Home » Entries posted by குப்பிளான்
Stories written by theebanm

அருள்மிகு கற்கரை கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2017 பற்றிய விபரங்கள்

அருள்மிகு கற்கரை கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2017 பற்றிய விபரங்கள்

கொடியேற்றம் 29-07-2017 சனிக்கிழமை சப்பற திருவிழா 05-08-2017 சனிக்கிழமை தேர்த் திருவிழா 06-08-2017 ஞாயிற்றுக்கிழமை தீர்;த்த திருவிழா 07-08-2017 திங்கட்கிழமை

Read More

ஆஸ்துமா (Asthma) வைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை.

ஆஸ்துமா (Asthma) வைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை.

ஆஸ்துமா (Asthma) வைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை. உங்களுக்கு தொடர்ச்சியான இருமல், மூச்சு விடுவதில் சிரமம், மூச்சுவிடும் போது ஒலி ஏற்படுதல் (Wheezing) போன்றவற்றிற்கு அடிப்படையான காரணமாக அமைவது ஆஸ்துமா (ASthma) என்று சொல்லப்படும் ஒரு நிலை ஆகும். இது சுவாசக் குழாய்களைப் பாதிக்கும் ஒரு பிரச்சினையாகும். இது சுவாசக்குழாய்களின் உட்சுவரில் அலர்ச்சி / ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களால் உண்டாகும் தாக்கம் காரணமாக ஏற்படுகிறது. இதனால் சுவாசக்குழாய்களின் உட்சுவரின் சுற்றளவு குடைவடைகின்றது. இவ்வாறாக சுருக்கமடைந்த […]

Read More

எக்ஸிமாவை குணப்படுத்திக் கொள்ள…..

எக்ஸிமா என்பது தோலில் ஏற்படும் ஒரு வகையான ஒவ்வாமை நோயாகும். இது கிருமித் தொற்றால் ஏற்படும் நோய் அல்ல. இந்நோயானது சில நபர்களுக்கு மட்டுமே ஏற்படும். இது ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகளை உண்ணுவதாலும் இறப்பர் பாதணிகளை அணிதல் போன்றவற்றாலும் ஏற்படலாம். இந்நோயானது நபருக்கு நபர் வேறுபடும். சிலருக்கு இது வெறுமனே தோல் கடியை மட்டும் ஏற்படுத்தும். சிலருக்கு இது தோல்கடியுடன் சேர்த்து அந்தப் பகுதியில் நீர் போன்ற திரவம் வடிதலையும் ஏற்படுத்தும். இத்தோல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியர்கள் […]

Read More

முதுமையும் வியாதிகளும்

முதுமையும் வியாதிகளும்: குடும்பத்தினர் அனைவரின் அன்பையும் எதிர்பார்க்கும் காலம் இது. அது கிடைக்காதபோது, மனம் பாதிக்கப்பட்டு பல பிரச்சினைகள் ஏறப்டும். வயதாவதால், பார்வை மங்குதல், காது கேளாமை, தூக்கமின்மை, அடிக்கடி சிறுநீர் கழித்தல், மலச்சிக்கல், சோர்வு, கைகால் நடுக்கம்போன்றவை ஏற்படும்.இது மட்டுமல்ல. நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருந்தால், இதன் பாதிப்பால், பல நோய்கள் ஏற்படக்கூடும். ‘டிமென்ஷியா’ எனும் மறதி நோய்,  ‘பார்க்கின்சன்’ எனும் நடுக்கம், புற்று நோய், சிறுநீர் அடக்க முடியாமை, ஆணாக இருந்தால், […]

Read More

பிள்ளைகள் வளர்ச்சியில் பெற்றோர் – மனுவேந்தன்.

பிள்ளைகள் வளர்ச்சியில் பெற்றோர் – மனுவேந்தன்.

பிள்ளைகளின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்களிப்பு தொடர்பாக எமது சமுதாயத்தைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்றே நான் நான் என் இளமைக்காலம்,அதுவும் ஊரில் வாழ்ந்த காலம் வரையில் எண்ணிக்கொண்டிருந்தேன்.ஏனெனில் எமது தமிழ்ப் பெற்றோர்கள் என்றும் தம் பிள்ளைகளின் உடல்,கல்வி சம்பந்தமான விடயங்களில் ஏனைய சமுதாயங்களை விட, மிகவும் என்பதனைவிட அதிகம் கவனம் செலுத்துபவர்களாக வாழும் பழக்கம் உடையவர்களாக காணப்படுகிறார்கள் என்பது பெருமைக்குரிய விடயம்தான். இருந்தாலும், அன்றும், இன்றும் [புலம்பெயர்ந்து வளர்ந்த நாடுகளில் வாழ்வோர்கூட]பிள்ளைகளின் சில விடயங்களில் பெற்றோரின் […]

