Home » Archives by category » படைப்புகள்
உழவுப் பரம்பரைகள்

உழவுப் பரம்பரைகள்

தோள்மீது கலப்பை தூக்கி நெடுந்தூரம் போயுழுது புண் செய் நிலத்தையும் நன்செய் நிலமாக்கி நெற்கதிர் வாசனையை காதலித்து மகிழ்ந்திருந்தார்கள் நம் எள்ளுப் பரம்பரைகள்.. வயலில் கதிரறுத்து, களத்தில் கதிரடித்து சிதறும் தானியத்தை பறவை குடும்பங்கள் கொத்தி உண்ண அந்தக் காதலில் நெகிழ்ந்திருந்தார்கள் நம் கொள்ளுப் பரம்பரைகள்.. பேய்களையும் பூதங்களையும் கதைகளாக்கிச் சொன்னாலும் மனிதனோடு மனிதமாய் கால்நடை விலங்குகளிடமும் காதலோடு மகிழ்ந்தே இருந்தார்கள் பாட்டன் பரம்பரைகள் முன்னோர்கள் விட்டுப்போன விளைநில வெளிச்சங்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் விலை நில […]

அப்பாவின் மண்வெட்டி

அப்பாவின் மண்வெட்டி

மண்வெட்டியின்றி அப்பாவை தனியே பார்க்கமுடியாது. அப்பா வயலுக்குப்போகும் போதெல்லாம் அவர் சட்டையில்லாத வெறுந்தோளில் சாய்ந்தபடி கூடவே போகும் ஒரு குழந்தையைப்போல. அப்பாவுக்கும் இதற்குமான உறவை எங்கள் நிலம் காடு கரை என யாவும் அறியும். அவர் இதை காய்ந்தநிலத்தில் லாவகமாக சாய்த்து இறக்கும்போது பூமி இத்தனை இலகுவானதா எனத்தோன்றும். ஒருநாள் வாங்கிய விவசாயக் கடனுக்காக வளர்த்த மரத்திலே தொங்கிப்போனவரை புதைக்கக்கூட குழிதோண்டியது இதோ இந்த மண்வெட்டியால்தான். விவசாயக்குடும்பத்தின் கடைசி சாட்சியாய் ஒவ்வொரு வீட்டிலும் மிஞ்சிவிடுகிறது வெட்ட மண் […]

Read More

காதல்…

காதல்…

உண்ணாவிரதமிருந்து அடைந்தேன் உன்னை அடைந்த பின்பும் விரதம் இருக்கிறேன் உனக்கு நீண்ட ஆயுள் வேண்டி… வருந்துவது என் உடல் ஆனாலும் வருத்துவது உனக்காகையால் மனம் நிம்மதியும் மகிழ்ச்சியுமே அடைகிறது என்றும்…

Read More

அடைந்திடா ஓட்டமெதற்கு

அடைந்திடா ஓட்டமெதற்கு

ஒடுகிறாய் ஓடுகிறாய் எதைத்தேடி ஓடுகிறாய் உன் வாழ்நாளில் எதுவரை ஓடுவாய் நீ பயந்த உன் எதிர்காலம் உன்னை துரத்துகிறதென்று உன்னால் முடியுமட்டும் ஓடுகிறாயா?? துர்ப்பாக்கிய சாலியாய் துயர்களைக் கண்டும் துன்பங்களைக் கண்டும் துயில் கொள்ள இடம்தேடி ஓடுகிறாயா?? இல்லை நிம்மதி வேண்டுமென்றும் நிலையான சுகம் வேண்டுமென்றும் வேறுலகில் கிடைப்பதாய் கண்ட கனவின் பின்னால் ஓடுகிறாயா?? நீ கோழையென்ற ஏளனப்பார்வையுடன் உன் உடமைகளும் உயிர்களும் உன் நிலை நினைத்துக் கேலிசெய்கிறது அவைகளைவிட்டு எப்படி ஓடுகிறாய்?? ஓடிவிடத்தான் முடிந்ததா?? உன் […]

Read More

பயணம் மட்டும் தொடர்கின்றது

பயணம் மட்டும் தொடர்கின்றது

வலிகளைக் கண்டு அஞ்சவில்லை வாழ்க்கை ஏனோ கசக்கின்றது துன்பம் எது என்று தெரிந்த பின்பும் வழிகள் தேடிட மறுக்கின்றது பாதைகள் எதுவும் தெரியவில்லை பயணம் மட்டும் தொடர்கின்றது  

Read More

நட்புக்காக

நட்புக்காக

நட்புக்காக எதையும் கொடுக்கலாம் உண்மை நட்பானால் உயிரையும் கொடுக்கலாம் நட்புக்கு இல்லை எல்லை நல்ல நட்பு கிடைத்துவிட்டால் இறைவன் கூட இல்லை……!

Read More

சிந்திக்க-சில-வரிகள்

சிந்திக்க-சில-வரிகள்

Read More

நூலகம் ஒர் ஆலயம் அல்ல

நூலகம் ஒர் ஆலயம் அல்ல

நூலகம் ஒர் ஆலயம்  அல்ல           கவிஞர் இரா .இரவி நூலகம் ஒர் ஆலயம்  அல்ல அல்ல அதற்கும் மேலான ஒர் சொல் தேடுகின்றேன் ஆலயத்தில் வேற்று மதத்தவருக்கு அனுமதி இல்லை நூலகத்தில் எந்த மதத்தவருக்கும்  அனுமதி உண்டு ஆலயத்தில் சாதிச் சண்டைகள் நடந்தது உண்டு நூலகத்தில் சாதிச் சண்டைகள் நடப்பது இல்லை ஆலயத்தில்  சில சாதியினரை அனுமதிப்பது இல்லை நூலகத்தில் எல்லாச் சாதியினருக்கும் அனுமதிஉண்டு ஆலயத்தில் மற்ற ஆலயத்தினர் வந்து இடிப்பது உண்டு நூலகத்தில் மற்ற  நூலகத்தினர் […]

Read More

நான் நனைந்த மழை…!

நான் நனைந்த மழை…!

கார்மேகம் கழற்றி எறிந்துகொண்டிருந்தன தன் உடைகளை மண்ணில் மழையாய்…! குடையின்றி ஒதுங்கியதால் உடையும் நனைந்துவிட்டன இலையாய்…! நள்ளிரவு என்பதால் அக்கம்பக்கம் யாருமில்லை ஒரு அநாதை நாயைத்தவிர…! மனதோடு ஒரு மாற்றம் நடுங்கிய விரல்நடுவே சிகரெட் உட்கார அடம்பிடித்தது.. மூட்டிய தீயில் மூச்சும் இனித்தது…! பசித்த மண் மழைச்சோறு உண்ட களைப்பில் மண்வாசனை தந்துகொண்டிருந்தது…! மிஞ்சிய மழையை தேங்கியநீராய் சேமித்து வைத்து சேறு தயாரித்தது…! குருத்தோலை தொட்டமழை தென்னம் கருவோடு கொஞ்சிக்குலாவி பழுத்தோலை வழியாக – என் தோள்வந்து […]

Read More

TAMIL SPEECH

Read More