Home » Archives by category » படைப்புகள் » கவிதைகள் (Page 2)

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!

  அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! வசதியாகத்தான் இருக்கிறது மகனே… நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம் பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது, முன்பு நானும் இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு என் முதுகுக்குப் பின்னால் நீ கதறக் கதறக் கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது! முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட அன்று உனக்காக நானும் பொருத்தமான […]

Read More

காக்கையிடம் கற்கவேண்டிய மனிதம்

பணம் படைத்த பகவான்களுக்காக பட்டணத்திற்கு பாரிரங்கிவந்த இந்திரலோக சுந்தர விடுதிகளில் கலியுக கிருஷ்ண காமலீலைகள் கற்புக்கு பணம் என கணக்கு போடும் போதைக்காக பாதை மாறும் இலகணமில்லா இல்லறமிது இவர்கள் சொல்வதே வேதம் இதுதான் இன்றைய மார்க்கம் நாளைய பெரியமனிதர்கள் உருவாகும் உன்னத பூமியிது பட்டாடை தினமும் பலவுடுத்தி பல கோடி நவரத்தின நகை போட்டு பாரினை காத்திடும் கரும் கற்களுக்கு நாளும் நடத்திடும் அபிஷேகத்தில் வெளிசிந்தும் கழிவை கரம் சேர்த்து காத்திருந்து பருமும் ஏழையை போல […]

Read More

பிறந்து ஒரு இடம்

பிறந்து ஒரு இடம்

பிறந்து ஒரு இடம். வளர்ந்தது பல இடம். படித்தது ஒரு சில இடம் பசியால் துடித்தது பல இடம். பயத்தால் பதுங்கியது பல பல இடம். வாழ்க்கையை இழந்தோம் வருமானத்தை இழந்தோம். மண்ணின் காதலை இழந்தோம் கன்னியின் கற்பை இழந்தோம். சொந்த உறவுகளை இழந்தோம் சொத்துப் பத்துக்களை இழந்தோம். அவயவங்களை இழந்தோம்அநாதையாய்…. அகதியாய் அலைந்தோம். சிங்கள அரசின்… பார்வையில் சிக்கினோம் மின் கம்பி முகாமிற்குள்… வதை பட்டோம். தூங்கிய நாட்கள் அரிது. துயரத்தில் ஆழ்ந்த நாட்கள் அதிகம். […]

Read More

அம்மா கவிதை-வைரமுத்து

அம்மா கவிதை-வைரமுத்து

ஆயிரம் தான் கவி சொன்னேன் …. அழகா அழகா பொய் சொன்னேன்…. பெத்தவளே உன் பெரும ஒத்தவரி சொல்லலியே …. காத்து எல்லாம் மகன் பாட்டு…. காயிதத்தில் அவன் எழுத்து…. ஊரு எல்லாம் மகன் பேச்சு…. உன்கீர்த்தி எழுதலியே…. எழுதவோ படிக்கவோ இயலாத தாய் பத்தி எழுதி என்ன லாபம்ன்னு எழுதாம போனேனோ…. பொன்னையாதேவன் பெத்த பொன்னே குல மகளே…. என்னை புறம் தள்ள இடுப்பு வலி பொறுத்தவளே…. வைரமுத்து பிறபான்னு வயித்தில் நீ சுமந்தது இல்ல…. […]

Read More

செல்வக்குமார் – நீ எம் செல்லக்குமார்

செல்வக்குமார் – நீ எம் செல்லக்குமார்

\நேற்றையா நினைவுகளை இங்கே அழுத்தி கேட்கவும்  (ஒலி/Audio) நேற்றையா நினைவுகளை இங்கே அழுத்தி கேட்கவும்  (ஒலி/Audio) செல்வக்குமார் – நீ எம் செல்லக்குமார் எம்மோடு நீ எத்தனை நாட்கள் இனி ….. கண்ணீரோடு  நான் எழுதும் கடைசிக் கடிதம் உன் ஆன்மாவுக்கு அன்று மதிலில்  இருந்தோமடா என்றும் மனதில் இருப்போமடா என்னோடு பேச சொல்லுங்கள்  என்றாய் நாம் பேச  முன்னமே – நீ ஏன் பேசாமல் போனாய் ஒரு கோப்பை  தேனீர் ஒரு கொத்து ரொட்டி ஒரு போத்தல் […]