Read More

பிரபல எழுத்தாளர் குப்பிளான் ஐ.சண்முகனின் தாயார் காலமானார்

பிரபல எழுத்தாளர் குப்பிளான் ஐ.சண்முகனின் தாயார் காலமானார்

பிரபல எழுத்தாளர் குப்பிளான் ஐ.சண்முகனின் தாயார் காலமானார்   செம்மண்ணாம் குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி- ஐயாத்துரை இரத்தினம்மா தனது 93 ஆவது வயதில் கனடாவில் திங்கட்கிழமை அதிகாலை அந் நாட்டு நேரப்படி அதிகாலை-03 மணியளவில் காலமானார். அன்னார் திரு-திருமதி. சீனித்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், பிரபல வர்த்தகரும், சமூக சேவையாளருமான அமரர் தம்பையா ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும், திரு-நடராஜா, திரு -தங்கராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார். குப்பிளான் ஐ.சண்முகன் […]

Read More

உழவுப் பரம்பரைகள்

உழவுப் பரம்பரைகள்

தோள்மீது கலப்பை தூக்கி நெடுந்தூரம் போயுழுது புண் செய் நிலத்தையும் நன்செய் நிலமாக்கி நெற்கதிர் வாசனையை காதலித்து மகிழ்ந்திருந்தார்கள் நம் எள்ளுப் பரம்பரைகள்.. வயலில் கதிரறுத்து, களத்தில் கதிரடித்து சிதறும் தானியத்தை பறவை குடும்பங்கள் கொத்தி உண்ண அந்தக் காதலில் நெகிழ்ந்திருந்தார்கள் நம் கொள்ளுப் பரம்பரைகள்.. பேய்களையும் பூதங்களையும் கதைகளாக்கிச் சொன்னாலும் மனிதனோடு மனிதமாய் கால்நடை விலங்குகளிடமும் காதலோடு மகிழ்ந்தே இருந்தார்கள் பாட்டன் பரம்பரைகள் முன்னோர்கள் விட்டுப்போன விளைநில வெளிச்சங்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் விலை நில […]

Read More

அப்பாவின் மண்வெட்டி

அப்பாவின் மண்வெட்டி

மண்வெட்டியின்றி அப்பாவை தனியே பார்க்கமுடியாது. அப்பா வயலுக்குப்போகும் போதெல்லாம் அவர் சட்டையில்லாத வெறுந்தோளில் சாய்ந்தபடி கூடவே போகும் ஒரு குழந்தையைப்போல. அப்பாவுக்கும் இதற்குமான உறவை எங்கள் நிலம் காடு கரை என யாவும் அறியும். அவர் இதை காய்ந்தநிலத்தில் லாவகமாக சாய்த்து இறக்கும்போது பூமி இத்தனை இலகுவானதா எனத்தோன்றும். ஒருநாள் வாங்கிய விவசாயக் கடனுக்காக வளர்த்த மரத்திலே தொங்கிப்போனவரை புதைக்கக்கூட குழிதோண்டியது இதோ இந்த மண்வெட்டியால்தான். விவசாயக்குடும்பத்தின் கடைசி சாட்சியாய் ஒவ்வொரு வீட்டிலும் மிஞ்சிவிடுகிறது வெட்ட மண் […]

Read More

குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி- குலசிங்கம் யோகமலர் காலமானார்

குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி- குலசிங்கம் யோகமலர் காலமானார்

குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி- குலசிங்கம் யோகமலர் காலமானார்   குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி- குலசிங்கம் யோகமலர்(யோகம்) இன்று புதன்கிழமை(30-11-2016) முற்பகல்-11 மணியளவில் குப்பிளானிலுள்ள இல்லத்தில் இறைபதமடைந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த திருமதி-யோகமலர் அவர்கள் கடந்த சில நாட்களாக கடுமையான நோயின் தாக்கத்திற்கு ஆட்பட்டிருந்தார். அன்னாரது இறுதிக் கிரியைகள் நாளை வியாழக்கிழமை காலை-10 மணியளவில் குப்பிளான் தெற்குச் சிவபூமி ஆச்சிரமத்திற்கு அண்மையிலுள்ள அன்னாரது இல்லத்தில் இடம்பெற்றுப் பூதவுடல் தகனக் கிரியைகளுக்காகக் குப்பிளான் காடகடம்பை இந்துமயானத்திற்கு […]

Read More