன்னிக்கு ராத்திரிக்கு தூங்க வேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்,” என்ற பாடலை “அரை மப்பில்’ பாடியபடி மேலும் ஒரு “கட்டிங்’ போடுவதற்காக… மனைவியிடம் கெஞ்சுவது போல் கொஞ்சி பணம் கேட்பார் கணவர்.””ராத்திரி ஆனா… சனியனோட தொல்லையா போச்சு. இதெல்லாம் என்னைக்கு தான் உருப்படப்போகுதோ தெரியல,” என மனைவியின் அன்பு(?) பேச்சை பொருட்படுத்தாமல், “கட்டிங்’ போடுவதிலேயே கணவரின் கவனம் செல்லும்.தூங்குவது போல் போக்கு காட்டும் குழந்தைகள், பெற்றோரின் சண்டையை கவனித்து கொண்டிருக்கும். […]

Read More

விரும்பாதவனும் முடியாதவனும்

விரும்பாதவனும் முடியாதவனும்

`முடியாதவனை மன்னித்துவிடு; விரும்பாதவனைத் தண்டித்துவிடு’ என்கிறது இந்துதர்மம். தன்னால் செய்ய முடிந்த ஒன்றைச் செய்ய விரும்பாதவன் சமுதாய விரோதி… ஆனால், அதே காரியத்தைச் செய்ய விரும்பியும் முடியாதவன் அனுதாபத்திற்குரியவன். நாடிழந்த பாண்டவர்கள் துரியோதனனிடம் கேட்டது என்ன? `குறைந்த பட்சம் சில ஊர்களாவது, சில வீடுகளாவது கொடுங்கள்’ என்பதுதான். செய்ய முடியாதா துரியோதனனால்? முடியும்; ஆனால் விரும்பவில்லை. அதன் விளைவே பாரத யுத்தம். அனுமானும் விபீஷணனும் உரைத்தபடி சீதையைத் திரும்பக் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்திருக்க முடியாதா, இராவணனால்? முடியும்; […]

Read More

ஏய் ..மனிதா

ஏய் ..மனிதா

வதைக்காதுள்ளம் தெருக்கடையில் வதைக்கும் உள்ளம் மதுக்கடையில் வதைக்காதுள்ளம் வாங்க மறுத்து வதைக்கும் உள்ளம் வாங்கும் மனிதா ..! வாங்கும் பொருளை வாங்காது வதைபட்டுக்கிடக்கும் ஏய் ..மனிதா .. வாய்விட்டழுகுது உன் குடும்பம் வாய்விட்டு சிரிக்குது உன் ஊரே …. தெரிந்து செய்யுது உன் உள்ளம் தெரியாமல் தவிக்குது உன் குடும்பம் பசியால் அழுகுது உன் பிள்ளை பாழ்பட்டுக் கிடக்கிறாய் வீதியிலே … ஒளிரா விளக்கு உன் வீட்டில் மின் விளக்கொளியில் மதுக்கடைகள் கடின உழைப்பு உன் கையில் […]

Read More

லட்சணம் இழந்து விட்டது வாழ்க்கை

லட்சணம் இழந்து விட்டது வாழ்க்கை

லட்சங்கள் தேடி என்ன பயன் லட்சணம் இழந்து விட்டது என் வாழ்க்கை உறவுகளை நம்பி உயிர் கொடுக்க துணிந்தேன் உலகமும் உறவு என்று உண்டதை தவிர உள்ளதை உதறி கொடுத்த உனக்கு ஊர் ஊராக அலையும் நிலை உண்பதை தவிர அனைத்துக்கும் அவலங்களை நான் தேடினேனா? இல்லை அரவணைத்த உறவுகள் தந்ததா ? அன்போடு அரவணைக்க வேண்டி அலைகிறேன் நான் அறியாதவராய் உறவுகள் அழுத விழிகள் துடைத்தேன் அழுதிடும் எனை அறிந்தும் அலையவிடும் உறவுகள் அன்புதான் வெல்லும் […]

Read More

ஒரு வயோதிபரின் வேதனை .

ஒரு வயோதிபரின் வேதனை .

நாடி தளர்கிறது நடக்கவே முடியவில்லை ஓடிஓடி உழைத்த உடல் ஓய்ந்திங்கு கிடக்கிறது …! நாரி வலிக்கிறது நாடு முதுகு நோகிறது நாணி நிற்கின்றேன் நாதியற்று தவிக்கின்றேன் …! பிறவியிலே அற்ற குணம் பின்னாளில் தெரிகிறதே பிரிவு ஒரு சோகமல்ல பின்னாளில் நேர்ந்தகதி …! சேமித்து வைக்காமல் செலவழித்து திரிந்தேனே சேவை நலம் பாராமல் செருககுடனே நடந்தேனே…! சீ என்று எசுதற்கு சிறுபிள்ளை துணிகிறதே போ என்று சொல்வதற்கு பெரியோர்கள் முயல்கின்றனர் …! இறக்கும் தருணத்தில் இழுத்திங்கே கிடக்கின்றேன் […]

Read More

ஆண்டியும் அரசனாவான்

ஆண்டியும் அரசனாவான்

ஒரு அருவருப்புத்துளியில்தான் உனதும் எனதும் அறிமுகம் அறிமுகத்தில் மட்டுமே ஒற்றுமை ஆஸ்திகள் அதிகரித்தால் வேற்றுமை.. உடல் மண்ணறை சந்திக்கும் வரை தேடலோ முடிந்துபோவதில்லை அதற்கு நீயும் நானும் விதி விலக்கா என்ன..? மூச்சு நிறுத்தப்படும் போது – நாளை வாழ்ந்ததாய் ஒரு அடையாளம் வேண்டும் அதில்தான் இருக்கிறது நீயார் நான்யாரென்று நாளை நீயும் விறகு சுமக்கலாம் நானும் வெள்ளைமாளிகையில் அமரலாம் காலம்தான் எம்மை நிர்ணயிக்கிறது காசோ பணமோ அல்லவே… நீ அரசனானால் அரக்கன் உன் சொந்தமா என்ன..? […]

Read More