Read More

இன்னமும் சொட்டும் இரத்தம்

இன்னமும் சொட்டும் இரத்தம்

நிலைமாறி ஒருநாளும் . எதிர்காலம் பின்னாலே . நிகழ்காலம் வருவதில்லை தலைமாறி எழுஞ்சூர்யன் . தடுமாறி மேற்கென்ற . தாயுதய மாவதில்லை வலைமாறி நீர்பற்றி . மீன்நழுவி ஓடவிடும் . வழமைக்கு ஆவதில்லை தலைசீவி கொலையாக்கும் . தரம்கெட்ட மனிதகுலம் . தவறியும் திருந்தவில்லை இலை மாறி அழகோடு . இதழ்கொண்டு வாசமெழ . இனிதேனை சுரப்பதில்லை கலைமாறிக் கவின்பாடும . கனிபோலும் செந்தமிழின் . காண்சுவை கசப்பதில்லை அலைமாறி கரைதோன்றி . ஆழநடு கடல்நோக்கி . […]

Read More

தைபிறந்தால் வழி பிறக்கும்

தைபிறந்தால் வழி பிறக்கும்

தைபிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி -ஆனால் தைபிறந்தால் விழாக்களும் வந்துவிடும் என்பது இந்து மதத்தின் மொழி தைப்பொங்கல் தான் ஆரம்பம் இது தமிழனின் திருநாள் உழவர்களின் திருநாள். சூரியனுக்கும் கலப்பை இழுக்கும் காளைகளுக்கும் நன்றி செலுத்தும் நாள் அதிகாலை வேளையிலே முற்றத்தில் கோலமிட்டு பொங்கல் பொங்கி, கரும்பு பழங்கள் போன்றவை வைத்து சூரியனுக்கு படையல் செய்யும் திருநாள். சூரியன் உதிக்கும் வேளையிலே அனைத்துமக்களும் ஒன்றாக அவனை நோக்கி நன்றி செலுத்தும் விழாதான் இந்த பொங்கல் விழா […]

Read More

மனங்களின் ஏக்கம்….

மனங்களின் ஏக்கம்….

கிடைத்ததோடு வாழ்ந்து பிறருக்கும் நற்கொடையளித்து மகிழ்ந்தானன்று மனிதன் இல்லாதவற்றுக்குக்கெல்லாம் ஆசைகொண்டு இல்லாதவனிடமே கொள்ளையடிக்கிறானின்று பணந்தான் வாழ்வென்று பணத்துக்காக எதையும் இழக்கத்துணிந்து இழிவுறும் இயல்புகொண்ட மானிடர்கள் ஆட்சிசெய்யும் பேராசையுடன் யார் எக்கேடு கெட்டாலும் என்னலம் என்னோக்கமென்று கொன்று குவிக்கும் அசுரர்கள் வாழ்வளிக்கப்படாத அனாதைகள் வாழ்விழந்த விதவைகளென அடிப்படைத் தேவைகளுக்காய் – இன்று கண்ணீர்வடிக்கிறது உயிர்கள் சுதந்திரக் காற்றைத்தேடி சுற்றுச் சூழலை சுமைகளாய்க் கொண்டு இன்னல்களுக்கு அடிமைகளாகி அவதியுறும் அப்பாவிகள் இரத்தக் கறைகளின் நடுவே உயிர்களைத் தேடும் உயிர்களும் மனசாட்சியை […]

Read More

எருமையின் கனவு

எருமையின் கனவு  (எருமையும் எஜமானனும் ) அம்மா ! ….. சண்டித் தனம் பண்ணக் கூடாது .. அம்மா ! பிடிவாதம் பண்ணக் கூடாது.. அம்மா ! முரட்டுத் தனம் பண்ணக் கூடாது .. எரக் கழுத்தில் வைத்தால் குதிக்கக் கூடாது. இல்லை என்றால்…. உதைத்தான் விழும். இல்லை என்றால் விற்று விடுவார்கள்… நம்மை யாருக்காவது… ( பசு, எருது விடம் எருமையின் உரையாடல் ) உனக்கு மட்டும் பொங்கல் ? எங்களுக்கு ஏன் இல்லை ? […]

Read More

குப்பம் எல்லாம்

  குப்பம் எல்லாம் குப்பி விளக்காய் -என் அப்பன் ஆத்தா எல்லாம் அகல் விளக்காய் எழை மாணவரின் மனங்களில்  நான் ஒளிவிளக்கு என் ஒளியில் படித்தவர் ஆயிரம் பேர்  தெருவினில் போட்டார்கள்    தெருவிளக்கு எனக்கும் வருத்தமுண்டு விட்டில் பூச்சிகள் சாவினில்  அவர்களின் சாபமோ மின்சாரத்தின் மோகமோ எண்ணெய் விட்டவாரெல்லாம்  என்னை   விட்டெறியா துருப்பிடிக்காமல் இன்றுவரை நான் எண்ணெய் விட்டவரின்  ஈரம் என் நெஞ்சினில் இருப்பதனால்   குப்பிழான் மேகவர்ணன்  

Read More